புதன், 27 ஜூலை, 2016

வாழ்க்கையின் விசித்திரம் . . !

கனவுலகில் வந்து
கண்களை குத்தி கிழித்து
மறக்க முடியாத நினைவுகள் கொண்டு
மன்னிக்க முடியாத மக்களை சார்ந்து
மீண்டும் மீண்டும் என்னை
நானே காயப்படுத்திக்கொள்கிறேன் . . !

காற்றோடு கலந்து
மௌனமாய் வந்து
என்சொ ற்களை பிடுங்குகிறாய் . . !
தீயாய் உச்சரிக்கும் ஓசையோடு
உன் சுவாசமும் சேர்ந்திடும் . . !

இருந்த உலகிலிருந்து
இருண்ட உலகிற்கு
கட்டாயமாய் தள்ளிவிடபட்டோம்,
காலத்தை காதலோடு பார்க்காமல்
கருவிக்கொண்டே இருக்கிறேன் . . !

மக்களுக்காக வாழ்ந்தே
என்னை நான் தொலைக்க,
பெண் மையிங்கு காணாது
சொற்களோடு ஸ்வப்னங்களும் கலைய,
இது தான் வாழ்க்கையின் விசித்திரம் . . !

செவ்வாய், 26 ஜூலை, 2016

வற்றாத ஜீவநதி . . . !

தனிமையின் தூவலில்
பற்பல பிதற்றல்கள் . . !
நீர் இல்லா நதி கரை
மணல் சூடாய் நான் . . !
நதி வற்ற மணல் அள்ளும்
அரக்கர்களுக்கு புரியாத
மணலின் குமுறல்களாய்
என் பிதற்றல்கள் . . !
நிரப்ப படாத தருணங்களிலும்
தாய்மையுணர்வோடு தேடிவந்து
நதி மடி அமரும் மனிதர்கள் போல்,
எனக்கமைந்த நண்பர்கள் . . !
எங்கள் வாழ்க்கையை மீண்டுமொரு
பிரதியெடுத்து அலசி கொள்கிறோம் . . ,
வாத்சல்யங்கள் வாழ்க்கையானால் ,
வற்றாத ஜீவநதி தான் . . ! 

நீண்டதொரு சங்கதி . . .

காய்ந்து போன காயத்தின்
தழும்பொன்றிலிருந்து ஒழுகும்
செந்நீர் சகதியாய் ,
நீண்ட நாட்கள் பிறகு,
எடுக்க பட்ட என் எழுத்தாணியின்
நீண்டதொரு சங்கதி . . .
அவ்வப்போது கனாக்குள்
வந்தென்னை வீழ்த்திச்சென்ற
வெண்ணிலாவின் மென் அன்பிற்காய்
பத படுத்திய பேனாவின்
நீண்டதொரு சங்கதி . . .
பாரினில் கண்ட சொந்தமனைத்தும்
ஏய்த்தேய்த்து என்னை வீழ்த்த ,
என் கைப்புகுந்த கள்வனின்
நீண்டதொரு சங்கதி . . .
" கையளவு நிற்கும் கைபேசி வந்ததினால்,
நான் உன் கைமீறி போனதென்னோ ?
உன் கையினுள் நின்ற என்
கண்ணீரில் காயமாற்றிக்கொண்டாய்,
பின்பேன் கையை விடுவித்து
என்னை விட்டாய் . . ? ? ? "

பெயரில்லா பறவை . .

மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

விற்க பட்ட குஞ்சுகளுக்கு
மத்தியிலே பெயரில்லா பறவையாய்
புதரினுள் சிக்கி,
வலசை போய் தோற்று . .

பெயரில்லா பறவையாய் ,
என் குடில்  தேடி ,
இருட்டினுள் இடறி ,
இருட்கூண்டில் சவமாகி . . .

பின்பு
மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

தீ தந்த காயத்திற்கு,
என் சிறகை கொண்டு களிம்பு,
இங்கு நான் கொண்ட காயத்திற்கு,
ஏதாவது கிடப்பிலுண்டோ கொலைக்கருவிகலின்றி ? 

வியாழன், 21 ஜூலை, 2016

அழகிய பயணம் . .

ஒரு கூட்டு கிளிப்போல்
தவழ்ந்த பிள்ளையமுது,
பாத சுவடினை விட்டுசெல்ல,
மண் வாசனையாய்,
மற்றொரு பிள்ளையமுது நுகர,
அசையும் சிறகுகளை தேடி,
அழுகையிசை மறந்து,
நகையொலி ரசிக்க,
இனிதாய் ஒர் பயணம் . . .
அப்பிள்ளை கனியமுதின்,
தூறலான ஆசிகள்
நாசி நெருட,
கிண்ணங்களில் கனவுகள் சுமந்து
முடிவேதும் வேண்டாத,
அழகிய பயணம் . . . !

என் பேனா

எனக்கும் எழுத்துக்கும்
வெகு ஜென்ம பந்தம்.
கவிதைகளுக்கு கருவாகி,
எண்ணங்களை உருவாக்கி,
எழுத்துலகில் சஞ்சரிக்க 
என் பேனாயிருக்க,
என் உலகில்,
நான் . . ! 😊

பௌர்ணமி கவிதைகள்

மண்ணில் இருந்து நான்,
சிலந்தியாய் என் எண்ணங்கள் கொண்டு வலை பின்ன,
விண்ணில் இருந்து நீ,
நிதர்சனமாய் சிரிக்கிறாய் . . !
சிக்கல்களில் சிக்கி கொள்ளாமல் . . !
நீ பௌர்ணமி . . .

பௌர்ணமி கவிதைகள்‬

நிலையா மையுணராத வரை
பிறை நிலவும்
முழு நிலவின் வென் ஒளியும்
பேரழகு தான்...
நீ பௌர்ணமி . . !
‪#‎பௌர்ணமி கவிதைகள்‬

பௌர்ணமி கவிதைள்‬

சிந்தனையில் மூழ்கியிருக்கும்
சிதறிய மனதின்
சலனத்தை சன்னப்படுதியது
உந்தன் தரிசனம் . . 
நிலவொளியின் அழகாய்
உன் அரிசிபற்சிரிப்பு.
நீ பௌர்ணமி . . !
‪#‎பௌர்ணமிகவிதைள்‬