வெள்ளி, 26 ஏப்ரல், 2013

திரும்பி பார்கிறேன் . . .லக்ஷ சிரிப்பலைகள்,
பல்லாயிரம் திட்டுக்கள் ,
ஓராயிரம் வேலை ஆய்வுகள் ,
எத்துனை எத்துனை ஆராய்சிகள் ,
ஆய்வுகூடங்களில் தில்லு முல்லுகள் ,
எத்துனை எத்துனை பிறந்தநாள் விருந்துகள் ,
முடிந்த கல்லூரி வாழ்கை,
பிரியும் தருணத்தில் நண்பர்கள்,
பிரிவின் வலி இதயத்தில்,
இந்த உணர்வை,
காகிதத்தில் கவிதையாய் வடிக்கவா ?
இல்லை விழிகளில் கண்ணீராய் சிந்தவா ?

திங்கள், 8 ஏப்ரல், 2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

பவித்ர குணத்தோடும் ,
மாசற்ற மனதோடும் ,
அன்போடும் பண்போடும்,
அற நெறி துணையோடும்,
தாய் தமிழின் பற்றோடும்,
வெற்றி தாய் துணையோடும் ,
பெற்ற தாயின் பூரிப்போடும் ,
உற்றவர்கள் வாழ்த்துக்களோடும் ,
உள்ளம் குளிர் மென் நகையாம்
அழகு புன்னகையோடும் ,
இல்லாமை இல்லாது 
ஆவாரம் பூ போலே,
தாழ்வின்றி என்றென்றும்,
நீர் வாழ, 
வேண்டுகிறோம் இறையவனை !


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

புதன், 3 ஏப்ரல், 2013

என் தாயுமானவரே . . . .

மீண்டும் ஒரு முறை 
நீ பெறுவாய் இப்பரிசினை ,
நானும் ரசிப்பேன்
என் கண்ணார !
படம் பிடிப்பேன்
என் கை பேசியால் !

இதோ மீண்டும் வந்தது 
எனக்கு அந்த தருணம்!
பொய்த்து போகவில்லை 
உன் வார்த்தை
ஆனால், 
உன் உடல் பொய்த்து போனாதே !
மெய்யான உன் ஆன்மா 
கானுகிறதோ என்னை,

எங்கிருக்கிறாய்,
என் தாயுமானவரே ? ? ?

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நிஜம்


என் இனத்தவர்களுக்கு
இருப்பிடம் தான் எது ?

ஈர உள்ளங்களுக்கு,
நெஞ்சம் இல்லை ,
தாக உள்ளங்களுக்கு உதவ !

என் வலிகள் ,
என் கவிதையின் வரிகள்!

நாளை நம் கையில் !

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணங்குகிறேன் !

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
பாரத நாடு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!


இருப்பவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கே
அதன் வலி தெரியும்
வேதனை புரியும்.


செந்நீர் சிந்திய
சகோதரர்கள்,
தம் வீரத்தை
வித்தாக்கியே போனார்கள் !


தமிழீழம்  வேண்டி
தீவிரமாய் யாசிக்கும்,
தமிழை நேசிக்கும் - தாய்
தமிழையே சுவாசிக்கும்
தவ புதல்வர்களுக்கு,
தமிழின தேஜசிற்கு ,
வெண் புறாவாம் நம்
தமிழ் தாய் பறவையின்
இறகில் ஓர் சிறகாய்
துணை நிற்போம் நாம்!


இருப்பவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கே
அதன் வலி தெரியும்
வேதனை புரியும்.