வெள்ளி, 31 டிசம்பர், 2010

உரிமையான உறவு...


வண்டோடு பூ மோதுவது
வெறி சண்டையா ??
கொண்ட உரிமையால் தானே?
நானும் அப்படிதான்..!
பனித்துளிக்கு,
சூரியனை கண்டு அச்சமா?
இல்லையடி நிச்சியமாய்.
பனித்துளி மேல்
கதிரவனுக்கு காதல்..
அதான் கண்ட உடன் 
அணைக்கிறான்.!
உன்னோடு நானும் அப்படிதான்..!

நிஜமா நிழலா.?



என் நிழலும்
என்னை பிரியும் போது,
நிஜமாக நீ வருவாய்
நான் எண்ண;
என் நிழலை போலவே,
என்னை நிர்கதியாய் விட்டு சென்றாயே..??
என் நிழலின் நிஜம் நீயா??

செவ்வாய், 7 டிசம்பர், 2010

யார் தாய் . . ?

நான் பிரசவத்தாய் - ஆனால்
கவிக்குழந்தையை நீ
எனக்குள் பிரசவித்தாய்...

வியாழன், 2 டிசம்பர், 2010

புதன், 1 டிசம்பர், 2010

தேவதை வாழும் உள்ளம்...

மகரந்த மழையில் 
தேவியிடம் மோனத்தில் 
சுகித்த தருணம் அதில் 
தேன் உண்ட வண்டாய் 
கிறங்கி அனுபவிக்கயிலே., 
பூமிக்கும் ஓர் தேவதை வேண்டும் என 
யோசித்த கடவுள், 
டிசம்பர் தேவதையாய், 
முதல் நாளிலே 
உன்னை பூமிக்கு அனுப்பி விட்டானோ..? 

வருடத்தில் 
ஒரு முறை வரும் 
இந்நாளுக்காக 
வருடம் முழுதும் 
காத்திருக்கிறேன் 
ஏனெனில், 
இன்று தேவதைகள் 
கொண்டாடும் தினம்... 


பிறந்த நாள் காணும் தோழி சோபியாவிற்கு...

செவ்வாய், 30 நவம்பர், 2010

கிழிந்த நெஞ்சம்...

நீ ரசிக்க மாட்டாய் என தெரிந்தும்
உனக்கு பிடித்த ஆடைகளை
தின தேர்தெடுக்கும் கரங்கள்,
நீ அழைக்க மாட்டாய் என தெரிந்தும்
அலை பேசியை எப்போதும்
ஆவலாய் பார்க்கும் கண்கள்,
நீ பேசமாட்டாய் என தெரிந்தும்
உன் வார்த்தைகள் மட்டுமே
கேட்க தவஞ்செய்யும் காது மடல்கள்,
நீ மட்டுமே என்னுள் என
உறுதி செய்யும் என் உடல் திசுக்கள்,
உன்னை மட்டுமே சுவாசிக்கும்
என் நாசியின் துளைகள்.,
உன்னை மட்டுமே காண
துடிக்கும் என் கரு விழிகள்,
நீ இருக்கும் இடத்திற்கு மட்டும்
வலிக்காது பயணிக்கும் என் கால்கள்,

இப்படி,
இப்படி என் அனைத்துக்கும்
எப்படி புரியவைக்கும்
என் மதியும் மனதும்,
உன் மனதில் நான் இல்லை என.?