வெள்ளி, 25 ஜூலை, 2014

சகோதரர்கள் . . . !

சகோதரனின் ஒவ்வொரு ரகசியமும் 
அறிந்தவர்கள் சகோதரிகள் தான்!

கடற் கரையில் விளையாடவோ,
கண்ணாமூச்சி ஆடிடவோ,
சைக்கிள் ஓட்டிடவோ,
பிஞ்சு விரல் பிடித்து 
தத்தி நடை பழகி,
பட்டு மேனி கொண்டு
தேவதையாய் தெரியும்  சகோதரிகளின் 
சுவாசமாய் சகோதரர்கள் . . .

பொறுப்பும் பண்பும், 
பாச பிணைப்பும்,
உணர்வுகளுக்கு உயிரளிக்கும் 
உன்னதர்களாய், 
நண்பனாய், தந்தையாய் 
சகோதரர்கள். . . 

பெற்றோர்களிடம் பெண் இவளின் 
கோரிக்கைகள் சுமக்கும் தபால்காரனாய்,
இவளுக்கென பெற்றோரையும்
கோபிக்கும் அக்னிதேவனாய்,
இவளுக்கென பாசபயிரிட்டு 
வேலி போல் தாங்கும் காவலனாய், 

சண்டை போட்டாலும் 
பின்பு சமாதனமானாலும்,
கடை கன்னி செல்கையில் 
தனக்கு என்பதை விட
தன் சகோதரிக்கென 
வாங்கும் சகோதரர்கள், 

சகோதரனில்லா வாழ்வின் 
கற்பனையும் பயங்கரம் பெண்ணிற்கு,
சகோதரி இல்லா வீடும் 
நிசப்தமான அவஸ்தை ஆணிற்கு !

மற்றவே முடியாத மரபாம் 
அவளின்  திருமணத்தின் பொழுது 
அழுதிடும் தந்தையர்கள் முன்,
தன கண்ணீரை மறைத்து 
சந்தோஷமாகவே நடிக்கின்றனர்கள்
சகோதரர்கள்  . . . !



எனக்கும் சகோதரத்துவம் கற்பித்த கைலாஷ், வேளு அண்ணா, ஐயுப், சுந்தர ராகவன் அண்ணா, சத்யா . . .  என நீளும் பட்டியலின் மக்களிற்காக.... !

செவ்வாய், 17 ஜூன், 2014

ஹைக்கூ

உங்கள் விழிநீரினால் 
என் நெற்றி பொட்டு அழிந்தது,
இராணுவ வீரரின் மனைவி.

இளம் விதவை

வாழும் பொழுது எனக்கு தராத பூமாலைகள்,
வீழ்ந்தபின் குவிந்தன என் கல்லறையில் 
இளம் விதவையின் கண்ணீர் .

புதன், 9 ஏப்ரல், 2014

ஹைக்கூ

உடல் புழுக்கம் - வியர்வை
மனபுழுக்கம் - கண்ணீர்
நீர் இன்றி அமையாது உலகு ! 

புதன், 26 மார்ச், 2014

ஸுதர்சனதிர்கோர் ஸாசனம் . . .

பறவைகளாய் பறந்து கொண்டிருக்கும்
இந்த கெவின்கேர் வாழ்விலே,
ஏதோர் கிளையில், இளைப்பாற அமருகையில்,
நிதானமாய் தீண்டும் எங்கள் செவியை
உந்தன் சிரிப்பு ஒலி . . !

தும்பிகளும் தோற்கும் உந்தன் சுருசுருப்பிலே,
கதிரவனும் கனிவான் உந்தன் பரபரப்பிலே,
விண்மீகன்களும் இடம் கேட்கும் உந்தன் விழிதனிலே,
ஐன்ஸ்டெனும் கடன் கேட்பர் உந்தன் அறிவதனிலே,
பட்டாம்பூச்சியும் பரிசலிக்கும் தன் சிறகதனையே . . !



வானம் தொடும் வரம் பெற்றோனே,
எல்லோர்க்கும் இனியவனாய்,
எந்நாளும் இளையவனாய்,
எழிலேனவே இமயமாய்
குறைவில்லா புகழோடும்,
குறைவற்ற குணத்தோடும்,

மாசற்ற மனதோடும்,
மறவாது எங்கள் நினைவோடும்,
மாறா புன்னகை கொண்டு,
தினம் பூக்கும் புதுமலர் போல்,
என்றென்றும் வாடதிருக்க,
வேண்டுகிறோம் இறையவனை . . !

உந்தன் வாழ்க்கை பறவையின்
ஓர் சிறகின் இறகுகள்,

TO SS, Our Team mate on his fare well ! :-) 31s Jan 2014. . . 



ருபியானோடு சனீரா . .

பாரிஸ் நகரில் பரிவாய் பார்த்தவள்
சைதையில் சற்றே  சேட்டையாய்  சிரித்தவன்,
கொல்லத்தில் கொள்ளை அழகோடு,
நாணி சிவக்கிறார்கள் மணகோலத்தில் நம் முன்னே !

விழிகளில்  கண்ட கனவாய் -  காதல்,
விழித்த உடன் நனவாய், திருமணத்தில்.
மொட்டுக்களை ரசித்த மனதிற்கு சந்தோஷ புதுமலராய்,
நாளைய கனவுகளில் நம்பிக்கை காண இருமனம் இணைகிறது!
திங்களின் எழில் கொண்ட தேவதையாம் இவள்,
ஆதவன் ஒளிகொண்ட இசை வேந்தனாம் இவன்
இருவர் கரங்கொண்டு இல்லறத்தேர் நல்லறத்தோடு
இனிதாய் இழுத்திடவே தொடங்குமோர்  பயணம்!

ஆன்றோர் நாள் குறித்து உமை சேர்க்க,
சொந்தங்கள் கூடிவந்து பெருமை கூட்ட  
தேவர்கள் ஆயிரம் பூச்சொரிய 
ஓருயிராய், ஆருயிராய், இணையாய்  இருவரும் !
விண்மீண்கள் கண்ணசைவில் புதுகவிதை பாடிடவே,
இசையோடு நாதம் சேர்ந்து தேனமுது உதித்திடவே,
காற்றோடு மேகங்கள் இன்ப  மழைச்சாரல் தூவிடவே,
ருபியானோடு சனீரா காதல் பாட்டிசைத்திடவே !

இசையன்னை மடியில் இளஞ்சிங்கமாய் உறுமுமிவனை
தன்மடி தாங்கும் அன்னையாய் இவள் இருக்க,
பிரெஞ்சு நாட்டின் அழகு தேவதையாய் இருப்பவளை,
தன்நெஞ்சில் சுகமாய் தாங்கும் தோழனாய் இவன்!
இவள்பாதியிவன்பாதி என்றுறைக்கும் மணவாழ்வில் 
இல்லறத்தின் இலக்கணமாய் ஜெயமளித்துஅன்போடு,
மனம் நிறைக்கும் மழலைச் செல்வங்களோடும் 

அறிவோடும் அன்போடும்ஆண்டாண்டாய் நிறைவாய் வாழியவே !

என்  அக்காவின் திருமணத்திற்காக :-) :-) :-)