வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

இரவில் மடியில் 
துடிக்கும் நட்சத்திரங்கள் போல்
என் இதயம் துடிக்க,
ஆழ்கடலில் மூழ்கிய
முழு நிலவாய்,
உன் நினைவு . .
நீ பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்

ஆக்ரோஷமான ஆதவனே
என்னையும் நிலவையும் 
நடு நின்று பிரிப்பவன். . .
அவனால் எரிந்த முழு 
நிலவாய் நீயும் 
உன் காரிருள்
நிழலாய் நானும் . . .
நீ என் பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்

ஒற்றை நிலவாய்,
வான வீதியில்,
வெளிச்சம் புகட்ட
உன் பிறப்பு…
தேய்ந்தும் மலர்ந்தும்
தோற்றமளிப்பது
உன் சிறப்பு…
உனை காண
இனியுமில்லை
எனக்கொரு எதிர்ப்பு…
நீ என் பௌர்ணமி…

பௌர்ணமி கவிதைகள்

மண்ணில் இருந்து நான்,
சிலந்தியாய் என் எண்ணங்கள் கொண்டு வலை பின்ன,
விண்ணில் இருந்து நீ,
நிதர்சனமாய் சிரிக்கிறாய் . . !
சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் . . !
நீ பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்

தனிமைக்கு பழகிய என்னை ,
குடும்பமாய் அணைத்து ,
இருளில் சிரித்த முகமாய்,
தூரத்தில் ஓர் நிலா மனிதன் ,
என் பிம்பமாய்,
சிரிப்பில் சேர்ந்து
கண்ணீரில் கரைந்து ,
ஆறுதல் விரிவடைவதுமாய் . . .
நீ பௌர்ணமி !

பௌர்ணமி கவிதைகள்

காரிருள் விண்ணில் ,
தொலை தூர தொடுவானில்,
மிளிர்கிறாய்,
ஒளிர்கிறாய் . !
என்றேனும் ஓர் நாளெனிலும் ,
என் மௌன உலகில் ,
ஒளிர்வூட்டி
குளிர்விக்கிறாய் . . !
சிலுசிலுப்பேற்றி ,
கூறாமல் கூறுகிறாய் ,
தொலைவாய் நிலவாய்
இருந்தும் அணைப்பாய் என . . !
நீ என் பிள்ளை நிலா . . !

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பௌர்ணமிகவிதைகள்.

உன்னை நோக்கி தவழ்ந்து வருகையில்
உடைந்த என் முழன் காலின் வலியை
தவிர வேறில்லை தர
என்றே நினைத்தேன்.
வெண்கிரணங்கொண்டு என் வெறுமை அள்ளிக்கொண்டு, 
நீ முடிச்சிட்டாய் முத்தாய்ப்பாய்.
நானே எழுத வேண்டும்.
உன் பிரகாசங்கொண்டு
அத்துனையும்
பிரகாசமாய்
நானே எழுத வேண்டும்.
ஏனெனில்,
நீ என் பௌர்ணமி...
#பௌர்ணமிகவிதைகள்.

திங்கள், 5 செப்டம்பர், 2016

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

விரலுக்கு பேனா பிடிக்கும் 
வித்தை கற்பித்தீர் ,
விழிக்கு வார்த்தை படிக்க 
பாடம் எடுத்தீர் ,
ஆராய்ந்து அறிவினை வளர்க்க 
அறம் கூட்டி கற்பித்தீர் ,
அன்போடு பண்பையும் பிணைந்து 
ஆழ் அறிவினை புகட்டினீர் .
வளமான வாழ்க்கை பாதையை
வாஞ்சையோடு காண்பித்தீர் ,
அறப்பணியாம் ஆசிரிய பணி 
அதற்கென தங்களை அர்ப்பணித்தீர் ! 
உங்களால் வளர்ந்தோம்,
உங்களுடன் வளர்ந்தோம்,
உங்களுக்காய் இன்றொரு வாழ்த்து ,
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !