திங்கள், 21 பிப்ரவரி, 2011

என்ன செய்வேன் நான்...


எப்படியேனும் 
உன் நினைவுகளை 
அழித்தெறிய தான் வேண்டும்... 
அனால், 
ஒன்றின் பின் ஒன்றாய், 
ஓராயிரம் எண்ணங்கள், 
உனக்காகவே,
 உன்னை பற்றியே....

சனி, 19 பிப்ரவரி, 2011

தொலைத்த நிமிடங்கள்..

கால் தடம் இல்லா
கடல் தீவுகளில் கலைத்து தேடுகிறேன் ,
வாழ்வு முழுதுமாய் 
என்னுடன் இருக்கும்
என நினைத்த பொற்குவியல்.
பூமியில் புதையலாய் புதைந்ததோ 
என பிளந்தும் பார்த்தேன்,
பிரபஞ்சம் அலைந்தும் பார்த்தேன்...
கடவுளின் காலை 
பற்றி கேட்டேன்,
கதறி கேட்டேன்..
கடைசியில்.,
பேழையில் பார்த்தேன்...
களவு போன என் புன்சிரிப்பை,
காணாது போன என் நிம்மதியை,
மனித இனம் 
மறந்து போனதென்னவோ உண்மைதான்!
அமைதியும்,
புன்னகையும்,
பொறுமையும்,
பேரானந்தமும்,!
என்று திரும்பும் மனிதம் நம்முள்..??



உழுகிறேன் , விழுகிறேன்...

கற்பனை குதிரை ஏறி,
கனவுகளி அழைத்துக்கொண்டு,
காற்றோடு விரைந்து சென்றேன்
கடிவாளம் இல்லாமல்...
சென்ற இடமெல்லாம் 
வறண்டு இருக்க,
எங்கு நோக்கினும்
கதவுகள் மூடி கிடக்க,
அங்கோ,
என் பூமி வற்றி கிடக்க,

தானியம் இன்றி
என் சிசு பட்டினி கிடக்க,
என் செய்வேன் நான்..?
விவசாய பூமியில்,
உழவனுக்கு சோறில்லை..!

என் சகியே...

மௌனத்தால் வதைத்தாய்
முன்பு என்னை.!
வார்த்தைகளால் சிதைக்கிறாய்
உன் மீதான என் மாற்று அபிப்ராயத்தை.!
வார்த்தைகளும் விசிதிதிரமானதேனோ.?
செவிதனில் உன் குரல் தீண்ட,
நாசியில் உன் வாசம் நெருட,
மனதோடு  நீ என்றும் 
குடிகொண்டு உள்ளாய்  என் சகியே..!


புதன், 16 பிப்ரவரி, 2011

கொடுமை காதல்


என்னை கொள்ளை அடித்தவன் அவன்.!
தனிமை சிறை எனக்கா.??
காதலில் கொடுமை...

சனி, 5 பிப்ரவரி, 2011

காலமான காலம் .


உன்னை பற்றிய எண்ணங்கள்
ஏதும் இல்லை.!
கேட்டதை தருவாயா;
சில சொற்கள் உதிர்பாயா;
இல்லை எதிர்பார்ப்புகள்,
உன்னிடமிருந்து.!
கனவுலகில் கூட
வேண்டாம் உன் பாராமுகம்!
தூக்கம் இல்லையடா எனக்கு!

உனக்காக,
உணர்வெழுப்பி,
உடைந்துருகி,
உயிர் கசிந்து
நான் எழுதும் காலம்,
காலமாகி,
காலம் பல கரைந்தோடி விட்டது.!