சனி, 27 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #8

பள்ளிகொண்ட நிலவு
பதமாய் பறை சாற்றியது
பகலவன் வரும்முன்
பனி துளி தரிசிக்கும்,
பெண் பாவை இவளை !

வியாழன், 25 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #7

காற்றின் இசைக்கு
சங்கதிகள் எழுதி
கமகம் கொடுத்து தலையாட்டிய
பூ பாவையின் இதழில்
தெறித்து விழுந்தது பனித்துளி!

பனியும் பெண் பாவையும் #6

பூ மலர சிந்திய
வேர்வையாம் பனிதுளியின்
வாசத்தை சுவாசித்த
பெண் பாவை நினைத்து கொண்டாள்,
உழைப்பே உயர்வென்று !

பனியும் பெண் பாவையும் #5


தன்னை சூழ்ந்து கொண்ட தனிமையை 
மொழிபெயர்க்க எண்ணிய பாவை,
எழுத்தானியில் இட்டாள் 
மார்கழியின் பனித்துளியை!

பனியும் பெண் பாவையும் #4

கரைந்து போன 
பனித்துளியின் வாசத்தில்,
காந்தார பவை அவள்
கந்தர்வ கண்ணனை தேடினாள் !

பனியும் பெண் பாவையும் #3

மௌனத்தின் கதறலில் 
மெதுவாய் விழித்தது 
பாவையின் உள்ளம்,
பனி தாங்கிய கண்களோடு . . .!