வெள்ளி, 31 அக்டோபர், 2014

விசித்திரம்

விசித்திரம் #2 
அழுக்கழிந்து சுகாதாரம் வேண்டியல்ல,
கண்ணீர் கரைந்து நிம்மதிக்கு 
அஸ்திவாரமாய் வெந்நீர் குளியல்!

செவ்வாய், 7 அக்டோபர், 2014

கானாஞ்சலி . . . !

அனைவரும் உறங்கிடும் நேரம்
தலையணை தகித்திடும் ஈரம்
உன் விரல் தந்த மாயத்தால்
உறக்கம் எனக்கு பரிச்சியம்!

தெற்கும் வடக்கும் கூடாதென்று
கிழக்கும் மேற்கும் காணாதென்று
கூறியோரின் வாக்கை பொய்யாக்கி
காவியம் படைத்தன உன் விரல்கள்!

வாக் தேவி வெறுத்தாள்
தான் கொண்ட வீணையை,
உன் விரல் விளையாடிக்கொண்டிருந்த
Mandolin கண்டு!

அரை மணி பிரார்த்தனை
ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்பு;
மனிதனே, உமது ஒவ்வொரு கச்சேரியுமே
கடவுளை உணரும் வழிதான் எமக்கு!

மௌனத்தில் புதையுண்டு
வேதனை நம்முள் விதைத்து
மீளா துயர் ஒன்றை தந்து
மாண்டது Mandolin !

தந்திகள் மீட்டிய விரல்களுக்கு
நரம்பறுந்த உணர்வோடு
வலி"மை" இட்டு வரைகிறேன்
கானாஞ்சலியாய் ஓர் கவிதாஞ்சலியை!

இவள்,
நீ விட்டுசென்ற
இசையின் அடிமை !

எழுத்தில் இதை வடிக்கும் பொழுது கண்ணீர் வடித்தது என் பேனா!
துர்பாக்யவதி என் பேனா, தன்  இரு நூறாவது எழுத்தினை அஞ்சலியாய்  பதிந்ததற்கு!

வேறு யார் "ஆண்டவன்"

பிழைப்பு தேடி வந்து 
உழைப்பின் சிகரமான நமக்கு 
எத்துனையோ துன்பங்கலளித்த 
எத்தனையே நடுங்கவைத்து 
ஆண்டவர்களை 
மாண்டவர்களாக்கி 
ஆண்டவனாகி
மாண்டவன் - அவன் 
இந்திய தாயின் தவபுதல்வனின்றி 
வேறு யார் "ஆண்டவன்" ? ?
#சர்தார் ஷாஹீத் பாகத் சிங் 

விசித்திரம்

விசித்திரம் #1
புயல் தந்த மழையில்
நனைந்த மரத்தின்
தலையை துவட்டியது தென்றல் !


ஹைக்கூ

அன்று கிழவன் பெற்று தந்ததை 
இன்று இளைஞன் விற்று வந்தான்!
மேற்கத்திய மோகம்!

திங்கள், 6 அக்டோபர், 2014

என் பேனா உயிரை மாய்துகொன்டது !

எழுதிடவேண்டும் எதையாவது,
மனதையா அறிவையா?
மனம் கனக்கிறது,
அறிவு கண்டிக்கிறது!

தேசத்தின் புற்றாய் 
வளர்ந்து செழிக்கும் ஊழலை 
தேசபற்றோடு 
அழிக்கும் காலம் எங்கு உள்ளது?

நெஞ்சின் குழியில் 
அடைந்து புதையுண்ட 
உணர்வுகள் பாரமாய் கொள்கிறது 
உயிர் வலி கொடுக்கின்றது !

மதியிடம் மனமோ கேட்கிறது,
"எழுத்தில் மட்டுமே இருக்கிறது 
உனக்கும் வீராப்பு - ஒளிகிறாய் தானே 
வேண்டாம் பொல்லாப்பு (என்று)"

வெட்கத்தில் 
கண்ணீர் சிந்திய என் பேனா 
காகித காதலியின் மேலிருந்து 
தன் உயிரை மாய்துகொன்டது !