வெள்ளி, 31 டிசம்பர், 2010

மாறும் காலம்..

சம்பாத்தியம்,
காலமின்மை,
வேலை பளு,
உத்தியோக அலைச்சல்,
இப்படி பல காரணங்கள் ,
சிசுக்களை கிரேச்சே - இல் விட..,

பின்போர் நாளில்,
இவை அமையும்
நாம் முதியோர் இல்லம்
சென்றடைய..
என அறியா பெற்றோர்கள்..!

பாவம்..!

உரிமையான உறவு...


வண்டோடு பூ மோதுவது
வெறி சண்டையா ??
கொண்ட உரிமையால் தானே?
நானும் அப்படிதான்..!
பனித்துளிக்கு,
சூரியனை கண்டு அச்சமா?
இல்லையடி நிச்சியமாய்.
பனித்துளி மேல்
கதிரவனுக்கு காதல்..
அதான் கண்ட உடன் 
அணைக்கிறான்.!
உன்னோடு நானும் அப்படிதான்..!

நிஜமா நிழலா.?



என் நிழலும்
என்னை பிரியும் போது,
நிஜமாக நீ வருவாய்
நான் எண்ண;
என் நிழலை போலவே,
என்னை நிர்கதியாய் விட்டு சென்றாயே..??
என் நிழலின் நிஜம் நீயா??

செவ்வாய், 7 டிசம்பர், 2010

யார் தாய் . . ?

நான் பிரசவத்தாய் - ஆனால்
கவிக்குழந்தையை நீ
எனக்குள் பிரசவித்தாய்...

வியாழன், 2 டிசம்பர், 2010

புதன், 1 டிசம்பர், 2010

தேவதை வாழும் உள்ளம்...

மகரந்த மழையில் 
தேவியிடம் மோனத்தில் 
சுகித்த தருணம் அதில் 
தேன் உண்ட வண்டாய் 
கிறங்கி அனுபவிக்கயிலே., 
பூமிக்கும் ஓர் தேவதை வேண்டும் என 
யோசித்த கடவுள், 
டிசம்பர் தேவதையாய், 
முதல் நாளிலே 
உன்னை பூமிக்கு அனுப்பி விட்டானோ..? 

வருடத்தில் 
ஒரு முறை வரும் 
இந்நாளுக்காக 
வருடம் முழுதும் 
காத்திருக்கிறேன் 
ஏனெனில், 
இன்று தேவதைகள் 
கொண்டாடும் தினம்... 


பிறந்த நாள் காணும் தோழி சோபியாவிற்கு...

செவ்வாய், 30 நவம்பர், 2010

கிழிந்த நெஞ்சம்...

நீ ரசிக்க மாட்டாய் என தெரிந்தும்
உனக்கு பிடித்த ஆடைகளை
தின தேர்தெடுக்கும் கரங்கள்,
நீ அழைக்க மாட்டாய் என தெரிந்தும்
அலை பேசியை எப்போதும்
ஆவலாய் பார்க்கும் கண்கள்,
நீ பேசமாட்டாய் என தெரிந்தும்
உன் வார்த்தைகள் மட்டுமே
கேட்க தவஞ்செய்யும் காது மடல்கள்,
நீ மட்டுமே என்னுள் என
உறுதி செய்யும் என் உடல் திசுக்கள்,
உன்னை மட்டுமே சுவாசிக்கும்
என் நாசியின் துளைகள்.,
உன்னை மட்டுமே காண
துடிக்கும் என் கரு விழிகள்,
நீ இருக்கும் இடத்திற்கு மட்டும்
வலிக்காது பயணிக்கும் என் கால்கள்,

இப்படி,
இப்படி என் அனைத்துக்கும்
எப்படி புரியவைக்கும்
என் மதியும் மனதும்,
உன் மனதில் நான் இல்லை என.?

காதல் மாறாது.

துள்ளி திரிந்த என்னை
தாயாய் மாத்தினாய்.
தோய்ந்த கண்களுக்கு
உறக்கம் ஊட்டினாய்.
நான் மட்டும் என்ன.?
அமைதியான உன்னை
அருந்த வாலாய் மாற்றினேன்.

இருந்தும் என்றும் மாறாது,
நம்முள் ஒளிந்திருக்கும்
நம் காதல்...

வியாழன், 25 நவம்பர், 2010

ஊடலாய் ஓர் உரையாடல்...

பூவுக்கு பூ தாவும்
வெட்டுக்கிளி.
இதன் தாகத்தை தீர்ப்பது
எந்த பனித்துளி?

பனித்துளியாக முயற்சிக்காதே.
பேதை பெண்ணே.
உனக்கு கொடுப்பினை இல்லை 
என் தாகத்தை தீர்க்க.

வாழ்வு முழுதும்
வெட்டுகிளியாய் உருகொள்வாயோ?
உன்னை பஞ்சவர்ண கிளியாக
பசுமை கொஞ்சும் மரமாவேன்...

வேரறுந்து நிற்பாய்
வேண்டா வேலை செய்தால்.
சருகாகாதே  .!

நேசித்த காரணத்தால்
நெஞ்சோடு குடி இருக்க
என்ன தவம் செய்வது ..?

ஒரு தலை நேசம் 
வேண்டாம் இந்த வேஷம்!
புண்பட்ட நெஞ்சுக்கு
புடம் போட்டால் - பாசம்! 
காதல் அல்லவே.!

காதலால் தான்
சிறகொடிந்த உனக்கு
மரமாகி நிழல் தந்தேன்,
இதமாய் நீவி விட்டேன்...!

புரிதலின் பரிச்சயம் 
இல்லையா உனக்கு? 
தேன் சுவைத்திருக்கும் என்னிடம் 
மற்றொரு மலராய் வருகிறாயே?

மனதில் இல்லையேல்
ஏன் சுவைத்தாய் என்னை.?

மலர் வாடிவிடகூடதென
மகரந்த சேர்க்கைக்கு தான்..!

மகரந்த சேர்கையால்
கனிந்த என் நிலை.?

காற்று காதலன் வருவான் 
கனியே, உன்னை கண்டெடுக்க.!

கணவனாய் உன்னை
காதலித்த என் நிலை.?

அறிந்த முட்டாளாய்
 நீ செய்த பிழை.
நான் என்ன செய்ய.??

உன் மீதான என் நேசம்.?
எது வரை என் சுவாசம்.?
ஏனடா இந்த வேஷம்.?

உன்னை கொண்டாட 
உன்னவன் வருவான்;
உலகின் உயர்வை
நீ அடைவாய்.!

வியர்வை சிந்தி
சகித்திருக்கும் உன் நிலை.?

கடைசி வரை,
சகிப்புடனே சுகித்திருப்பேன்..

கடைசி வரை
மலரை சூடாது
மல்லார்ந்து பார்திருபாயோ ?

இல்லை..
அண்ணார்ந்து பார்த்திருப்பேன்.


நந்தவனத்தில்
நீ குடியேற மாட்டாயா.?


பிருந்தாவனமே
பாலைவனமான கதை நீ அறிவாய்..

பாலையிலும் பசுமை பிறக்கும்
நீ உன்னை மாற்றிகொண்டால்..!

கற்றுகொடுத்ததை 
உன் உள்ளம் மறக்கவில்லை !
அறிவேன் என்றும் நான்.!
தேவை இல்லை நிருபணம்.!

நிருபிக்க கணக்கு பதிவியல்
கல்வி இல்லை இது.!

வாழ்கையும் 
ஒரு கணக்கு தான்.!

முடிவாய்..?

முற்று புள்ளி வைக்க 
மனமில்லை...

உன் இனத்திற்கும்
மனம் உண்டோ என்ன.?

மனதால் மடிந்த என்னை
சொல்லால் சுடாதே.

மலருக்கு தேன் சுவை தெரியும்.
சுடத் தெரியாது.!

மன்னிப்பாயோ.??

மன்னிப்பதற்கான
என் உரிமை.??

சிதைத்து 
உன்னை தான்.!

நான் சிதையவில்லையே.!

பொய்.
 பொய் புகட்டதே..

நீ கூறியதை விடவா .?

என் செய்தேன் நான்..?

உன் மனம் அறியும்.!

என்னுள் புதைந்தவை பல.
நீ குறிப்பிடுவது..?

புகட்டிய பொய்களின்
யோசனை உதவும்...

மறக்க மாட்டாயா.?

உன்னையா.?

இல்லையில்லை. 
என் தவறுகள் என
 நீ கருதுவதனைத்தையும்..

பயனில்லை..
மறித்து விட்டேன்..!

வேண்டாம் என் மலரே.!
காலம் உண்டு உனக்கு வாழ.!

அட..
சாத்தானும் வேதம் ஓதும்
அது  இது தான் போலும்.

முடிவில்லையா இதற்க்கு.?
வழி இல்லையா உன்னை தேற்ற.?

நீங்கி செல்வது உன் பழக்கம்
நீர் சிந்துவது என் வழக்கம்..!

சிறகொடிந்த என்னை
 சிந்தையுள் வைக்காதே.!

இலையுதிர் காலம்
எனக்கல்லவோ.?

நிழல் தரும் என் நிஜமே..
ஏன்...??

வசந்த காலம் வந்துவிடும்
அந்தோ.!
புது மலரும் பூக்கிறது.!

வேண்டியதில்லை 
வேறு மலர்..

உதிர்ந்து விடுகிறேன்
மறந்து விடு.!

சருகாகினும் உன்னை
கருக விட மாட்டேன்.!

கண்ணில் இருந்து மறைந்தால்
கருத்திலும் விலகிவிடுவேன்...

கல்லறை சென்றாலும் 
கருவறை மறப்பதில்லை..

கருவறை இல்ல
வெறும் ஓய்வறை தான்..

என்னை இளைப்பாற்றி 
தாலாட்டும் சுகவறை நீ...

ஓய்வறைகளுக்கு
ஒப்பனை தேவை இல்லை..

ஒப்பனை இல்லாமலும்
என் குழந்தாய்,,
நீ அழகு தான்.!


அழிகிறேன்.
அழாதே..!

வேண்டாம் விபரீதம்.

புது மலர் மலர்ந்தார்பின்,
இனி எனக்கென்ன வேலை.?

விலகாதே.வருத்தாதே.!
மலராது இனி ஓர் மலர்...

வருந்தாதே..
வாழப்பார்..!

நீ இன்றியா.?

காலம் கவலை அகற்றும்.!

காலம் சென்றாலும் 
காலமாகாது  காதல்...

காதல் இல்லை என்றாய்..

இனி கனவிலும் 
உன்னை விலக மாட்டேன்..

உன்னை கடந்த கனவு நான்..
களவு போனது என் குற்றம்..

களவாண்டது 
என் குற்றமே..

தூண்டியது நானே..

தீண்டியது நான் தானே..

தாகம் தனித்தேன்..

தேகம் எரிதேனே...

வேண்டாம்..
மீண்டும் என்னால் முடியாது.!

காத்திருப்பேன் 
காலம் கனியும் வரை.

எதிகாலம் நிதர்சமானது...

நம்பிக்கை வைப்போமே...

நடக்க இயலாத ஒன்றில் நம்பிக்கையா?

இயலாதது 
ஒன்னும் இல்லை இவ்வுலகில் ..

மூடர் சொல்..
மலையை நகர்த்த இயலாது.!

மனதை மாற்ற இயலுமே..

மனதில்லை என் இடத்தில..

எனிடத்தில் தொலைந்த அதை 
மீட்டெடுக்க மாட்டேன்..

எடுக்க அவசியம் இல்லை.
அடக்கம் செய்தேன்..

இனி பேச்சிற்கு இடம் இல்லை..

பேசி பயனில்லை..

உன் காயங்களை ஆற்றுவேன்..

காயங்கள் எனக்கில்லை...

விலகாதே...

வீழ்ந்து விட்டேன்
விட்டு விடு.........!!



.

செவ்வாய், 2 நவம்பர், 2010

காக்க காக்க.

ஒவ்வொரு முறையும்
சொல்வதை செய்திருந்து,
காரணங்கள் பல
சூழல்கள் சில,
என பழிபோட்டு
கதை சொல்ல,
கோபம் தான் குடிகொள்ளும்,
உன்மீது எனக்கு..!
ஒரு முறை..,
ஒரே ஒரு முறை,
உன்னை காக்க வைத்து,
நான் தவித்த தவிப்போ...!
காத்திருப்பதற்கும் மேலாய்,
காக்க வைப்பத்தும்
தவிப்பாய் தான் உள்ளது - இருபுறமும்
உண்மை நேசம் இருந்தால்..!

பாசமும் வலிப்பதேனோ?

நெஞ்சம் முழுதும்
நிரம்பி ததும்பும்
நிஜ நேசத்துடன்,
நான் உன்னை சுவாசிக்க,
நேசத்தை காட்டிலும்
நேர்மை எனக்கு பிரதானம் என
நீ என்னை ஒதுக்க....
வழக்கமான வார்த்தைகளால்
உன்னை சபிக்க மனமில்லை...
ஒரு புறம் .,
கன்னியமான உள்ளத்தை
நேசித்த பெருமையாய்...
மறுப்புறம்,
அந்த அழகு நெஞ்சத்தில்
குடிகொண்டு பாசம் அனுபவிக்க
எனக்கு குடுப்பினை இல்லை
என வருத்தபடுவதா...?



புதன், 27 அக்டோபர், 2010

உணர்வின் உயிர்தேழுப்பு...

நொடி பொழுது வந்தாலும்
சுகம் தரும் வானவில்லாய்..

கிழக்கினில் தினம் தோன்றி
சில நேரம் இம்சிக்கும்
செஞ்சூரியனாய்..
நொடி பொழுது பிரிந்தாலும்
தினறசெய்யும் காற்றாய்...
நீ வேண்டும் எனக்கு!

