திங்கள், 6 அக்டோபர், 2014

என் பேனா உயிரை மாய்துகொன்டது !

எழுதிடவேண்டும் எதையாவது,
மனதையா அறிவையா?
மனம் கனக்கிறது,
அறிவு கண்டிக்கிறது!

தேசத்தின் புற்றாய் 
வளர்ந்து செழிக்கும் ஊழலை 
தேசபற்றோடு 
அழிக்கும் காலம் எங்கு உள்ளது?

நெஞ்சின் குழியில் 
அடைந்து புதையுண்ட 
உணர்வுகள் பாரமாய் கொள்கிறது 
உயிர் வலி கொடுக்கின்றது !

மதியிடம் மனமோ கேட்கிறது,
"எழுத்தில் மட்டுமே இருக்கிறது 
உனக்கும் வீராப்பு - ஒளிகிறாய் தானே 
வேண்டாம் பொல்லாப்பு (என்று)"

வெட்கத்தில் 
கண்ணீர் சிந்திய என் பேனா 
காகித காதலியின் மேலிருந்து 
தன் உயிரை மாய்துகொன்டது !

புதன், 17 செப்டம்பர், 2014

நீ தான், நீயே தான் !

பறவையாய் தங்கிடுவேன்
பறந்து விரிந்த உன்னுள்,
கம்பளம் கேட்க எண்ணம் இல்லை,
நீ என்னை அணைக்கையில்
உன் மார்போடு
நீ என்னை அணைக்கையில் ! ! !

துயர் கொண்ட நெஞ்சம் அதை
தூய நேசத்துடன் கொஞ்சும்
தருணம் கண்டேன்
நீ தரும் முத்தத்தில்
என் நெற்றியில்
நீ தரும் முத்தத்தில் ! ! !

மனதின் அடிவாரத்தில் ஆரவாரம்
மெது மெதுவாய் அடங்கும்
அமைதியாய் கண்கள் உறங்கும்
உன் ஆராரோ கேட்கையில்
நெஞ்சின் பௌர்ணமி என
உன் ஆராரோ கேட்கையில் ! ! !

நீ
என் பிரபஞ்சத்தின் நாயகன்

நீ
நேசத்தின் தாயகம்

நீ
என் ஆரோகணம்

நீ தான்
நீயே தான்

இசை . . !

புதன், 3 செப்டம்பர், 2014

Happy Teachers' Day ! ! !

அனைத்தும் உண்டு


எங்கள் நினைவில்.

நாங்கள் உயர,

நீங்கள் குனிந்து நின்றது!





பசுக்கள் தம் ரத்தத்தை

பாலாய் தருகின்றன,

எங்கள் ஆசானே,

எங்களுக்கு கல்விப்பால் புகட்ட,

உங்கள் ரத்தம்

தொண்டை நீராய் வறண்டுசென்றது !





விஞ்ஞானிகள், மருத்துவர்கள்,

ஆய்வாளர்கள் - ஏதும் நாங்கள் இல்லை,

அன்று எங்களை உரு ஏற்றிவிட

நீங்கள் இல்லாவிடில் !





சர்வாதிகாரி என்றே சொல்லுவோம்

உங்கள் திட்டுகளையும்

பிரம்படிகளையும் வாங்கிய பின்பு!

இன்று உணர்ந்தோம்,

கல்லொன்று தடை செய்த போதும்

சிலை எழுப்பும் சிற்ப்பியாய்,

எம்மை விண்ணுயர செய்த நீர்,

ஆசிரியர் மட்டும் அல்ல,

ஆசானும் தான் !





இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .

வெள்ளி, 25 ஜூலை, 2014

சகோதரர்கள் . . . !

சகோதரனின் ஒவ்வொரு ரகசியமும் 
அறிந்தவர்கள் சகோதரிகள் தான்!

கடற் கரையில் விளையாடவோ,
கண்ணாமூச்சி ஆடிடவோ,
சைக்கிள் ஓட்டிடவோ,
பிஞ்சு விரல் பிடித்து 
தத்தி நடை பழகி,
பட்டு மேனி கொண்டு
தேவதையாய் தெரியும்  சகோதரிகளின் 
சுவாசமாய் சகோதரர்கள் . . .

பொறுப்பும் பண்பும், 
பாச பிணைப்பும்,
உணர்வுகளுக்கு உயிரளிக்கும் 
உன்னதர்களாய், 
நண்பனாய், தந்தையாய் 
சகோதரர்கள். . . 

பெற்றோர்களிடம் பெண் இவளின் 
கோரிக்கைகள் சுமக்கும் தபால்காரனாய்,
இவளுக்கென பெற்றோரையும்
கோபிக்கும் அக்னிதேவனாய்,
இவளுக்கென பாசபயிரிட்டு 
வேலி போல் தாங்கும் காவலனாய், 

சண்டை போட்டாலும் 
பின்பு சமாதனமானாலும்,
கடை கன்னி செல்கையில் 
தனக்கு என்பதை விட
தன் சகோதரிக்கென 
வாங்கும் சகோதரர்கள், 

சகோதரனில்லா வாழ்வின் 
கற்பனையும் பயங்கரம் பெண்ணிற்கு,
சகோதரி இல்லா வீடும் 
நிசப்தமான அவஸ்தை ஆணிற்கு !

மற்றவே முடியாத மரபாம் 
அவளின்  திருமணத்தின் பொழுது 
அழுதிடும் தந்தையர்கள் முன்,
தன கண்ணீரை மறைத்து 
சந்தோஷமாகவே நடிக்கின்றனர்கள்
சகோதரர்கள்  . . . !



எனக்கும் சகோதரத்துவம் கற்பித்த கைலாஷ், வேளு அண்ணா, ஐயுப், சுந்தர ராகவன் அண்ணா, சத்யா . . .  என நீளும் பட்டியலின் மக்களிற்காக.... !

செவ்வாய், 17 ஜூன், 2014

ஹைக்கூ

உங்கள் விழிநீரினால் 
என் நெற்றி பொட்டு அழிந்தது,
இராணுவ வீரரின் மனைவி.

இளம் விதவை

வாழும் பொழுது எனக்கு தராத பூமாலைகள்,
வீழ்ந்தபின் குவிந்தன என் கல்லறையில் 
இளம் விதவையின் கண்ணீர் .