செவ்வாய், 25 மே, 2010

ஹைக்கூ...



யாரை வரவேற்க
இந்த வளைவு நடனம்?
காற்றசைவில் தென்னை மரம்...

குளிர்நாயகனே...


சிந்தை சிதறடித்து
நின்தைகளை முறியடித்து,
நித்தம் எனை காண
நீ வருவாய் என்
காத்திருந்தேன் நானும்
சாகசப் பறவையாய்;
பூவிழிதனிலே எதிர்பார்ப்பை தேக்கியபடி..
ஒரு நாள்,
முழு மனதுடன்,
எனது மனிதனாய்..!
ஒரு நாள்,
முழு இருட்டாய்..
என்னை விட்டு தூரமாய்!!
மித நாட்களிலே
தோன்றி தேய்ந்து..
எந்தன் குளிர் நாயகனே!
ஏனடா இந்த கண் கட்டி விளையாட்டு??
முகம் புதைய தலையணை அணைப்பில்,
மனம் சிதைய..,
என்சிந்தயும் கலங்குதடா.....

நான் ஓர் அகதி!

சொப்பனங்கள் களைந்து
கண்கள் விழித்தால்,
அங்கோ கிடந்தன
சடலங்கள் சிதைந்து
வேதங்கள் அழிந்து,
செந்நீர் மட்டுமே படிந்து,
உயிரை இழந்து?!
மிதம் எஞ்சிய நானோ,
உயிரை மட்டுமேந்தி,
உணர்வையும் தொலைத்து
உள்ளேன் ஒரு அகதியாய்!
நான் கேட்பதெல்லாம்,
ஒரு குடை நிழல்,
முக்கால்  நுரையீரல் காற்று,
அரை வயிற்று  உணவு,
கால்கள் ஊன ஓர் நிலம்,
ரத்தம் கேட்காத நிலம்!

எந்தன் மண்ணை
அடுத்தவர் ஆள்வது சரியா?
இதை தட்டி கேட்டால்,
உயிர் பலித்தான் முறையா??
என் நாவிலோ,
செந்தமிழ் தேன் மழை;
அதன் விளைவோ .,
என் தாய் மண்ணில்,
வெடிகுண்டுகளின் மழை.
எழுதுங்கள் என் கல்லறையில்,
"இவள் அழிவிற்கு;
மொழி பற்றே - தாய்
மொழி பற்றே காரணம்"
மலரின் மேன்மையை -எங்கள்
பிணவறையில் வைக்கும்
மலரின் மென்மையில்
ஒரு பாதி,
ஒரு பாதியை
என் ஈழ மக்களிடம் காட்டி இருந்தால்??
ஒரு வேளை,
ஒரு வேளை,
இத்துனை சிறார்கள்
அனாதையாகி இருக்க மாட்டனரோ???
ஆம்!
நான் ஓர் அகதி!

அனைத்தும் இழந்தவள்!
உயிருடையும் சப்தத்தை மட்டுமே
செவிதனில் சுமப்பவள்!
சிதைந்த சிந்தனைகளை
சிரிதேழுப்ப முயற்சிப்பவள்!
உயிர் கலை  கற்று,
உயிர் களை எடுக்க,
புதிதோர் உலகம் படைக்க,
துடிக்கும் ஓர் அபலை அகதி!
ஆம்!
நான் ஓர் அகதி!

தாயுமானவனோ நீ...


எல்லை அற்ற சோகங்களுடன்
உன் நினவுலகில் தலை சாய்ந்தேன்...
கருவறையும் நினைவதனில் 
கொண்டவன் நீ தானடா...

திங்கள், 24 மே, 2010

நான் ஓவியன் எனதெரிந்தும் நீ.......................


தேய்ந்து வளரும் நிலவாகி,
வளரும் மதிக்கு வானாகி,
வான் முகிலுக்கு மழையாகி,
மழை சேரும் தாய் மடியாகி,
நீர் தேடும் செடி வேராகி,

என்தோட்ட  பூக்களுக்கு பனியாகி,
வாடும் மலருக்கு மண்ணாகி,
துவளும் எனக்கு மென்னிசையாகி ,
என் கவிதைகளுக்கு கருவாகி,
இன்று என்னுள் உருவாகி நிற்கும்
என் காதலே....
என்னை என்ன செய்ய போகிறாய்..??

எரிகிறேனடா ...


திசை தெரியாது,
எனது உள்ளுணர்வுகள் 
ஒன்றை ஒன்று
கொளுத்திகொள்கின்றன..
நானும் உடன் எரிகிறேன்
மிக சுகமாகவே...
உன் நினைவுகளில்
ஆரம்பித்து..
அதிலே சாம்பலாகிறேன்....

வியாழன், 20 மே, 2010

மௌனம் பேசியதே ...


பேசாதிருப்பது பேரழகே...
அனால்
உன் பேச்சை மட்டுமே
கேட்க ஜனித்த என்னிடமுமா??

ஏன் வந்தாய்??


கண்மூடித்தனமாய் அன்பே
நீ என்று இருந்தேன்!
காதலுடன் பல நாட்கள்
உனக்கென தவம் இருந்தேன்!
 கண்ணீர் பூக்களை அள்ளித்தேறித்து
கற்பாறையாய் நீ நிற்க;
இதற்கெனவே வந்தாயோ - அன்பு
பொங்கித் தருவது போல்
தாளாத் துயர் எனக்களிக்க ?

அற்பனிக்கிறேன்... இன்னுயிர் நீத்தும் எங்கள் மனதில் நீங்காது உயிர் வாழும்
என் சகோதரியின் கணவன் ராஜேஷிற்கு ....

இது தான் காதலா?

என்ன சொல்லி பிரிவது?

எப்படி எதிர்கொள்வது?
வருத்திவிடுவேனோ?
வருந்திவிட்டால் யார் தேற்றுவது?...
இன்னுமும் ....
இன்னும் தவிக்கிறேன் நான்...
உனது மனதிலும்
மதியிலும்
அறவே இல்லை என அறிந்திருந்தும்...

உறவின் உரிமை என்னவோ?



உடனிருக்கும் நேரத்திலும்
நினைவில் உலா வரும் நேரத்திலும்
காயப்படுதிக்கொண்டே தான் இருக்கிறாய்!
உனது பேச்சுக்களாவது 
அன்பெனும் களிம்பெனக்கு 
அள்ளித்தரும் என எதிர்பார்க்க,
வழியற்று போனது அதுவும்!
ஒரு வேளை,
ஒரு வேளை ..,
காயப்படும் உரிமை மட்டும்
கொண்ட உறவா உனக்கு நான்??









என்ன செய்வேனோ..?


அடிக்கடி நான் கண்ணீர் சிந்த,
அந்நீர் துடைக்க 
நீ வருவாயென
கரைந்தேன் கண்ணீரிலே!
காலம் தாமதிதல்லும் 
கட்டாயம் வந்தாய்..!
இன்றும் கரைகிறேன்,
பிறர் சொல் கேட்டு
பிரிந்து செல்லும் 
உன்னை நினைக்கையில்,
என்னை நேசித்த ஓர் உயிர்,
என்னை உயிரோடு பலிவங்கியதென 
மீண்டும் கண்ணீர் சிந்தவா?
அல்ல,
என் சுவாசம் மறைந்துவிட்டதென 
எனக்கு நானே 
அஞ்சலி செலுத்தவா ??
உனக்களித்த தூய நேசதிற்கென,
என் உயிரையே 
எல்லா நேரங்களிலும்
நீ காவு வாங்கிட..,
என் செய்வேன் நான்??
எங்குசெல்வேன் நான்??

செவ்வாய், 18 மே, 2010

இரவின் மடியில் !



உன்னுடன் ஆன நொடிகள் 
எனக்கு கனவில் மட்டும் தான் எனில் 
எனக்கு விடியலே வேண்டாமடா..
இருட்டுலகமே  போதுமெனக்கு..
கனவில் கழிக்கிறேன் உன்னோடு...!

ஒரு நாள்...



ஒரு நாள்
நீ என்னுடன் இருந்தால்,
உன் விரல் பிடித்து நடந்தால்
உன்னுடன் சேர்ந்து வீதியுலா வந்தால்,
உன் அருகாமையில் லயித்தால் ,
உன் பாசத்தை புரிந்தால்,
உன் நேசத்தை எனகுனர்த்தினால்,
உன் சுவாசத்தில் நான் கலந்திட்டால்,
உனக்காக நான் துடித்தால்,
உன் தோழியாய் தோள் சாய்ந்தால்,
உன் தாயாய் தலை கோதினால்,
உன் சேயாய் மடி சேர்ந்தால்,

என்னவனே!
அன்று.......
உலகின் உச்சத்தில் நான் இருப்பேன்,
இப்பிறவி பயனும் ஈடேற்றுவேன்......

வெள்ளி, 7 மே, 2010

ஹைக்கூ


 
என்னுள் வளரும் 
கனவாய்  நீ...!
கவிதைகளுக்கு 
கரு தருகிறாய்!
காதலுக்கும் உரு தருகிறாய்...
என்று தான் நனவாவாய்...
எனதே எனதாய் ...??

லாபம் யாருக்கு?


சலனமற்ற என்னுள்
சந்தோஷ சந்தை
உன்னால் ...
கடைசியில்,
வியாபாரமானது
உன்னுடனான என் உறவு !!! 

எப்படி சொல்லுவேன்...?



நீ தான் அது என்று உனக்கு தெரியும்.
உனக்காக மட்டுமே என் வரிகள் என எனக்கு தெரியும்.
பின்பு எப்படி சொல்வென் நான்.,
என் கவிதைகளின் நாயகனே,
உன்னை என்னில் இருந்து அழித்து விட்டேன் என்று?

வியாழன், 6 மே, 2010

காதல் கசங்குகிறது.....


கல் வெட்டில் பதிப்போம் 
காதல் சரித்திரத்தை..
காலங்காலமாய் காதலித்தும் 
கை கூடாது காத்திருக்கும் காதல்...
கவிதைகளில் கரைந்திருக்கும் காதல்,
காகிதமாய் கசங்கி இருக்கும் காதல்,
இங்கிதமாய் இடைவெளி பெற்ற காதல்,
உள்ளம் அதனுள் ஒளிந்திருக்கும் காதல்,
ஊடலில் தலை தூக்கும் காதல்,
மோதலில் தலை சாய்க்கும் காதல்,...
இதய ஊர்ற்றிளிருந்து பேனா வழி 
இல்லகியம் படைக்கும் காதல்...
பெற்றவரை உதாசினபடுதல் வேண்டாம் என 
உடைந்த காதல்...
காயப்பட்ட காதல் சிம்மாசனதால் 
காணமல் போன காதலர் பலர்...
 இன்றும் கவிதையின் 
போர்வையுள் ஒளிந்திருக்கும் காதல் பல... 

என்னுள் நிறைந்த நிஜமே...


நிறைந்து விட்டாய் என்னுள்,
நிரப்பியது என்ன..?
நான் அறியேன் ... 
நிறைந்த உன்னை 
நிலை நிறுத்த தவிக்கிறேன்..
தோடு உணர்விற்கும் முன்,
மன உணர்விற்கு 
என்னை அடிமை ஆக்கினாய்  ...?
ஏனடா இந்த கண் கட்டு விளையாட்டு?
எனை தேடித்  தேடி
தொலைகிறேன் நானே...! 




திங்கள், 3 மே, 2010

உனக்கே உனக்காக


மென்மையான உள்ளமும்
ஆழமான அரவணைப்பும்,

அழியா நேசமும்,

பிரியா உணர்வாய்,

என்னுள் வளரும்

உருவற்ற கருவே!

விருப்பம் இல்லை,

உன்னை ஓர் ஆண் என கூற;

உனக்கான எனது வரிகளை

இந்த சமூகம் ஏற்காது!

பெண்ணாகவும் வேண்டாம் நீ-

இன்னுமும் இருக்கிறது

பெண் இன கழிவிரக்கம்!

உருவமே வேண்டாம் உனக்கு

உள்ளம் மட்டுமே போதும் - நீ

என்னை ஆள!

தனிமையில் துணையாய்,

துயிலில் தலை அனையாய்,

தப்புக்களில் தண்டனையாய்,

வெற்றிகளில் சந்தோஷமாய்,

நோயிலே மருந்தாய்,

இறுதி வரை எனதாய்,

எனது

மனசாட்சியாய்....!!

நினைவுகளின் தாபத்தில்.........


மேல் இமையும் கீழ் இமையும்
தம்முள் காதல் கொண்டனவாம்...
கருவிழி இமை இடையில்
கதகதப்பாய் புதைந்து கொள்ள,

எனக்கு தான் இன்னுமும்

அவன் தோள் இல்லை நான் சாய!

குளம் கட்டிய கண்களோ

இமை காதலர்களின் தாபத்தை
நீர் ஊற்றி
அணைக்க முயல
ஈர பதத்திலும்
காதலாய் ஊடல் செய்கின்றன இவை!

மூடிய கனவுகளோடும்

தொலைந்த நினைவுகளோடும்...