வெள்ளி, 21 நவம்பர், 2014

MAX

சொல் புதிதாய் பொருள் பதிந்தாய்,
சொல்ல வல்ல என் ஆசான்களின் பட்டியலில்,
MAX இன் இடம் அழுந்த பதிந்ததாய்.

என் உயிருக்குள்
ஞான சுடறேற்றி
கற்பனைக்கு ஒளி தந்தது MAX

வாழ்க்கையின் குறிக்கோள்
வயிறல்ல - வாழ தகுதியானவனுக்கு
தடைகளேதும் பெரிதல்ல - சான்றளித்தது MAX

ஞாபக குளத்தினுள்ளும்
நன்மைகளையே தேக்கி வைக்கும்
வித்தைகளை கச்சிதமாய் கற்பித்தது MAX

கால் முளைக்க வைத்து
என் முகவரியை எனக்குள் தொலையாது
தேடி தந்ததில் பெரும் பங்குண்டு MAX

பனிதுளியையும் பூவிதழின் அழுகையல்ல
பூ மலர சிந்திய வேர்வை என
பார்க்க வைத்தது அதிசயமாய் MAX

வாழ்கின்ற வாழ்க்கையில் மனித நேயமும்
உயிர் தாங்கும் தாய் நாட்டின் பற்றும்
உயிர் தந்த அன்னை பாதம் பணிதலுமாய்
என்னை மாற்றி அமைத்த MAX

MAX உடன் நானும்
என்னுடன் MAX உம்
ஒன்றாய் வளர்கிறோம்

மனிதனை மனிதனாய் செதுக்கும் சிற்பியாய்
உளி கொண்டு ஒளி தரும்
MAX இன் அனைத்து உயர்கரங்களுக்கும்
நன்றிகள் பற்பல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக