வியாழன், 3 ஜூன், 2010

பெயர் தேடும் வரிகள்!


எனது அறிவு பசிக்கு
நான் இட்ட
கருத்து தீனிகள்!
உலக சிறைக்குள்
அகப்பட்ட அகதியின்
அழகு அலப்பரைகள்!
யோசனை மோகத்தில்,
மனதிசுக்களில் கருத்தரித்து,
காகித உலகில் ஜனித்து,
மையால் வளர்ந்து
வதங்கி நிற்கும் பச்சிளம் சிறார்கள்!
உணர்சிகள் உள்ளடங்கிய உண்மைகள்;
உன்னத உண்மைகள் இல்ல
கசப்புத்தன்மை கொண்ட
சகிப்புத்தன்மை மிஞ்சும்
உண்மைகள்!!
சீதையை சிதைக்கும்
ராவண  சமுதாயத்தின்
கிழிக்க படவேண்டிய முகமூடிகள்;
தொலைக்கவேண்டிய முகவரிகள்!
தன்னம்பிக்கை தாங்கி
நிலம் தேடும் விதைகள்,
அவையே
எனது கவிதைகள்!

உடன் பிறவா உடன் பிறப்பிற்கு...


பெறாமல் பெற்றெடுத்த
மழலை செல்வங்களை
மனிதர்களாய் மாற்றிடும் உமக்கு,
உடன் பிறவா உறவை,
தமக்கை எனும் தாரகையாய்
சமுதாய சிற்பிக்கு ஒரு
சின்ன தங்கையாய்
தாங்க தோள் கேட்க்கும்
துரித தமக்கையாய்
இனிதாய் இம்சித்து
ரசிக்கும் இளையாளை 
எனை ஏற்பாயா??