செவ்வாய், 9 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #7

அஞ்சும் இருளில் இருந்து
என்னை மீட்ட மருந்து
நீ  - கோமேதகமாய்
சுடர்கொண்டு எனக்கு ஒளிதந்தாய் !
நீ
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #6

நீளமாய் செல்லும்
நமது பந்தத்தில்,
சாந்தமாய் நீ,
சுடராய் நான் !
ரதினச்சுருக்கமாய்,
நீலம் நீ!
நீ,
என் இரத்தின புதையல் !

திங்கள், 8 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #5

உன் மரகத முகம் காண்கையில்
கவலைகள் மறந்தோடி
நேசம் மட்டுமே  நிற்கின்றது!
நீ,
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #4

மனம் பற்றும் முன்னேற்றத்தை
பரிசளிக்கும் வைடூரியம் போல்,
என் மனம்நோக்கும் அமைதியையும்,
இதழ் தேடும் புன்னகையையும்
அழிக்காது தருகிறாய்!
நீ
என் இரத்தின புதையல் ! 

இரத்தின புதையல் #3

வானத்தில் சுகித்த
நிலா துண்டொன்று
முத்தாகி, எனது முத்தத்தில்
முக்தியடையுதோ ?
நீ
என் இரத்தின புதையல் 

இரத்தின புதையல் #2

உன் தங்க முகங்கண்டு
ப்ரமிப்பில் பித்தாகி,
சட்டென நின்ற இதயத்திடம்,
சூரியனுக்கு உகந்த
மாணிக்கம் போல்,
உனக்கு உகந்த
இரத்தின பந்தம் இதென்றேன் !
நீ
என் இரத்தின புதையல்!