செவ்வாய், 26 ஜூலை, 2016

பெயரில்லா பறவை . .

மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

விற்க பட்ட குஞ்சுகளுக்கு
மத்தியிலே பெயரில்லா பறவையாய்
புதரினுள் சிக்கி,
வலசை போய் தோற்று . .

பெயரில்லா பறவையாய் ,
என் குடில்  தேடி ,
இருட்டினுள் இடறி ,
இருட்கூண்டில் சவமாகி . . .

பின்பு
மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

தீ தந்த காயத்திற்கு,
என் சிறகை கொண்டு களிம்பு,
இங்கு நான் கொண்ட காயத்திற்கு,
ஏதாவது கிடப்பிலுண்டோ கொலைக்கருவிகலின்றி ? 

வியாழன், 21 ஜூலை, 2016

அழகிய பயணம் . .

ஒரு கூட்டு கிளிப்போல்
தவழ்ந்த பிள்ளையமுது,
பாத சுவடினை விட்டுசெல்ல,
மண் வாசனையாய்,
மற்றொரு பிள்ளையமுது நுகர,
அசையும் சிறகுகளை தேடி,
அழுகையிசை மறந்து,
நகையொலி ரசிக்க,
இனிதாய் ஒர் பயணம் . . .
அப்பிள்ளை கனியமுதின்,
தூறலான ஆசிகள்
நாசி நெருட,
கிண்ணங்களில் கனவுகள் சுமந்து
முடிவேதும் வேண்டாத,
அழகிய பயணம் . . . !

என் பேனா

எனக்கும் எழுத்துக்கும்
வெகு ஜென்ம பந்தம்.
கவிதைகளுக்கு கருவாகி,
எண்ணங்களை உருவாக்கி,
எழுத்துலகில் சஞ்சரிக்க 
என் பேனாயிருக்க,
என் உலகில்,
நான் . . ! 😊

பௌர்ணமி கவிதைகள்

மண்ணில் இருந்து நான்,
சிலந்தியாய் என் எண்ணங்கள் கொண்டு வலை பின்ன,
விண்ணில் இருந்து நீ,
நிதர்சனமாய் சிரிக்கிறாய் . . !
சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் . . !
நீ பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்‬

நிலையா மையுணராத வரை
பிறை நிலவும்
முழு நிலவின் வென் ஒளியும்
பேரழகு தான்...
நீ பௌர்ணமி . . !
‪#‎பௌர்ணமி கவிதைகள்‬

பௌர்ணமி கவிதைள்‬

சிந்தனையில் மூழ்கியிருக்கும்
சிதறிய மனதின்
சலனத்தை சன்னப்படுதியது
உந்தன் தரிசனம் . . 
நிலவொளியின் அழகாய்
உன் அரிசிபற்சிரிப்பு.
நீ பௌர்ணமி . . !
‪#‎பௌர்ணமிகவிதைள்‬