வெள்ளி, 25 ஜூலை, 2014

சகோதரர்கள் . . . !

சகோதரனின் ஒவ்வொரு ரகசியமும் 
அறிந்தவர்கள் சகோதரிகள் தான்!

கடற் கரையில் விளையாடவோ,
கண்ணாமூச்சி ஆடிடவோ,
சைக்கிள் ஓட்டிடவோ,
பிஞ்சு விரல் பிடித்து 
தத்தி நடை பழகி,
பட்டு மேனி கொண்டு
தேவதையாய் தெரியும்  சகோதரிகளின் 
சுவாசமாய் சகோதரர்கள் . . .

பொறுப்பும் பண்பும், 
பாச பிணைப்பும்,
உணர்வுகளுக்கு உயிரளிக்கும் 
உன்னதர்களாய், 
நண்பனாய், தந்தையாய் 
சகோதரர்கள். . . 

பெற்றோர்களிடம் பெண் இவளின் 
கோரிக்கைகள் சுமக்கும் தபால்காரனாய்,
இவளுக்கென பெற்றோரையும்
கோபிக்கும் அக்னிதேவனாய்,
இவளுக்கென பாசபயிரிட்டு 
வேலி போல் தாங்கும் காவலனாய், 

சண்டை போட்டாலும் 
பின்பு சமாதனமானாலும்,
கடை கன்னி செல்கையில் 
தனக்கு என்பதை விட
தன் சகோதரிக்கென 
வாங்கும் சகோதரர்கள், 

சகோதரனில்லா வாழ்வின் 
கற்பனையும் பயங்கரம் பெண்ணிற்கு,
சகோதரி இல்லா வீடும் 
நிசப்தமான அவஸ்தை ஆணிற்கு !

மற்றவே முடியாத மரபாம் 
அவளின்  திருமணத்தின் பொழுது 
அழுதிடும் தந்தையர்கள் முன்,
தன கண்ணீரை மறைத்து 
சந்தோஷமாகவே நடிக்கின்றனர்கள்
சகோதரர்கள்  . . . !



எனக்கும் சகோதரத்துவம் கற்பித்த கைலாஷ், வேளு அண்ணா, ஐயுப், சுந்தர ராகவன் அண்ணா, சத்யா . . .  என நீளும் பட்டியலின் மக்களிற்காக.... !