புதன், 26 மார்ச், 2014

அடை தோசையும் நானும்!

முழு நிலவு அம்மாவிற்கு மட்டுமே
பிஞ்சு போன பிறை நிலவு,
ஏன் எனக்கு மட்டும்??

ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . .

வாழையடி வாழையாய்,
கவிஞர்களின் வரிகளிளேனும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள்
முதிர் கன்னியவள்  . . .

கூடுகளோடு மரங்களை தேடி
அலையும் என் போன்ற
ஆண் பறவைகள்,
சிறகொடிக்கபடுங்கின்றன. . .

முதிர் காளைகள் என  எங்களுக்கும்
 வைக்கலாமே ஓர் முத்திரையை,
கிழிக்குமே அது அடாவடி என
புகழப்படும் எங்கள் முகத்திரையை . . .

பேரழகியை தான்
தேடுகிறேன் நான்,
தாயாக சேயாக,
என் தாரமாக, எனக்காக . . !

பெண்ணிற்கு பேரழகு 
மதிப்பதில் பங்கதிகம்,
சிந்தும் வெட்கத்தில்
இன்னும் கொஞ்சம் . .!

நளினமும் நாணமும்
மென்மையும் மேன்மையும்
அளவான கலவையில்,
பண்பை பறை சாற்றும். . .

பெண்னொருத்தி இருக்கின்றாலெனில்
எனை ஆளும் உரிமை மட்டுமல்ல
நேசத்தோடு சுவாசமும் தருவேன்,
என் அவள் ஜீவிப்பதர்க்கு . . . !

பாரதியே,
நீ கண்ட புதுமை பெண்களில்
என்றேனும் கண்டாயோ,
நான் தேடும் பேரழகியை . . ?

என் விழி சிந்தும் நீர்
கரை புரண்டே வழிந்தோடும்,
ஆங்காங்கே பெற்றோரின்
கண்ணீர் கால்வாயாய் சேர்ந்தோடும் . . !
 
கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .

காதல் அதில் பிரிந்தால்
பிரிந்தவளுக்கு ஒரு வலி இல்லை , 
பிரிந்தவளுக்கு ஒவ்வொன்றுமே வலி தான் . . .

நேற்று வரை என் அவன் இப்படி இல்லையே,
இன்றோ அவன் அப்படி இல்லை
மாற்றம் நேர்ந்தது அவனிடமா 
இல்லை என்னிடமா?
என் பார்வையிடமா?

இரு மனமாய் இருந்த வரை 
இது இல்லையே 
திருமண முதல் நாளில்
காதல் இல்லையே !

காதலெனில் அது 
கல்யாணத்தில் முடியுமென 
கேள்வி கொண்டேன்.
ஆனால் காதலே 
கல்யாணத்தின் பின் 
முடிந்து போகும் என கற்றும் கொண்டேன் !

வலிகளை விழிகள் சுமக்கத் தவறி
அணை கொண்ட இமைகள் உடைந்து போக,
கொட்டும் அருவியில் உலகம் தடுமாற
முடிவெடுத்தேன் அவனை கடந்து போக!

என்னுள் விதை கொண்ட அவனது உயிர்,
அவன் விதைத்த காதலை தர,
அவன் காதலை நினைத்து கரையும் தருணம்,
மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .

வியாழன், 5 டிசம்பர், 2013

என்னவென்று நான் சொல்ல. . .

கனத்த மனதுடன் இருந்த ஹ்ருதயம்
உந்தன் வார்த்தைகளில் சமணபட்டு போனதை
என்னவென்று நான் சொல்ல. . .

காதலாகி கசிந்துருகி கடைசியில்
வென்ற அன்பின் கதை - இதை
என்னவென்று நான் சொல்ல . . .

களைப்படைந்த கால்களோடு இருந்தும்
கருவிழி உந்தன் கதை தேடுவதை 
என்னவென்று நான் சொல்ல . . .

உந்தன் கதைகளை படிக்கையிலே,
மனதில் பரவும் இதத்தை,
என்னவென்று நான் சொல்ல . .

காவியமாய் நீங்கள் வடித்தபோழுதும்,
கதை என்று சாதாரணமாய் சொல்லும் என்னையே,
என்னவென்று நான் சொல்ல . . ?

எழுத்தரசியின் இளைய மக்களாய்,
மாலினியும் பிரபாவும் ஜனித்தை
கதையென்றா நான் சொல்ல ? ? ?
 — feeling wonderful with Muthulakshmi Raghavan.

எழுத்தரசி முத்துலட்சுமி ராகவன் அவர்களின் என்னவென்று நான் சொல்ல நாவல் படித்த பின்பு அவர்களுக்காக எழுதியது . . . 

சனி, 16 நவம்பர், 2013

எங்கள் பாரதத்தின் இரத்தினமே . . .

மட்டைபந்தாட்டதின் அட்டைபக்கம்
இன்றுடன் ஓய்வு பெற்று
அகற்றபடுகிறது . . . !

விறகுகட்டையையும் பந்தாடும் மட்டையாக்கும் 
அந்த துடிப்பிமிக்க கரங்கள்,
இன்று பிரியாவிடையில் கை அசைத்தது !

பதவிமமதையில்பாதை மாறும்
பாவிகள் மத்தியில் ,
புகழின் உச்சியிலும் சுத்தமாய் நின்றாய் . . .!

தந்தையின் கல்லறையில்
நீ சிந்திய கண்ணீர் காயும் முன்னே,
உன்மட்டையில் பட்ட பந்துகள் பாய்ந்தது முன்னே !

விருதுகள் உனக்கென படைக்கப்பட்டதா,
நீ மட்டை பந்திற்கென படைக்கப்பட்டாயா ,
இரண்டையும் பெருமைபடுத்திய இந்திய குடிமகனை,

கண்ணில் கண்டதையும்,
கற்பனை கொண்டதையும்,
விடைதேடி விழிதேழுகையிலே ,

விடைபெற்றேன் நான் என்று,
இரத்தின சுருக்கமாய் செய்தி தந்தாய்
இந்தியருக்கு மட்டுமின்றி உலகிற்கோர் அதிர்ச்சியாய் !

உந்தன் பெயரிலும் பிரமிப்பு ,
நீ இருக்கும் இடமெல்லாம் பூரிப்பு,
நீ காணும் களமெல்லாம் ஆர்பரிப்பு !

விளையாட்டில் வேர்த்த உன் உடல் காண்கையில்
உள்ளம் பதறினாலும் கர்வம் கொள்ளும்,
இவன் இந்தியத்தாயின் தவப்புதல்வன் என்று . . . !

இன்றோ, விளையாட்டின் இறுதியில்,
உன் கண்கள் வேர்கையிலே, எந்தன்
சப்தநாடிகளும் அதிர்ந்து ஒடுங்கியது !

கடவுளிற்கும் ஒய்வுண்டோ,
இனி, ஒளி தரும் பரபிரம்மமாய்,
மட்டைபந்தாட்ட மதத்தவர்களுக்கு நீ!

உன் காலத்தில் வழ்ந்தவள்
என்ற கர்வத்தை எம
தர்மனிடமும் நான் காட்டுவேன் . . !

நீ காட்டியது மாற்றம் அல்ல,
மறுமலர்ச்சி - மட்டைபந்தாட்டதின்
ஓர் மலர்ந்த சகாப்தம் !

உன் பிறந்தநாளை கொண்டாடிய எங்களுக்கு
அன்று உறைக்கவில்லையே
உனக்கு வயதாகிவிட்டதென?

மனமின்றி விடைக்கொடுக்கிறோம்,
நன்றி என்றொரு வார்த்தை கூறி,


எங்கள் பாரதத்தின் இரத்தினமே,
நன்றி என்றொரு வார்த்தை கூறி,
உன் சாதனைகளை குறைத்து அளவிடமுடியாமல் . . . !

கண்ணீரோடு,
உந்தன் எழிலின்
ஓர் நிழல் . . . !

#MissUSACHIN
 — with Srinivas Singer and 5 others.

வியாழன், 14 நவம்பர், 2013

எழுத்தரசிக்கென ஓர் எழுத்து !

எழுத்தரசியே ,
உம்மை கடவுள் எழுதிய நாள் இன்று 
நீ வளர்ந்தாய் தடைகளை வென்று!

சிரிக்க மறந்த மனதை,
சிந்திக்க வைத்தாய் !
துடிக்க மறந்த நெஞ்சை 
அன்பிலே நனைய வைத்"தாய்" !

காதலுடன் நேசம் கற்பித்தாய்,
பாசத்தை சுவாசம் செய்ய வைத்"தாய்"!
எண்ணங்களுக்கு எழுத்தூட்டினாய்,
எமக்குள் நம்ம்பிக்கையை துளிரவைத்"தாய்"!
என்னை நீர் பெறவிடில்லும்
நீரும் என் அன்னையே!

சீரிய சிந்தனையுடன் நற்பண்புடனும்
எழுத்தென்னும் ஆயுதத்தால்,
நல் எண்ணன்ங்கள் விதைத்து,
தீமையை கலை அறுத்து,
என்றும் நீவிர் வழிகாட்டி ,
வெற்றி படியேறி விண்ணுயர்ந்து,
வானிலும் மை இட்டு எழுதிட ,
வேண்டுகிறோம் இறையவனை . . . 


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !