செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நாளை நம் கையில் !

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணங்குகிறேன் !

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
பாரத நாடு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!


இருப்பவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கே
அதன் வலி தெரியும்
வேதனை புரியும்.


செந்நீர் சிந்திய
சகோதரர்கள்,
தம் வீரத்தை
வித்தாக்கியே போனார்கள் !


தமிழீழம்  வேண்டி
தீவிரமாய் யாசிக்கும்,
தமிழை நேசிக்கும் - தாய்
தமிழையே சுவாசிக்கும்
தவ புதல்வர்களுக்கு,
தமிழின தேஜசிற்கு ,
வெண் புறாவாம் நம்
தமிழ் தாய் பறவையின்
இறகில் ஓர் சிறகாய்
துணை நிற்போம் நாம்!


இருப்பவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கே
அதன் வலி தெரியும்
வேதனை புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக