திங்கள், 30 மே, 2011

கற் கடவுளுக்கு ....


கடந்து வந்த காலங்களின்று 
கனவாய் மட்டுமே நீ!
கண் அறியா
சுவாசமாய் கலந்த என் நேசமே,
இன்றோ, 
நீ என் கவிதையல் மட்டுமே உயிராய்....
உருவத்தை போல், 
அவனுக்கு உள்ளமும் கல்லோ?
அப்படியேனும் இருந்திருந்தால்,
எங்கள் கண்ணீர் 
அந்த கற்கடவுளை கரைத்திருக்குமே?
இனி எங்கு கண்டறிவேன் நான்  
நட்பின் இலக்கணமாய்,
உன் போல் ஒரு காவியத்தை.....

தோழியின் சரிதா கேடியா வின் மறைவிற்கு.,

சனி, 28 மே, 2011

எதிர்பார்ப்பாய்....

உன் மீதான காதலின் 
ரிஷிமுலம் தேடி, 
நான் களைத்துவிட்டேன்
காதலுக்கு காரணங்களுண்டு.
எதிர்பார்பில்லா அன்பை
அது வெளிப்படும் தருணம்,
காரணங்களை கண்டறிய முடிவதிலையே, 
ஏன் ..?
இருந்தும் நான் எதிர்பார்கிறேன்
உன் கண்ணீர்
என் விழிதனில் வழியவும்,
என் புன்னகை,
உன் இதழ்களில் கசியவும்...!

பிரியம்



கம்பன் வீட்டு 
கட்டு தறியும்  கவிபாடும்.
என்னை விட்டு செல்லும்
என் உயிரின் துளிகள்
பிரியத்தை பேசுமா...?
பிரிந்த பிரியத்துடன்,
பிரியத்துக்கு ஏங்குபவள்....

சனி, 19 மார்ச், 2011

பேசுகிறேன், பேசுகிறேன், உன் ஜீவன் பேசுகிறேன்..!

மனிதன் படைக்க தொடங்கிவிட்டான்
இறைவன் அதை நிறுத்தி விட்டான்.
முடிவு அவன் கையில்..!
~~ அழிந்து வரும் பூமி.


என் பொறுமையை கலைத்த 
அவனுக்கு ஏது மன்னிப்பு?
வெடிப்பேன் நானும்..!
~~ பூகம்பம்.

நானும் சேர்கிறேன் உன்னோடு,
சீரும் ஆழ்கடல்,
இனி ஆவதற்கில்லை..!
~~ சுனாமி.


விதைத்தது யாரோ?
நான் இங்கு பூத்துள்ளேன்,
சிதறடிக்க.!
~~ எரிமலை.


மனிதா! 
என்னை சீரழிக்காதே.
சிதைவது நீ தான்!
~~ இயற்கை.




நிதானம்


என்னவனுக்கு பொறுமை உண்டு.
அதனால் தான்,
என் கல்லறைக்கு வந்து 
தன காதலை உரைத்தானோ?

சொல்ல மறந்த நிஜம் ...


இன்றுவரை,
அவனை நேசிக்கிறேன் என 
யாருக்கும் தெரியாது!


கரம் பற்றிய பின்னரே 
காதல் கூற நினைத்தேன்!
அதனால் தான் சொல்லவில்லை,
உன்னை நான்,
நேசிக்கிறேன் என்று.!
அறியபடா ஆயிரம் வேதனைகளில்
இதுவும் ஒன்றாய்..!