புதன், 31 ஜூலை, 2013

ஒரே வெள்ளியில் விடிவெள்ளியாய் . . .

கோஷாலையின் நாயகனாம்
அழகு சிறுவன் கண்ணபிரானுக்கு
மார்கழி மாதம்,
ஏழை தேவனாய்
மாட்டின் கொட்டகையில்
பிறந்த ஏசு கிறிஸ்துவிற்கு
டிசம்பர் !
எளிமை உருவாய் வாழ்ந்த நபிகள் நாயகம்(சல்)
நோம்பிற்கு உகந்ததாய் கருதும் ரமதான்,
நம் சான்றோர்கள், சர்வ லோக நாயகியை
குளிர்விக்கும் ஆடி மாதமாய்!
புனித ராமதானும் திருநாளும்  ,
அன்னை ஆதி பராசக்திக்கு வளைகாப்பும்
ஒரே வெள்ளியில்!
விடிவெள்ளியாய்!
இனியுமா வேண்டும் மத கலவரங்கள்?

வியாழன், 18 ஜூலை, 2013

இறை கவியே ! !

தேவலோகதினற்கு
தேனமுதம் கேட்க
ஆசைதோன்றிவிட்டது போலும்
அதுவும், தமிழ் இசை கானங்கள்!

முதலில் அழைத்து கொண்டனர்,
இசை சக்ரவர்த்தியை,
அண்ணல் ராமமூர்த்தி அவரை!
பின்பு தேன்குரல் எடுத்து
தெவிட்டாகானம் பாடும்
ஸ்ரிநிவசரையும் சௌந்தர ராஜரையும்!

தேவர்களே,
உமக்கு
திகட்டாநெல்லைத்  தமிழ் பேசும்
எமது வாலிப கவிஞரும் வேண்டுமோ  ஓய் ?

எங்கள் பிரார்த்தனைகள்
அவரின் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனைகள்
உமக்கு வந்தடையும் முன்,
அவர் உம் பாதம் கலந்தாரோ ?

தமிழ் தாயின்
தவ புதல்வரே,
தமிழுக்கென
பாட்டெழுதியது
அறுபது ஆண்டுகளாய்
 உமது பேனா !

நெடு தூர பயணங்களிலும்,
நித்திரை இல்ல இரவுகளிலும்,
சாய்ந்து அழ
தோள் தேடும் தருணங்களிலும்,
சிரிப்பலைகள் சிதறவிடும் நேரங்களிலும்,
உணர்ந்ததுண்டு
வாலியின் மை கொண்ட வலிமையை
அதன் இளமையை,
என்றென்றும் இனிமையாய்!
இனி எப்பிறவியில் காண்போம்?

வாலிப கவிஞன் வாலியே,
உம்மிடத்தில் வாய் கொடுதோர்
என்று காலியே !
இருந்தும் நீர் எம் மனபாதிரங்களை
நிரப்பும் ஆழியே !

வலி தாண்டி,
நீர் தமிழ் தீண்டி,
உலா வார காத்துகிடந்தோம்
எல்லோரையும் காக்க வைத்தாயே நிரந்தரமாய் ?

வாலிப கவியே,
எமது வாலியே,
நீர் வலி நீத்து
வலிய வருவீர்
என எண்ணினோமே,
வலி தந்து நீத்ததேன் உமதுயிரை ?

யார் பிடிப்பார்
உமது சிம்மாசனத்தை,
சிங்கமே துயில் கொண்ட போது,
"அழகிய" மனிதராய் நீர் "சிங்கார்"+இ த்த
அரிதொரு சிம்மாசனத்தை  ?

 தமிழ்இனத்தின் தலைவனுள்
தலையானவர்  நீர்
இனி தீர்க்க ஒளியாய்
எம்மை வழிநடத்தி செல்ல,
ஜோதியாய் மின்ன போய்விட்டீர்  !

நெஞ்சம் கனக்கிறது,
கண்கள் கரிக்கிறது !
இறையிடம் சென்றடைந்த
உமது ஆன்மாவை என்றும்
எம் அருகில் உணர்வோமே யாம் !

இறை கவியே,
தெய்வ புலவரே,
பிழை இருந்தேனும்,
பொறுத்து ஏற்றுகொள்ளும் ,
எமது கண்ணீர் விட்டேழுதிய கவிதாஞ்சலியை !

இவண் ,
உமது பிரிவால் வாடி துயர் கொள்ளும்
பலரின் உணர்வலைகளில் ஓர் அலை !