திங்கள், 14 நவம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

நிட்சத்திரங்களை ஈன்றெடுத்த
நிலவுமகள், பிரசவ வலியில்
அமாவாசையாய் மறைய...
ஈரேழு நாட்களில்,
மீண்டும் மகவு தாங்கிய,
பௌர்ணமி மங்கையாய்...!

பௌர்ணமி கவிதைகள்

அவள் ஆசைப்படுபவை,
அழகாகவும் ,
கையில் எட்டாததுமாயே..!
நீ பௌர்ணமி! 

திங்கள், 7 நவம்பர், 2016

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

புதிதாய் ஓர் நாள் விடிய,
பூக்களும் காத்திருக்கின்றன ,
ஓர் மலர் செண்டாய் ,
உன் இசை கேட்க .
உமக்கென கோர்த்த பூமாலை 
உதிரு மேயானா லுதிராது 
ஒவ்வோர் சொல் சேர்த்து 
நாங்கள் வரைந்த பாமாலை.
எங்கள் இதயமெனும் நந்தவனத்தில்,
இசைக்கு இணையாய் வீற்றிருக்கும் உமக்கு,
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி,
மலர்ந்த ஒவ்வொரு ஸ்வரத்தையும் 
கோர்த்திருக்கிறோம் கவிதையாய்.
எங்கள் கவிதைகளின் மகரந்தமே,
உமக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !