செவ்வாய், 19 ஜூலை, 2011

என்னை விட்டு நீங்கா உறவு..!

நீயும் நானும் 
சேர்ந்து நடந்த பாதையில்
 சிந்தியிருந்த நம் புன்னகையை 
சேகரித்து உதட்டில் வைத்தேன்...
 மீண்டும் விதைத்தாய் ;
ஓர் புன்னகையை,
 என் உள்ளத்தில்..

வானவில்லாய்...


நீ தந்த
 நேசம் மட்டும்
 என்னை வழிநடத்துகிறது.
நீயோ வானில் 
ஓர் மூலையில் இருந்து
 என்னை காண்கிறாயே??

மனிதம்....

ஒருவன் என்னை 
கேலி செய்தான்! 
உன்னிடம் நான் வந்து கதறினேன்..
ஓடோடி சென்று 
மன்னிப்பு கேட்டாய்
 சற்று முன்,
நீ கேலி செய்த பெண்ணிடம்.
டேய் அண்ணா,!
 நீ மனிதன் ஆகிவிட்டாய்...

செவ்வாய், 5 ஜூலை, 2011

கவிஞருக்கெல்லாம் ஓர் கேள்வி.?

காலம் காலமாய்,
கவிதைகளுக்கு மட்டுமே
கருவாகிறாள்
முதிர் கன்னி அவள்.!
காலங்கள் கரைந்தோடினாலும்,
கனியும் வரை காத்திருந்தும்,
மணமேடைதனை
மனமேடையிடவும்,
யோசிக்கின்றன,
பல முதிர்காளைகள் 
உழுக ஓர் நிலம் தேடி.!
இவர் விழி சிந்தும் செந்நீரை 
வழியன்றி செய்ய
வருபவர் எவரோ??


  


கேட்குமா வேண்டியவர்களுக்கு?

தனிமையில் கதறிடும் நேரம்
கண்கள் கரைத்திடும் பாரம்.
உறவுக்கென ஏங்கி 
கசிந்தாலும்,
உள்ளம் உறைப்பதில்லை 
உண்மையை!
சுகமென நினைவுகள் 
மனதில் கமழ,
கனவுகள் தான் வைக்கின்றன 
என்னை அழ.!
ஆதலால்
உறக்கத்திலும் சந்திக்க வழி இல்லை!
உருக்கமாய் சிந்திக்கிறேன்,
உண்மையை நிந்திக்கிறேன்.
உங்களுடன் இருக்க வேண்டிக்கிறேன்..!