வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

நட்புக்கள்

தவழும் வயது முதல் துணையாய்,
என்றுமே அன்பு வற்றாத சுனையாய் ,
இளஞ்சூடு தரும் இதமாய்,
இனிப்பின் பதமாய்,
வழிந்தோடும் நீர் அலையாய்,
பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்,
நெஞ்சோடு கலர்ந்திட்ட நேசமாய்,
நாசி நுகரும் சுவாசமாய்,
என்னுள் நிறைந்த 
எனதாருயிர் நட்புக்களே ,
வாழ்த்துக்கள் !


இது அன்பின் காலம் . . .

வானம் அழகாய் மாறிற்று - விண்மீன்களும் 
வர்ண ஜாலமாய் ஒளிர்ந்தன ,
நிலவும் குளிர்ந்து,
பஷு பட்சிகள் அன்பாய் சிரித்தன . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

எங்கோ பிறந்தோம்,
எங்கோ வளர்ந்தோம்,
எனிலும்,
நேசம் கொட்டும் சகோதர சகோதரிகளாய் . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

உனக்கென நானும்,
எனக்கென நீயும்,
பாசம் கொண்டு வாழ்வோம் 
இப்புவிதனிலே, புனிதமாய் . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

என்றுமே உனக்காய் 
பரம்பொருளிடம் என் வேண்டுதல்,
சகோதரனே நீ இன்புற்று இருக்க,
இதமாய் எழுதுகிறேன் உனக்காக . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

பிறந்த நாள் மடல் !

வாழ ,கிடைத்த பயன் ,
நான் அல்ல நாம் வாழ,
என்று உணர்த்துபவர் நீர்!

நீரும்  சிரித்து,
எம்மையும் சிரிக்க வைக்கும் 
வித்தாக கலைஞர் நீர் !

சீரியதாய், வீரியமாய்,
பற்பல கற்பனைக்கு 
வித்தாகும் வித்துவான் நீர் !

வருடங்கள் வந்து போனதில்,
இழுக்கில்லாத செயல்கள் 
மட்டுமே செய்யும் கனவான் நீர் !

அன்பும் பண்பும் கலந்த 
அழகும் அடக்கமும் பொங்கும்,
கலை வள்ளல் நீர் !

உள்ளங்கள் உடையாதிருக்க,
உந்தன் நேரங்களை எமக்களிக்கும்
உன்னத  உத்தமர் நீர்!

உச்சிதனில் இருப்பினும்,
மனித நேயத்தை 
மறவா மனிதர் நீர்!

உதடுகளில் புன்னகை உறைய,
உள்ளத்தினில் அமைதி நிறைய,
உம்மை தேடி இன்பங்கள் விறைய,
உமது சோகங்கள் அதில் மறைய ,
வேண்டிகிறோம் இறையவனை ! !

வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு . . . . 


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீ என்பதும் நான் என்பதும் . . .

காதலனாய் இருந்து 
பதவி இறக்கம் பெற்ற 
கணவன் மார்கள் ஏராளம்!
நீயும் நானும் நாம் ஆகும் பொழுது, 
புல்வெளியிலும் பனித்துளி பிறக்கும் 
என்றார்கள் அவர்கள் ,
கண்களிலும் கண்ணீர் துளியும் வற்றாது 
என்பேன் நான்!
நாம் என்ற பின்பு 
உதடுகளும் மட்டுமே ஒட்டியது !
மனம் திக்குகள் எட்டில் 
தனிமையை எட்டியது !
வீட்டில் விட்டு சென்ற சண்டையை தொடரவே 
இன்றளவும் தேடுகின்றனர் தம்பதியர்
தம் அலைபேசிகளை!
பூங்காவில் விட்டுசென்ற மௌனத்தை 
தொடர நினைத்த காலம் மறந்தனவாய்!