பனியும் பெண் பாவையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனியும் பெண் பாவையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #30

தொலைதூரத்தில் இருப்போரை
தொலைபேசியில் அழைக்கலாம்
என்னோடு தொடர்ந்து வந்த
பனிபோர்வையை
எப்படி அழைப்பேன் நான்?
ஆதலால் வரவேற்கிறேன்,
பனிப்போர்வையில் ஒளிந்திருக்கும்
(பே)தை பெண் பாவை அவளை.

பனியும் பெண் பாவையும் #29

மார்கழி பனியின் மேல்
பதம் வைத்து
அழகாய் வரும் தை,
என் மை வரைந்த
பெண் பாவை . . !

பனியும் பெண் பாவையும் #28

விடியலுக்கு நகரும் பூமியில்
பனிதுளியோடு பயணித்த பாவை,
அடுத்து வரும் தை அழகை காண,
ஓசையற்ற தன் பாதச்சுவடுகளோடு
பயணித்தே செல்கிறாள்  - சலசலக்கும்
உதிர்ந்த இலைகளின் மத்தியில்.

பனியும் பெண் பாவையும் #27

பனித்துளியை தேடி
மகிழம் பூ மரத்தடியில் காத்திருந்தாள்
பெண் பாவை அவள்.
இலையில் நுனியிலிருந்து
தெறித்த பனிதுளியால்
மலர்ந்தது மகிழம் மலர் மட்டுமல்ல
 மகிழ்ச்சியும் தான் !

பனியும் பெண் பாவையும் #26

சுகித்த தருணங்கள் மறந்து
வெண்பனி போர்வையில்
சுகித்த தருணங்கள் மறந்து
பனித்துளியுடன்
பயணித்து வந்த பாதையை கண்டபடி
பறக்க தயாராகிறாள்
பெண் பாவை அவள் 

சனி, 10 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #25

அதிகாலை விழித்தெழும்
பெண்  பாவையை வரவேற்க
ஆவலாய் தவம் இருக்கும் பனித்துளி,
இனிஅவளுடன் ஓர் நேர்காணல்.

பனியும் பெண் பாவையும் #24

தன் கந்தர்வ கண்ணனிற்கென ஏங்கி
தனிமையில் தகித்த
பெண் பாவையின் தேக சூட்டில்
காய்ந்துகொண்டிருக்கிறது
அந்த புல்லின் நுனியில் உள்ள
ஓர் பனித்துளி . . .!

பனியும் பெண் பாவையும் #23

நிலவில்லா அமாவாசையிலும்
பூவிதழில் பனித்துளி
நிலவின் நினைவால்
பெண் பாவை சிந்திய
 கண் நீர் துளி !

பனியும் பெண் பாவையும் #22

நிலா முகமும் - குங்கும
பொட்டாய் சூரியனும்
நேர்காணும் நிமிடம் அதில்
வெண்மதி விட்ட பனியை
தாவியணைத்த செங்கதிரோனை
ரசித்தே முகம் சிவந்தாள்
பெண் பாவை அவள் . . !

புதன், 7 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #21

பாவைக்கும் பனித்துளிக்கும் ஊடல்
அதனால் தான்
பெண்ணவளின் பவழ இதழ் விட்டு
பூவிதழை அலங்கரித்ததோ பனி துளி..

பனியும் பெண் பாவையும் 20

நாளுக்கு நாள் 
நலிந்துபோகும் 
நிலவின் கண்ணீராய் 
பனித்துளி!
நெஞ்சம் பதைக்க 
காத்திருக்கும் 
பெண் பாவைக்கு  
கவிதை துளி!

பனியும் பெண் பாவையும் #19

எட்டா தூரத்தில் இருந்தாலும் - மனதுக்கு
எட்டிய தூரத்தில் எழும்பும் நினைவலைகள்
அதில் மூழ்கி போகும் பனித்துளியாய்
முத்தம் தேடும் முத்தான  பெண் பாவை அவள்!

வியாழன், 1 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #18

விடியற்காலை
கதிரவனின் கீற்றுகளுக்கு
இதழ் விரிக்கும் பனி தாங்கிய
வெண்மலர் போல்,
துள்ளி வந்த இளங்கன்றிற்கு
மடி விரித்தாள் பெண் பாவை அவள்!
அவள் - தேவகியோ யசோதையோ
அவள் - கோசலையோ கைகேயியோ!
அவள் - அம்மா ! 

செவ்வாய், 30 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #17

பிறை இல்லா நாளிலும்
அவள் நெஞ்சில்
பௌர்ணமி கோலம் !
அதனால் தான்
பகலவனை கண்ட பனி போல்
பெண் பாவை அவள்
உருகி நிற்கிறாளோ ?
அவள் - காந்தாரியோ மீராவோ!

பனியும் பெண் பாவையும் #16

வன்மையும் மென்மையுமாய்
வளைந்தோடிய நதியிடம்
கேட்டாள் பெண் பாவை இவள்,
வானந்தரதிலும் வன மத்தியிலும்
நீர் வளைந்து செல்கையிலே,
காண்பாயோ ஓர் பனித்துளியை ?

திங்கள், 29 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #15

பனி சிற்பமாய் உறைந்தாள்
பெண் பாவை அவள்
தன் கண்ணனின் குழலோசையை
காணிக்கையாய் கொண்ட
தன் காதல் மீது கர்வங்கொண்டு ! !

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #14

கோட்சே வாதம் பேசும் கன்னியாவான்களே
கவிதை வரைய தயாராகுங்கள்,
அதோ வருகிறாள்
தன்  காதலின் தூதாய்
பனித்துளியை வரித்த
பெண்பாவை!

பனியும் பெண் பாவையும் #13

தன் கருவின் புதயலேன
கண்டெடுத்த அவளின்
காந்தர்வ காயகனின்
கண் சிந்திய ஒரு துளியில்
பனிபோல் உறைந்து நின்றாள்
பெண் பாவை அவள் !

பனியும் பெண் பாவையும் #12

பனி போர்வைக்குள்
மறைந்தது  ஒரு துளி
கண்டெடுத்த பெண் பாவை
தந்தாள் ஒரு  சிரிப்பொலி !

பனியும் பெண் பாவையும் #11

கதிரவனின் அணைப்பில்
 கரைந்திடும் பனித்துளி
பேரிளம் பெண் பாவையே
அதை நீ கண்டு களி !