திங்கள், 23 மே, 2016

நீருக்கும் நமக்கும் ஒரு தேவ பந்தம் . .

உன்னோடு நான்,
என்னோடு நீ,
நம்மோடு நாம் . . !
மனதோடு நிற்கும்
நம் பந்தம்,
மழை தாங்கிய மண்போல்
வாசம் மட்டு மேனக்கு . . !
நிஜமுமாய் நின்று
நிழலேன நகர்ந்த நீ,
நீங்காமல் நிற்ப்பாய்,
நெஞ்சமேல்லாம் நிறைந்து . . !
தமயனாய் பிறந்து,
பிள்ளையாய் வளர்ந்து,
தோழனாய் வாழ்ந்து,
தந்தையாய் பிரிந்து,
தாயாய் அரவணைக்கும்,
மழையாய் குளிர்விக்கும்
என் மழலையே,
இனி எப்பிறவியில் காண்பேன் . . !

பௌர்ணமி கவிதைகள்

நிலவும் அவள் மேல்
காதல் கொண்டது.
அவளோ,
காலை முழுதும் காத்திருந்து,
இரவினில் துயில,
நிலவோ,
இரவினில் காய்ந்து ,
பகலினில் மறைய...
வான வீதியிலும்,
மொட்டை மாடியிலும் . . .
நீ பௌர்ணமி . . !

பௌர்ணமி கவிதைகள்,

ஒற்றை நிலவாய்,
வான வீதியில்,
வெளிச்சம் புகட்ட
உன் பிறப்பு…
தேய்ந்தும் மலர்ந்தும்
தோற்றமளிப்பது
உன் சிறப்பு…
உனை காண
இனியுமில்லை
எனக்கொரு எதிர்ப்பு…
நீ என் பௌர்ணமி…

பௌர்ணமி கவிதைகள்

அந்தி மயங்குகையில் ,
ஆடவனான ஆதவன்,
நிலமகளை முத்தமிட்டு பதுங்க,
வெகுண்டெழுந்த நிலா மகள்,
வான வீதியில் வந்துவிட்டாளோ 
ஒற்றை பௌர்ணமியாய்?
நீ பௌர்ணமி !
பௌர்ணமிகவிதைகள்