ஈரம்...

யார் சொன்னது
அவன் கல் நெஞ்சன் என??
எப்போதும் அழுகிறேன்
அவன் மீதுள்ள பாசத்தால்..!
ஆதலால்,
அவனும் ஈரமானவனாய்..!

உதயத்திற்கு உதவுவோம்...


உயிருடன் இருந்தும்
 உறங்குகின்றனர்
சவ குழிகளில்...!
கொடை வள்ளல்லம்
பரத பூமி..
குண்டு மழைக்கு - வெடி
குண்டு மழைக்கு 
குடை கொடுக்க வக்கில்லை...!
உலக வரைபடத்தின்
பெளத்த நாடு - இன்றோ
யுத்த நாடாய்...!
அலைகளின் ஓசையை விட
அலறலின் ஓசையே 
அதீதமாய்..!
செவிடாய் கிடக்கும் 
உலக நாடுகளும்,
ஐக்கிய நாட்டுசபையும்...!
மடல் சாய்க்க
மனம் இல்லையா?
மனிதாபி"மானமே" இல்லையா?

திங்கள், 11 அக்டோபர், 2010

கள்வனின் காதலோ.??


வகுப்பறையில் மூலையில்
தன் வேலையை
அவன் ஷ்ராதையாய் செய்திருக்க,
என் வலையை விட்டு விட்டு,
கடைக்கண் பார்வையால்
அவன் கண் படாது
பார்த்து ரசிப்பதும்
தவிப்பை தான் உள்ளது...
~~ பேராசிரியர் நடத்துகையில்,
ஜன்னலில் ஓர் சிட்டு குருவி...

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தோற்ற இயற்பியல் விதி..

விசை தாகும் வரை,
பொருள் அசைவதில்லை.
இவர்களது  அழுகுரல் ஓசை  கேட்பினும்
அந்த அரசாங்கம் அசையவில்லையே..!
நியூட்டன் விதியும் தோற்றுவிட்டதோ....
தமிழீழத்தால்??

ஹைக்கூ...


என்னுயிரே ...,
கண்ணீருக்கு சக்தி இருந்திருந்தால்,
விண்ணிற்கு ஓர் படிக்கட்டி
உன்னை மீட்டிருப்பேன் நான்....

வியாழன், 30 செப்டம்பர், 2010

சேர்ந்தும் சேராமல்...

தொலைந்த அன்பை
தேடி தரும் வரவு,!
உன்னை போல் ஆனா
தொப்புள் கோடி உறவு,!
நிலவொளியில்
நாம் சுகித்த தருணங்களில்,
நீ விட்டு சென்ற
மற்றொரு தடயம்..
அதனால் தானேன்னவோ
என் வாழ்வினில் ஓர் உதயம்...???

 உன்னால் ஏற்பட்ட தாகத்தின்
விளைவுகள்,,,
இரவிகளில் என் கனவுகளாய்....

நீ ஓர் நினைப்பினில்.,
நான் ஓர் நினைப்பினில்...!
சேரா செவ்வானமாய்...!!!

கஷ்டமா.. இஷ்டமா??

என்னவனே...
புரிதலில் உண்டு பிரியம்!
எடுத்து உறைத்திரிந்தால்
உணர்ந்து நீங்கி இ(ற)ருந்திருப்பேன் ...
இப்போதோ..,
உரிமை விரிய வேண்டிய தருணத்தில்
உறவு "விரிந்து விட்டது"..!
என்னை புரிந்து கொண்ட பின்னும்
நீ பொய் உறைத்திருக்கிறாய்...
பகிர்தல் அவ்வளவு கஷ்டமா?
இல்லை,
என்னை ஏமாற்றுவது உனக்கு இஷ்டமா...?

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஓர் தமிழச்சியின் குரல்..

உயிருடன் இருந்தும்
உறங்குகின்றனர்
சவக்குழிகளில்...
கொடை வள்ளலாம்
பாரத பூமி;
குண்டு மழைகளுக்கு
குடை கொடுக்க வக்கில்லை..
உலக வரைபடத்தின்
பௌத்த நாடு,
இன்றோ யுத்த நாடாய்...

அலைகளின் ஓசையை காட்டிலும்
அலறலின் ஓசையே அதீதமாய்....
செவிடாய் கிடக்கும்
உலக நாடுகளும்,
ஐ நா சபை கூடங்களும்...
மடல் சாய்க்க
மனதில்லையா??
மனிதாபி"மானமே" இல்லையா??

எனது ஈழ சகோதரர்களின்
இழிவு நிலை அதனை
இல்லாது செய்வது அரிதோ??


~ ~ ~ இவள் ,
             ஓர் தமிழச்சி...

.

வியாழன், 16 செப்டம்பர், 2010

தவமின்றி வரமோ...

உன் கரங்களில்சிறையுண்டு கிடக்கவே
எதனை நாட்கள் தவம் கிட்டப்பது..?

காத்திருந்து காத்திருந்து
என்னை நான் மறந்திட
கண்ணீருக்கும்
இங்கு வலிக்கின்றதே ..
உணர்வுகள் உயிரிழந்திட,
உயிரற்று போனது உடல்...
என்று சேர்வாய் என்னுள்...??
தவமின்றி வரமோ...

விழிகளில் விழுந்தேனோ..?




ஆழியினும் ஆழமான
உன் மௌனத்தை
எனக்க்கு என்றும் விளம்புகிறது
உன் விழிகள்..!
அதனால் தான் என்னவோ..,
தவறுகள் செய்தால்,
கண் நோக்கி பேச முடிவதில்லை என்னால்..!

முதற்கனவா பகற்கனவா?


அருகினில் மழை சாரலின் குளுமையாய்,
உந்தன் அணைப்பினில் கிறங்கினேன்..
மூளை சிலிர்த்து உசுப்பியது..
இது வெறும் பகற்கனவென..!

காதலனா கணவனா ?


திருமணத்தின் பின்பு ,
நமது கர்வ பசிக்கு 
தீனி ஆகிவிடுமோ காதல்?
வேண்டாம்., 
நாம் காதலர்களாகவே வாழ்ந்திடுவோம்..

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

எனதினிய மேன்மக்களுக்கு..

வாழ்வெல்லாம் வெற்றி காணும்
வகைகளை எல்லோருக்கும் 
ஆழ் மன அன்பையும் 
அரிதான அறிவையுங்க்கூட்டி 
அன்றாடம் புகட்டுகின்றனர்,
எம்-மேன்மக்கள்.!


அன்பு நெறி பண்புடனே 
அறநெறியும் அறிந்துகொண்டு 
நல்லநிலை எய்துவதற்கு
ஏணியாய் உதவுகின்றனர்
எழிலார்ந்த ஆசிரியர்கள்..!


சத்தான கருத்துக்களை 
முத்தான முழுஅறிவு - அதனையும்
முழு நிலா வெளிச்சமாய்,
கால் முளைத்த நற்கனவுகளுக்கு
வெற்றியின் வழி காட்டி
நிர்மல்யமாகவே தொடக்கத்தில் நின்று 
நிறை நெஞ்சுடனே வாழ்த்தும் 
எமதினிய ஆசிரிய உள்ளமே...
வாழ்த்த வயதில்லை உம்மை,
வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி.....


                                            இனிய ஆசிரிய தின நல்வாழ்த்துக்கள்...!

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சத்தமின்றி யுத்தம்


அலை பேசியில்
அலை அலையாய் அன்பளிப்பு அளிக்க,
ஐயோ..!
அது உன் முத்தங்களை வாங்கி,
வெறும் சத்தங்களாகவே,
ஆம்,
வெறும் சத்தங்களாகவே உனக்களிக்க,
மொத்தமாய் உனக்காக தர,
ஓர் யுத்தம் செய்யவே வேண்டும் நான்!
சத்தம்ன்றி ஓர் யுத்தம்...!
சத்தமின்றி ஓர் முத்தம்!

உயிர் சொர்க்கம்

சாகவும் தயார் நான்!
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.

வியாழன், 3 ஜூன், 2010

பெயர் தேடும் வரிகள்!


எனது அறிவு பசிக்கு
நான் இட்ட
கருத்து தீனிகள்!
உலக சிறைக்குள்
அகப்பட்ட அகதியின்
அழகு அலப்பரைகள்!
யோசனை மோகத்தில்,
மனதிசுக்களில் கருத்தரித்து,
காகித உலகில் ஜனித்து,
மையால் வளர்ந்து
வதங்கி நிற்கும் பச்சிளம் சிறார்கள்!
உணர்சிகள் உள்ளடங்கிய உண்மைகள்;
உன்னத உண்மைகள் இல்ல
கசப்புத்தன்மை கொண்ட
சகிப்புத்தன்மை மிஞ்சும்
உண்மைகள்!!
சீதையை சிதைக்கும்
ராவண  சமுதாயத்தின்
கிழிக்க படவேண்டிய முகமூடிகள்;
தொலைக்கவேண்டிய முகவரிகள்!
தன்னம்பிக்கை தாங்கி
நிலம் தேடும் விதைகள்,
அவையே
எனது கவிதைகள்!

உடன் பிறவா உடன் பிறப்பிற்கு...


பெறாமல் பெற்றெடுத்த
மழலை செல்வங்களை
மனிதர்களாய் மாற்றிடும் உமக்கு,
உடன் பிறவா உறவை,
தமக்கை எனும் தாரகையாய்
சமுதாய சிற்பிக்கு ஒரு
சின்ன தங்கையாய்
தாங்க தோள் கேட்க்கும்
துரித தமக்கையாய்
இனிதாய் இம்சித்து
ரசிக்கும் இளையாளை 
எனை ஏற்பாயா??

செவ்வாய், 25 மே, 2010

ஹைக்கூ...



யாரை வரவேற்க
இந்த வளைவு நடனம்?
காற்றசைவில் தென்னை மரம்...

குளிர்நாயகனே...


சிந்தை சிதறடித்து
நின்தைகளை முறியடித்து,
நித்தம் எனை காண
நீ வருவாய் என்
காத்திருந்தேன் நானும்
சாகசப் பறவையாய்;
பூவிழிதனிலே எதிர்பார்ப்பை தேக்கியபடி..
ஒரு நாள்,
முழு மனதுடன்,
எனது மனிதனாய்..!
ஒரு நாள்,
முழு இருட்டாய்..
என்னை விட்டு தூரமாய்!!
மித நாட்களிலே
தோன்றி தேய்ந்து..
எந்தன் குளிர் நாயகனே!
ஏனடா இந்த கண் கட்டி விளையாட்டு??
முகம் புதைய தலையணை அணைப்பில்,
மனம் சிதைய..,
என்சிந்தயும் கலங்குதடா.....

நான் ஓர் அகதி!

சொப்பனங்கள் களைந்து
கண்கள் விழித்தால்,
அங்கோ கிடந்தன
சடலங்கள் சிதைந்து
வேதங்கள் அழிந்து,
செந்நீர் மட்டுமே படிந்து,
உயிரை இழந்து?!
மிதம் எஞ்சிய நானோ,
உயிரை மட்டுமேந்தி,
உணர்வையும் தொலைத்து
உள்ளேன் ஒரு அகதியாய்!
நான் கேட்பதெல்லாம்,
ஒரு குடை நிழல்,
முக்கால்  நுரையீரல் காற்று,
அரை வயிற்று  உணவு,
கால்கள் ஊன ஓர் நிலம்,
ரத்தம் கேட்காத நிலம்!

எந்தன் மண்ணை
அடுத்தவர் ஆள்வது சரியா?
இதை தட்டி கேட்டால்,
உயிர் பலித்தான் முறையா??
என் நாவிலோ,
செந்தமிழ் தேன் மழை;
அதன் விளைவோ .,
என் தாய் மண்ணில்,
வெடிகுண்டுகளின் மழை.
எழுதுங்கள் என் கல்லறையில்,
"இவள் அழிவிற்கு;
மொழி பற்றே - தாய்
மொழி பற்றே காரணம்"
மலரின் மேன்மையை -எங்கள்
பிணவறையில் வைக்கும்
மலரின் மென்மையில்
ஒரு பாதி,
ஒரு பாதியை
என் ஈழ மக்களிடம் காட்டி இருந்தால்??
ஒரு வேளை,
ஒரு வேளை,
இத்துனை சிறார்கள்
அனாதையாகி இருக்க மாட்டனரோ???
ஆம்!
நான் ஓர் அகதி!

அனைத்தும் இழந்தவள்!
உயிருடையும் சப்தத்தை மட்டுமே
செவிதனில் சுமப்பவள்!
சிதைந்த சிந்தனைகளை
சிரிதேழுப்ப முயற்சிப்பவள்!
உயிர் கலை  கற்று,
உயிர் களை எடுக்க,
புதிதோர் உலகம் படைக்க,
துடிக்கும் ஓர் அபலை அகதி!
ஆம்!
நான் ஓர் அகதி!

தாயுமானவனோ நீ...


எல்லை அற்ற சோகங்களுடன்
உன் நினவுலகில் தலை சாய்ந்தேன்...
கருவறையும் நினைவதனில் 
கொண்டவன் நீ தானடா...

திங்கள், 24 மே, 2010

நான் ஓவியன் எனதெரிந்தும் நீ.......................


தேய்ந்து வளரும் நிலவாகி,
வளரும் மதிக்கு வானாகி,
வான் முகிலுக்கு மழையாகி,
மழை சேரும் தாய் மடியாகி,
நீர் தேடும் செடி வேராகி,

என்தோட்ட  பூக்களுக்கு பனியாகி,
வாடும் மலருக்கு மண்ணாகி,
துவளும் எனக்கு மென்னிசையாகி ,
என் கவிதைகளுக்கு கருவாகி,
இன்று என்னுள் உருவாகி நிற்கும்
என் காதலே....
என்னை என்ன செய்ய போகிறாய்..??

எரிகிறேனடா ...


திசை தெரியாது,
எனது உள்ளுணர்வுகள் 
ஒன்றை ஒன்று
கொளுத்திகொள்கின்றன..
நானும் உடன் எரிகிறேன்
மிக சுகமாகவே...
உன் நினைவுகளில்
ஆரம்பித்து..
அதிலே சாம்பலாகிறேன்....

வியாழன், 20 மே, 2010

மௌனம் பேசியதே ...


பேசாதிருப்பது பேரழகே...
அனால்
உன் பேச்சை மட்டுமே
கேட்க ஜனித்த என்னிடமுமா??

ஏன் வந்தாய்??


கண்மூடித்தனமாய் அன்பே
நீ என்று இருந்தேன்!
காதலுடன் பல நாட்கள்
உனக்கென தவம் இருந்தேன்!
 கண்ணீர் பூக்களை அள்ளித்தேறித்து
கற்பாறையாய் நீ நிற்க;
இதற்கெனவே வந்தாயோ - அன்பு
பொங்கித் தருவது போல்
தாளாத் துயர் எனக்களிக்க ?

அற்பனிக்கிறேன்... இன்னுயிர் நீத்தும் எங்கள் மனதில் நீங்காது உயிர் வாழும்
என் சகோதரியின் கணவன் ராஜேஷிற்கு ....

இது தான் காதலா?

என்ன சொல்லி பிரிவது?

எப்படி எதிர்கொள்வது?
வருத்திவிடுவேனோ?
வருந்திவிட்டால் யார் தேற்றுவது?...
இன்னுமும் ....
இன்னும் தவிக்கிறேன் நான்...
உனது மனதிலும்
மதியிலும்
அறவே இல்லை என அறிந்திருந்தும்...

உறவின் உரிமை என்னவோ?



உடனிருக்கும் நேரத்திலும்
நினைவில் உலா வரும் நேரத்திலும்
காயப்படுதிக்கொண்டே தான் இருக்கிறாய்!
உனது பேச்சுக்களாவது 
அன்பெனும் களிம்பெனக்கு 
அள்ளித்தரும் என எதிர்பார்க்க,
வழியற்று போனது அதுவும்!
ஒரு வேளை,
ஒரு வேளை ..,
காயப்படும் உரிமை மட்டும்
கொண்ட உறவா உனக்கு நான்??









என்ன செய்வேனோ..?


அடிக்கடி நான் கண்ணீர் சிந்த,
அந்நீர் துடைக்க 
நீ வருவாயென
கரைந்தேன் கண்ணீரிலே!
காலம் தாமதிதல்லும் 
கட்டாயம் வந்தாய்..!
இன்றும் கரைகிறேன்,
பிறர் சொல் கேட்டு
பிரிந்து செல்லும் 
உன்னை நினைக்கையில்,
என்னை நேசித்த ஓர் உயிர்,
என்னை உயிரோடு பலிவங்கியதென 
மீண்டும் கண்ணீர் சிந்தவா?
அல்ல,
என் சுவாசம் மறைந்துவிட்டதென 
எனக்கு நானே 
அஞ்சலி செலுத்தவா ??
உனக்களித்த தூய நேசதிற்கென,
என் உயிரையே 
எல்லா நேரங்களிலும்
நீ காவு வாங்கிட..,
என் செய்வேன் நான்??
எங்குசெல்வேன் நான்??

செவ்வாய், 18 மே, 2010

இரவின் மடியில் !



உன்னுடன் ஆன நொடிகள் 
எனக்கு கனவில் மட்டும் தான் எனில் 
எனக்கு விடியலே வேண்டாமடா..
இருட்டுலகமே  போதுமெனக்கு..
கனவில் கழிக்கிறேன் உன்னோடு...!

ஒரு நாள்...



ஒரு நாள்
நீ என்னுடன் இருந்தால்,
உன் விரல் பிடித்து நடந்தால்
உன்னுடன் சேர்ந்து வீதியுலா வந்தால்,
உன் அருகாமையில் லயித்தால் ,
உன் பாசத்தை புரிந்தால்,
உன் நேசத்தை எனகுனர்த்தினால்,
உன் சுவாசத்தில் நான் கலந்திட்டால்,
உனக்காக நான் துடித்தால்,
உன் தோழியாய் தோள் சாய்ந்தால்,
உன் தாயாய் தலை கோதினால்,
உன் சேயாய் மடி சேர்ந்தால்,

என்னவனே!
அன்று.......
உலகின் உச்சத்தில் நான் இருப்பேன்,
இப்பிறவி பயனும் ஈடேற்றுவேன்......

வெள்ளி, 7 மே, 2010

ஹைக்கூ


 
என்னுள் வளரும் 
கனவாய்  நீ...!
கவிதைகளுக்கு 
கரு தருகிறாய்!
காதலுக்கும் உரு தருகிறாய்...
என்று தான் நனவாவாய்...
எனதே எனதாய் ...??

லாபம் யாருக்கு?


சலனமற்ற என்னுள்
சந்தோஷ சந்தை
உன்னால் ...
கடைசியில்,
வியாபாரமானது
உன்னுடனான என் உறவு !!! 

எப்படி சொல்லுவேன்...?



நீ தான் அது என்று உனக்கு தெரியும்.
உனக்காக மட்டுமே என் வரிகள் என எனக்கு தெரியும்.
பின்பு எப்படி சொல்வென் நான்.,
என் கவிதைகளின் நாயகனே,
உன்னை என்னில் இருந்து அழித்து விட்டேன் என்று?

வியாழன், 6 மே, 2010

காதல் கசங்குகிறது.....


கல் வெட்டில் பதிப்போம் 
காதல் சரித்திரத்தை..
காலங்காலமாய் காதலித்தும் 
கை கூடாது காத்திருக்கும் காதல்...
கவிதைகளில் கரைந்திருக்கும் காதல்,
காகிதமாய் கசங்கி இருக்கும் காதல்,
இங்கிதமாய் இடைவெளி பெற்ற காதல்,
உள்ளம் அதனுள் ஒளிந்திருக்கும் காதல்,
ஊடலில் தலை தூக்கும் காதல்,
மோதலில் தலை சாய்க்கும் காதல்,...
இதய ஊர்ற்றிளிருந்து பேனா வழி 
இல்லகியம் படைக்கும் காதல்...
பெற்றவரை உதாசினபடுதல் வேண்டாம் என 
உடைந்த காதல்...
காயப்பட்ட காதல் சிம்மாசனதால் 
காணமல் போன காதலர் பலர்...
 இன்றும் கவிதையின் 
போர்வையுள் ஒளிந்திருக்கும் காதல் பல... 

என்னுள் நிறைந்த நிஜமே...


நிறைந்து விட்டாய் என்னுள்,
நிரப்பியது என்ன..?
நான் அறியேன் ... 
நிறைந்த உன்னை 
நிலை நிறுத்த தவிக்கிறேன்..
தோடு உணர்விற்கும் முன்,
மன உணர்விற்கு 
என்னை அடிமை ஆக்கினாய்  ...?
ஏனடா இந்த கண் கட்டு விளையாட்டு?
எனை தேடித்  தேடி
தொலைகிறேன் நானே...! 




திங்கள், 3 மே, 2010

உனக்கே உனக்காக


மென்மையான உள்ளமும்
ஆழமான அரவணைப்பும்,

அழியா நேசமும்,

பிரியா உணர்வாய்,

என்னுள் வளரும்

உருவற்ற கருவே!

விருப்பம் இல்லை,

உன்னை ஓர் ஆண் என கூற;

உனக்கான எனது வரிகளை

இந்த சமூகம் ஏற்காது!

பெண்ணாகவும் வேண்டாம் நீ-

இன்னுமும் இருக்கிறது

பெண் இன கழிவிரக்கம்!

உருவமே வேண்டாம் உனக்கு

உள்ளம் மட்டுமே போதும் - நீ

என்னை ஆள!

தனிமையில் துணையாய்,

துயிலில் தலை அனையாய்,

தப்புக்களில் தண்டனையாய்,

வெற்றிகளில் சந்தோஷமாய்,

நோயிலே மருந்தாய்,

இறுதி வரை எனதாய்,

எனது

மனசாட்சியாய்....!!

நினைவுகளின் தாபத்தில்.........


மேல் இமையும் கீழ் இமையும்
தம்முள் காதல் கொண்டனவாம்...
கருவிழி இமை இடையில்
கதகதப்பாய் புதைந்து கொள்ள,

எனக்கு தான் இன்னுமும்

அவன் தோள் இல்லை நான் சாய!

குளம் கட்டிய கண்களோ

இமை காதலர்களின் தாபத்தை
நீர் ஊற்றி
அணைக்க முயல
ஈர பதத்திலும்
காதலாய் ஊடல் செய்கின்றன இவை!

மூடிய கனவுகளோடும்

தொலைந்த நினைவுகளோடும்...