ஞாயிறு, 7 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #1

நிலவாய் நீ தீண்டி
மின்னும் வைரமாய் நான்
வெண்மை தான் எங்கும்,
தூய்மையான நம் நேசம் போல்!
நீ
என் இரத்தின புதையல்!

வெள்ளி, 5 டிசம்பர், 2014

பௌர்ணமி #8

பிறை வளர்ந்து பெரிதாகி,
கருநீல வானில் இன்று
பௌர்ணமி நிலவானது போல்,
அறிமுகத்தில் தொடங்கி,
நட்பில் வளர்ந்து,
பிரிவில்லா பந்தமாய்
இன்று  நானும்நீயும்
- நெகிழவைத்துவிட்டாய்
ஒத்துக்கொள்கிறேன்
பௌர்ணமி நான்,
என் வானம் நீ !
​​​​ சுபம்



வியாழன், 4 டிசம்பர், 2014

பௌர்ணமி #7

நிலவு வளருமே என்றேன்!
அடி போடி ,
அல்லி போல் நானும் 
நீ வருவாய் எனநின்றிருந்தேன் 
பிறையாய் வளர்ந்து 
பின் காட்சி தரும் 
பௌர்ணமி நிலவை போல்,
குறுஞ்செய்திகளில் தொடங்கி, 
கை அணைப்பில் 
நிற்கிறாய் நீ என்றாய் ;
-  உருக்கி விட்டாய் !

பௌர்ணமி #6

பௌர்ணமி #6
சில தருணங்களில் முழுமையாய்,
எனதே எனதாய்,
சில தருணங்களில் பகைமையோடு,
எனக்கென்று இல்லாமல் தூரமாய் ,
புரிகிறதா நீயும்
அந்த பௌர்ணமி நிலவும்
 ஒன்று தான் - முடித்துவிட்டாய் !

புதன், 3 டிசம்பர், 2014

பௌர்ணமி #5

பௌர்ணமி கவிதைகள் #5

தனிமை இரவில் 
துணை என யாரும் இல்லை.
அவ்வபொழுது மட்டுமே 
நிழலாய் வரும் நிலவும்
அவ்வபொழுது மட்டுமே 
நிஜமாய் வரும் உன்னையும் தவிர..
 நீ எனக்கு பௌர்ணமி தான்!  

திங்கள், 1 டிசம்பர், 2014

பௌர்ணமி #4

பௌர்ணமி #4
பிறை கொண்ட  நிலவா
நான் உனக்கு - என்றேன்!
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தும்,
வானின் அரசி
என்றும் பௌர்ணமி நிலவு தான்
எனக்கு உன்னை போல
- முடித்து விட்டாய் !