வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

என் அன்பு சகோதரனுக்கு....

யுகங்கள் பல கழிந்தாலும்
குறையாது உன் மீதான என் நேசம்;
என் உயிர் அடங்கிய பின்பும் 
உன் உள்ளத்தில் உணர்வாய் என்னை.!
                               

அண்ணன் என்ற ஆணின் அருமையை
உணர்தேன் உன் அருகாமையில்..
வருடங்கள் உதிர்ந்தாலும்,
வாழ்கையில் உயர்ந்தாலும்,
என்றும் உன்னை நான் மறவேன்,..!

அன்பாய் ஓர் பார்வை,
ஆசையாய் ஓர் வார்த்தை,
இம்சையாய் சில செயல்,
இப்படி உண்டு பல,
என்னிடம் உனக்காக..!

எனக்கே எனக்காய்,
இதோ ஓர் கவிதை.;
என் ஆன்மாவையும் 
தீண்டிய ஓர் ஆடவனுக்காக..
எனக்கும் உள்ளான் 
ஓர் அண்ணன் என 
மார் தட்டுவேன் இனி.!

சரியா தவறா
தெரியவில்லை,
ஆனாலும்


சம்மதிக்கிறது மனம்,

புண்ணியம் செய்தேனோ
 இப்புவிதனில் பிறக்க!
தவம் தான் செய்திருப்பேன்,
உன்னை அண்ணனாய் பெற.

உன்  வார்த்தை பல கேட்க ,
நான் காத்திருந்து நிற்கையில்
திருவள்ளுவரும் இல்லை இன்று
என் பொறுமையின் குரல் கூற !


எம்மதமும் சம்மதம்"
இம்மொழி, உன்போன்ற,
உடன்பிறவா, 
உன்னத உறவுகளுக்கும் தான்..
என்றும் உடன் இருப்பாயா,
எனதாய்??

திங்கள், 21 பிப்ரவரி, 2011

என்ன செய்வேன் நான்...


எப்படியேனும் 
உன் நினைவுகளை 
அழித்தெறிய தான் வேண்டும்... 
அனால், 
ஒன்றின் பின் ஒன்றாய், 
ஓராயிரம் எண்ணங்கள், 
உனக்காகவே,
 உன்னை பற்றியே....

சனி, 19 பிப்ரவரி, 2011

தொலைத்த நிமிடங்கள்..

கால் தடம் இல்லா
கடல் தீவுகளில் கலைத்து தேடுகிறேன் ,
வாழ்வு முழுதுமாய் 
என்னுடன் இருக்கும்
என நினைத்த பொற்குவியல்.
பூமியில் புதையலாய் புதைந்ததோ 
என பிளந்தும் பார்த்தேன்,
பிரபஞ்சம் அலைந்தும் பார்த்தேன்...
கடவுளின் காலை 
பற்றி கேட்டேன்,
கதறி கேட்டேன்..
கடைசியில்.,
பேழையில் பார்த்தேன்...
களவு போன என் புன்சிரிப்பை,
காணாது போன என் நிம்மதியை,
மனித இனம் 
மறந்து போனதென்னவோ உண்மைதான்!
அமைதியும்,
புன்னகையும்,
பொறுமையும்,
பேரானந்தமும்,!
என்று திரும்பும் மனிதம் நம்முள்..??உழுகிறேன் , விழுகிறேன்...

கற்பனை குதிரை ஏறி,
கனவுகளி அழைத்துக்கொண்டு,
காற்றோடு விரைந்து சென்றேன்
கடிவாளம் இல்லாமல்...
சென்ற இடமெல்லாம் 
வறண்டு இருக்க,
எங்கு நோக்கினும்
கதவுகள் மூடி கிடக்க,
அங்கோ,
என் பூமி வற்றி கிடக்க,

தானியம் இன்றி
என் சிசு பட்டினி கிடக்க,
என் செய்வேன் நான்..?
விவசாய பூமியில்,
உழவனுக்கு சோறில்லை..!

என் சகியே...

மௌனத்தால் வதைத்தாய்
முன்பு என்னை.!
வார்த்தைகளால் சிதைக்கிறாய்
உன் மீதான என் மாற்று அபிப்ராயத்தை.!
வார்த்தைகளும் விசிதிதிரமானதேனோ.?
செவிதனில் உன் குரல் தீண்ட,
நாசியில் உன் வாசம் நெருட,
மனதோடு  நீ என்றும் 
குடிகொண்டு உள்ளாய்  என் சகியே..!


புதன், 16 பிப்ரவரி, 2011

கொடுமை காதல்


என்னை கொள்ளை அடித்தவன் அவன்.!
தனிமை சிறை எனக்கா.??
காதலில் கொடுமை...

சனி, 5 பிப்ரவரி, 2011

காலமான காலம் .


