சனி, 19 மார்ச், 2011

பேசுகிறேன், பேசுகிறேன், உன் ஜீவன் பேசுகிறேன்..!

மனிதன் படைக்க தொடங்கிவிட்டான்
இறைவன் அதை நிறுத்தி விட்டான்.
முடிவு அவன் கையில்..!
~~ அழிந்து வரும் பூமி.


என் பொறுமையை கலைத்த 
அவனுக்கு ஏது மன்னிப்பு?
வெடிப்பேன் நானும்..!
~~ பூகம்பம்.

நானும் சேர்கிறேன் உன்னோடு,
சீரும் ஆழ்கடல்,
இனி ஆவதற்கில்லை..!
~~ சுனாமி.


விதைத்தது யாரோ?
நான் இங்கு பூத்துள்ளேன்,
சிதறடிக்க.!
~~ எரிமலை.


மனிதா! 
என்னை சீரழிக்காதே.
சிதைவது நீ தான்!
~~ இயற்கை.
நிதானம்


என்னவனுக்கு பொறுமை உண்டு.
அதனால் தான்,
என் கல்லறைக்கு வந்து 
தன காதலை உரைத்தானோ?

சொல்ல மறந்த நிஜம் ...


இன்றுவரை,
அவனை நேசிக்கிறேன் என 
யாருக்கும் தெரியாது!


கரம் பற்றிய பின்னரே 
காதல் கூற நினைத்தேன்!
அதனால் தான் சொல்லவில்லை,
உன்னை நான்,
நேசிக்கிறேன் என்று.!
அறியபடா ஆயிரம் வேதனைகளில்
இதுவும் ஒன்றாய்..!

நிஜத்தின் நிதர்சனங்கள்...


இல்லத்தை பிரிந்த தருணங்களில்
பலதை கற்றுக்கொண்டேன்.
உறுமலையும் மொழிபெயர்ப்பது
முதற்கொண்டு.!
இப்போதெல்லாம்
எப்பொழுதாவது வருகிறது
என்மன கிறுக்கல்கள் காகிதங்களில்.!பல நிஜங்கள்
என்னை நீங்கிசென்றாலும்,
நிஜம் எதென்று நான் உணர்ந்தேன்.
கண்ட உள்ளம் எல்லாம் 
உண்மையுள்ளம் என,
மதி கேட்டு திரிந்த என்னை,
வெளி உலகம் மாற்றியதோ ?


உனக்கு நான்..!


மழைகால நீர் தேக்கமாய் உனக்கு நான்...
நீ கல்லை எறிந்தாலும் சரி ,
நீ சொல்லை எறிந்தாலும் சரி,
அல்ல,
என்னையே எறிந்தாலும் சரி..!

நான்
நீர் குமிழ்கள் போல்,
உன்னை மட்டுமே வட்டமிடுவேன்..!

புதன், 2 மார்ச், 2011

காதல் எனப்படுவது யாதெனில் .. . . . . . . . .

ஆண் பெண் இடையே
கணினியின் கடவு சொற்களில்
கல்லூரியில்  பார்த்து பேசுதல்,
பள்ளியில் பரிட்சைகேள்விக்கு 
பதில் சொல்லும் பொது பூத்தலும்,
பெற்றோரை எதிர்த்து சேர்தலும்,
பின் கண்ணீராய் வாழ்வை கழித்தலும்,
இது மட்டுமா காதல்?
அல்ல,
இது தான் காதலா?

மதிய உணவின் வேளையில்,
நீ உண்ணாயா, 
என எங்கும் தாயின் மனதில்,
வெளியே செல்லும் உனக்கு 
செலவிற்கு பணம் தரும் 
தந்தையின் சிந்தையில், 
தூங்கும் உன்னை 
தெரிந்தே சீண்டும் 
தமக்கையின் இம்சையில்,
சினிமா கோட்டையில் 
உன்னை பாதுகாக்க 
பெரிய மனுஷனாய் 
தெரியும் தம்பியின் செயலிலும்,
குறைந்த மதிப்பெண் பெற்றால்
திட்டும் ஆசிரியரின் அக்கறையிலும்,
பைலானாலும் ட்ரீட் கேக்கும் 
நண்பனின் வார்த்தைகளிலும்,

ஒளிந்திருக்கும்
உருவம் இல்லா,
உன்னதமான,
உள்ளம் மகிழ்விக்கும் 
உணர்வே காதல்..!
பிரிவும் பிளவும் நமக்குள்ளுமா ?


தொடர்புக்கு ஓர் முற்று புள்ளி 
வைத்தாய் வார்த்தைகளால் !
கடல் அலைகள் அடங்கலாம்,
நம் மன அலைகள் தீருமோ?
கண்கள் பரிமாறிய காதலும்,
உதடுகள் பரிமாறிய நேசமும்,
விரல்கள் பரிமாறிய அன்பும்,
நாசிகள் நெருடும் நம் சுவாசமும்,
எப்படி மறப்பேன் நான்.?
தூரங்கள் நம்மை பிரித்தாளும்,
நீ என்னை விலகி நின்றாலும்,
துயரங்கள் மனதை வதைத்தாலும்,
என் உலகம்,
உன்னை சுற்றியே சுழல்கிறது. 
நேசம் என்ற வார்த்தை 
என் சுவாசம் தீண்டும்போதேல்லாம்,
நீ தான் என் மனகண்ணில்!
காண்பவர்கள்,
காதல் தோல்வியா என்கிறார்கள்.!
ஏன்,
என் தோழமையை நான் நேசிக்க கூடாதா?
பிரிந்த உள்ளம், மறைந்த நேசம்


காதல் பேசி
காவியம் சொன்ன கண்கள்,
இன்று மூடியதேனோ?
உள்ளம் வரை இல்லாது
உதடு வரை தங்கிய உறவு நானோ?

வடிவம் இல்லா உருவமாய்,
உருவம் இல்லா உணர்வாய்,
உணர்வுகள் புரியா உறவாய்,
வார்த்தைகள் இல்லா பாஷையாய்,
பாஷை இல்லா உறையாடலாய்,

ஏன் இந்த கொடுமை?
வந்து கேள் என் தலை அணையை,
கூறும் என் கண்ணீர் கதையை.!