ஞாயிறு, 30 நவம்பர், 2014

பௌர்ணமி #3

அந்த பௌர்ணமி நிலவும்
எனக்கு துணை,
தனிமையில் இசைகேட்க !

பௌர்ணமி #2

நான் பௌர்ணமி என்றால்,
தேய்ந்து விடுவேனே என்றேன்!
காலச்சக்கரம் சுழலாது,
நீ முழுநிலவாய் இருக்கையிலே,
உனக்குள் நான்
தோய்ந்துடுவேன்  என்கிறாய்,
காதல் தோய்த்த குரலில்!

ஒரு முறை !

ஒரு முறை,
ஒரே ஒரு முறைதான் !
உன் தோள் சாய்ந்து,
உன் கையணைப்பில் புகுந்து,
என் கண்ணீரில் உன்னை நனைத்து,
விழியோடு கலந்துறையாடி,
என் அன்பை,
உனக்கு மட்டுமே ஆன
என் அன்பை,
உனக்கு உணர்த்தவேண்டும் . . .
ஒரு முறை,
ஒரே ஒரு முறை மட்டும் தான் , , ,!

தாய்மை

விழிகளிலும் குரலில்
கருவறையின் வெப்பம்
உன் தாய்மை !

சனி, 29 நவம்பர், 2014

ஹைக்கூ

காதலோடு அழைத்தேன்,
அணைத்தாய் - என்னை இல்லை
அலைபேசியை!

பௌர்ணமி ..

நீ இல்லா தனிமையில்,
தகிக்கிறேன் என்றேன்!
அடி போடி,
என்றும் என் நினைவில்
நீ மட்டும் தான் பௌர்ணமி
 - முடித்துவிட்டாய்!

உயிர்சொர்கம்

என் சொர்க்கத்தில்
எனக்கு மட்டுமே இடமுண்டு
அவ்விருக்கண்கள்!

நாணம்

அட,
கொஞ்சமும் நாணம் இல்லை போலும் மேகத்திற்கு
இப்படி பகிரங்கமாய் முத்தமிடுகிறதே பூமியை !

கனவறை

வந்து பார் ,
என் கனவறை முழுதும் உன் பிம்பம்..
நிஜத்தில்
நீ எங்கோ, நான் எங்கோ!

சத்தமும் முத்தமும் !

பூ விரியும் சத்தம்,
பூக்களுக்குள் யுத்தம்!
உன் இதழ் சேரும் சத்தம்,
என் கன்னங்களில் முத்தம் !

கவிதைக்குவியல்

உனக்கும் எனக்குமான 
கவிதைக்குவியல்,
நம் கை பேசிகளின் inbox !

சாம்பல்

நெருப்பின் முடிவு சாம்பல் 
ஒத்துகொள்கிறேன்
காதல் நெருப்பு தான், !

வெள்ளி, 21 நவம்பர், 2014

MAX

சொல் புதிதாய் பொருள் பதிந்தாய்,
சொல்ல வல்ல என் ஆசான்களின் பட்டியலில்,
MAX இன் இடம் அழுந்த பதிந்ததாய்.

என் உயிருக்குள்
ஞான சுடறேற்றி
கற்பனைக்கு ஒளி தந்தது MAX

வாழ்க்கையின் குறிக்கோள்
வயிறல்ல - வாழ தகுதியானவனுக்கு
தடைகளேதும் பெரிதல்ல - சான்றளித்தது MAX

ஞாபக குளத்தினுள்ளும்
நன்மைகளையே தேக்கி வைக்கும்
வித்தைகளை கச்சிதமாய் கற்பித்தது MAX

கால் முளைக்க வைத்து
என் முகவரியை எனக்குள் தொலையாது
தேடி தந்ததில் பெரும் பங்குண்டு MAX

பனிதுளியையும் பூவிதழின் அழுகையல்ல
பூ மலர சிந்திய வேர்வை என
பார்க்க வைத்தது அதிசயமாய் MAX

வாழ்கின்ற வாழ்க்கையில் மனித நேயமும்
உயிர் தாங்கும் தாய் நாட்டின் பற்றும்
உயிர் தந்த அன்னை பாதம் பணிதலுமாய்
என்னை மாற்றி அமைத்த MAX

MAX உடன் நானும்
என்னுடன் MAX உம்
ஒன்றாய் வளர்கிறோம்

மனிதனை மனிதனாய் செதுக்கும் சிற்பியாய்
உளி கொண்டு ஒளி தரும்
MAX இன் அனைத்து உயர்கரங்களுக்கும்
நன்றிகள் பற்பல!