உன்னை பற்றிய எண்ணங்கள்
ஏதும் இல்லை.!
கேட்டதை தருவாயா;
சில சொற்கள் உதிர்பாயா;
இல்லை எதிர்பார்ப்புகள்,
உன்னிடமிருந்து.!
கனவுலகில் கூட
வேண்டாம் உன் பாராமுகம்!
தூக்கம் இல்லையடா எனக்கு!

உனக்காக,
உணர்வெழுப்பி,
உடைந்துருகி,
உயிர் கசிந்து
நான் எழுதும் காலம்,
காலமாகி,
காலம் பல கரைந்தோடி விட்டது.!


வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

என் உயிருக்குள் நீ!

பல சமயங்களில்

என் மனதில் அடிவாரத்தில்
ஓங்கி அடிக்கும்
உன் நினைவலைகளின்
சில சாரல்களாய்..,
ஓரீரு வரிகள்.!

உன் மழையின்
சாரலில் சிலிர்த்து எழ,
உயிரும் உடையும் சப்தம் 
பலமாய் என்னுள்...!

என் உயிர் தூறல்
சிறிதேனும்
ஈரப்டுத்டுமா
உன் இதயத்தை....
அல்லையேல்
குடை விரித்து பிடி..!
கரை படபோகிறது,
உன் கல்நெஞ்சம்..!

துலைந்த இடம்  ஒன்றாய்,
தேடும் இடம் மற்றொன்றாய்,
மதிகெட்டு தான் திரிகிறேன்,
தீரா அன்பினால்.!


உன்னால் உடைந்த திசுக்கள்
ஒட்ட  தான் இல்லை என்னுள்;
அதில் ஒன்றாய்,
என் சிறு இதயம்!
வெறும் செநீரை மட்டுமே சுமக்காமல்,
உன்னையும் கருவாக்கி தாங்கிட,
ஆசை பட்ட பாவத்திற்கு,
உடைந்தே கிடக்கிறது,
ஆறா ரணமாய்!!
அதனால் தான்
துடி துடித்தே,
ஏங்குகிறதோ??

காயங்களால் மட்டுமே தீண்டி,
நரம்புகளையும் தூண்டி,
சுடும் தீயிற்கு இரையாக்கி விட்டாயோ,
கடைசியில் என்னை??

நெஞ்சம் சரிகிறது,
கண்ணீரும் எரிகிறது!
உரிமை போர் கோடி
தூக்கிட தயார் இல்லை நான்.!
அறிந்தேன் உன் மீதான
என் உரிமையை.!
வார்த்தைகளில் ஒருவாராய்,
செய்கையில் மற்றோருவாராய்,
உணர்த்தியே விட்டாய;
வழியை விலையை எடுத்து.!

பாராமுகமான உன் மொழியை விட
இழந்த வலி பெரிதல்ல!
ஆசைகள் எதிர்பார்புகளாக,
எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக,
ஏக்கங்கள் ஏம்மாற்றதை தழுவ,
ஏம்மாற்றங்கள் உன் எதிர்ப்பை பறை சாற்ற,
எதுவுமே நிலையானதில்லையோ.,
உன்னை போலவே??

விழி உடைத்து
வழி கண்டு
உணர்வுகளை தாக்கி,
இன்று,
என் உயிருக்குள் நீ!

மௌனங்களில்
உன்னை எழுதி
வார்த்தைகளில்
உன்னை வரைய..,
உன்னுள் நான் கலந்தேன்.!
இல்லை இல்லை,
என்னுள் நீ தான்,
இன்றும், என்றும்!
உருகி
மருகி
மருவ நேசம் கொள்ள - என்
உயிர் உறங்கிய பின்பாவது
உணர்வாயா,
பெயர் இல்லா 
என் பந்தத்தை.....????
அதன் நேசத்தை...???

ஹைக்கூ

மரணத்திற்கு பின்பாவது கமழவேண்டும்
காற்றின் மென்மையோடு..
ஊதுபத்தியை போல்...

ஹைக்கூ

அனைத்தும் இழந்து
கிழிந்த பக்கங்களாய்,
வேசியின் வாழ்வு.!

புதன், 2 பிப்ரவரி, 2011

காதல் காதல் தான்..!

உன்னால் நான் நீர் சிந்தினாலும்,
அதை கண்டு நீ சுகிதாலும்,
கனவாய் நிஜங்கள் தொலைந்தாலும்,
நிஜங்களின் நினைவுலகில் வாழ்ந்தாலும்,
நினைத்து நினைத்து மரித்தாலும்,
வெறுப்புகள் அனைத்தும் சகிதாலும்,

காதல் காதல் தான்!
அன்றும்
இன்றும்
என்றும்
காதல் காதல் தான்..!

தோற்றும் வென்ற நேசமோ?

அவனும் நேசித்தானோ என்னை?
அறியாது விழித்தேன்.!
நீர்த்திரை இட்ட கண்களோடு
என் மண அழைப்பிதழை
அவன் பெற்ற போது..........
மரித்த என் காதலே
நீ தோற்தாயா??
இல்லை வென்றாயா?