வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

காதலுடன்...

ரகசியமாய்  அடை காத்த  கனவுகளோடு,
எவரும் அறியா பூபெய்திய காதலோடு,
வெட்க படாமல் வெளியேறும் கண்ணீரோடு
மறைத்து வைத்த மாசற்ற நேசத்தோடு,
ஓர் நாள் உன்னை சந்திப்பேன்..
அப்பொழுதும்,
என்னை யாரென சிந்திப்பாயா;
அல்ல,
என் முட்டாள்தனத்தை நிந்திப்பாயா?


புதைந்த உணர்வுகள்...!

தொலைந்த காகிதம்
 மீண்டும் கிடைத்தாற்போல்
 ஓர் இன்பம்.!
நண்பனுடன்
 செலவழித்த நாட்கள் 
மீண்டும் மனகண்ணில்.!
அனால் 
அவன் இன்றி அவ்விடங்களோ
 வெறும் கல்லும் மண்ணுமாய்....!

உணர்ந்து கொள்ளேன்...


பிரிந்து போக சொல்லாதே 
என் நிழல் கூட
 உன் உருவில் தான் 
எனக்கு தெரிகிறது!
என் கனவாவது 
உன்னை சுற்றி வரட்டுமே...

நீ இறக்கவில்லை நண்பா....

உன் தோல் வளைவில் 
மறைந்து நின்று 
என்னை பெண் பார்க்க வருபவர்களை
பார்க்க ஆசை பட்டேன்.
அனால்,
திரும்பாத ஊருக்கு
 நீ சென்று, 
யாரும் அறியாது
 என் பின்னே நின்று
 வந்தவர்களை பிடித்திருக்கு
சொல்லேண்டி என்கிறாய்
 என் மனதிற்கு மட்டும் கேட்கும் 
குரல் ஓசையில்...

நட்பு

என்னுடன் சேர்ந்து 
நீயும் சுத்துறியாம்...
அம்மா சொல்றாங்க.
அடங்கொய்யாலே,,,!
நா சுத்துறதுக்கும் 
அச்சாணி நீ தானடா தோழா....

ஆணினமோ...?

என் கவலை தின்ன மனமோ,
அஜீரணத்தால் அவதி படுகிறது.
திங்க வைத்த இனமோ,
ஆடவர்கள் என்று மார் தட்டுகிறது....

கண்ணீரால் கழுவட்டுமோ ?

புன்னகை மட்டுமே 
சிந்த தெரிந்த என் மனம்,
முதல் முறையாய் 
கண்ணீரையும் சிந்துயது. 
பொன் நகையான,
பொன் தாலியை 
அவர் இன்னொருவள் கழுத்தில் 
அணிவித்த பொழுது....

தாய்மை


என் அவரின் 
தோலில் சாய்ந்து
 கை கோர்த்து 
நடக்கும் பொது தான் 
நானும் உனர்ந்தேன் 
தாய்மை என்பது 
பெண்களுகூரிய குணம் மட்டுமல்ல!
உண்மை நேசம் கொண்ட 
ஆண்களுக்கும் உண்டு என....