திங்கள், 26 டிசம்பர், 2011

என் சுவாசமாய்..


மார்கழி பனிமலராய்,
மணம் வீசி,

கோயில்களில் புறா சிறகடிப்பாய்,
காற்று காதலனின்
தொடுகைக்கு தலை அசைக்கும் நெற்பயிராய்,

இவள்,
நிழல் தேவதையல்ல...
எந்தன் நிஜ தேவதை..

என் நிழலின் நிஜமாய்,
ஜீவனின் சுவாசமாய்...!
கிராமத்து குயில் கூவுது.

காத்ததிச்சா
பறக்குற சருகாட்டம்,
உன் நெப்புல கரையுது என் பாதி உசுரு.
உசுரோட சேந்து
நானும் கரையுறேன் உனக்காக.
மாமா உனக்காக.
பேசி பேசி மறுகறேன்
நீ வரபோற பாதைய
பாத்து பாத்து ஏங்குறேன்.
உங்கூட இருந்த நிமிஷம்
நெனச்சு நெனச்சு கெறங்குறேன்.
என் உசுர நீ வாங்காம 
உடனே வந்துடு என்னாண்ட . . .வெட்கம்

செம்பூக்கள் பூக்கச்செய்யும்  உரமோ
 உன் வார்த்தைகள்?
செவிதனில் விழுந்ததும்
 பூகின்றனவே செம்மையாய்
 என் கண்ணா கதுப்புகளில் !

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

வருவாயோ..?

நிலவு இல்லா இரவாய்,
பனி இல்லா மென் பகலாய்,
தென் இல்லா மலராய்,
உன் ஸ்பரிசம் இல்லா சடலம்,
உலாத்தி கொண்டே தான் இருக்கிறது.
நீ மீண்டும் வருவாயென.
என் உலகம் ஒய்ந்து.
நினைவுகள் அழிந்து,
நான் செல்லும் முன் ஆவது  ...!

ஹைக்கூ.

நெற்றியில் நீமுத்தமிட்டு முடித்த காமத்தை,
கன்னத்தில் இதழ் பதித்து
மீண்டும் தொடங்குவேன் நான். . .!

பரி"மானம்"

 செல்லரிக்கும் எஸ் எம் எஸ்,
நவ நாகரிகம் என
கலாசார சீர் அழிவுகள்,
தரம் கெட்டு,
தெரு கூத்தாடியாய்,
கோமாளி தனம் தேயும் காமாளிகள்,
ட்டிங், கிஸ்ஸிங் என,
பண்பழிந்த  பதர்களாய் ,
இன்றைய இளம் வட்டங்களில் பல.
காதலின் போர்வையுள்,
பல வாழ்வு வீணாக,
சிலர் அதை பொழுதுபோக்காக,
மறித்து விட்டது
அன்பின் நிஜ பரிமானம்.
எங்கு செல்கிறோம் நாம்?,  

மென்காற்று


தென்றல் மென்மையா?
அட பாவி,
நீ உரசி செல்ல,
நொறுங்கியது நான் தானே..

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

காதல் பரிசு ....


காதல் என்றான் ,
கவிதை தந்தேன்.
பொருளை கொன்று வார்த்தையாய் தந்தான்.
காதலை தந்தேன்,
அவன் நெஞ்சின் கடைசி துளி ஈரம் வரை
வழித்து என்  கண்ணில் தந்தான்.

கண்ணீர் விட்டேன்,
அவன் தாகம் தீர்த்தான்.
முழுதாய் என்னையே தந்தேன்,
உயிரை பிடுங்கி சடலமாய் வைத்து விட்டான்...