செவ்வாய், 29 ஜனவரி, 2013

கோபம்

காற்றின் கோபம் - புயல்
கடலின் கோபம் - சுனாமி
நெருப்பின் கோபம்-காட்டுத்தீ
வானின் கோபம் - நீள் மழை
நிலத்தின் கோபம் - பூகம்பம்
ஆணின் கோபம் - பிளவு ,
பெண்ணே,
நீ மட்டும் ஏன் மௌனமாய் ?

புரட்டி பாருங்கள் .

ஆண் ஆதிக்க சமுதாயத்தின் 
தவசீலர்களே,
உங்களில் ஒருவருமா இல்லை,
இதிகாசத்தை படிக்க?
புரட்டி பாருங்கள்,
காந்தியுடன் கோட்சே இருப்பதை !

நீந்தி செல்கிறாயோ ? ? ?

உதிர்ந்த இலைகளின் இடைவெளியில்
நிழலாகிறது உந்தன் நினைவுகள் !
பூமியை ஒட்டிநிற்கும் கால்களும்
செயலிழந்தன,
நீ ஓய்ந்த செய்தியினை கேட்டு !
தோற்று போன பின்பு தான்
புரிகிறது பிழைகளின் ஆழம் !
கடலினில் கரைந்து
மண் துகள்களில் அமர்கிறது
உந்தன் ஞாபகங்கள்!
என்றோ கட்டுபடுத்திய பாசம் இன்று
காலத்திலும் ஞானபெரிதாய் !
வேறு வழியில்லை,
ஏக்கம் கலந்த வெப்ப மூச்சை
உனக்கு துணை அனுப்பி,
கண்ணீரில் கரைகிறோம் நாங்கள் . . .!
நீந்தி செல்கிறாயோ ? ? ?

வெள்ளி, 18 ஜனவரி, 2013

வெண்மைக்கு ஓர் இரங்கட்பா . . .


எந்த மனிதன் மீது 
நம் நம்பிக்கை வித்தாகிறதோ 
அவர் கடவுளாம் . . .
ஆதலினால் அம்மனிதர்கள் கடவுளாகின்றனரோ 
வெகு விரைவில் ? ? 

தலைமகன்  என்று
அறிந்தனவே யாம் உம்மை,
தலை வணங்கி 
போற்றினார் பலர் !
தேனியாய் உழைத்த நீ,
என்றும் உலகம் உணரும் மானீ  !

மண்ணுலகம் வாழ்த்திடவே, 
இவ்விடத்தி உன் புகழ் இருத்தி,
மண்ணில் நீ உமதுடல் நீங்கி ,
விண்ணுலகம் சென்றாயோ,
மேலுலகிளிருந்து எம்மை காண?
மக்கள் கூட்டம் திரள,
மேட்டுபாலயமே, 
தனது மருத்துவ தலைவனின்,
தனதுயிர் காத்த தவ புதல்வனின் 
பளிங்கு முகம் இறுதியாய் காண,
இல்லத்தில் சூழ்ந்ததோ?
உன்னால் காக்கப்பட்ட 
உயிர்கள் அனைத்தும்
கண்விழித்து நோக்கையிலே,
ஹையோ ,
நீ கண்மூடி உறங்குவதேனோ ?

விழித்தெழுந்து செவி சாய்பாயோ ,
பெருங்குரலெடுத்து கதறும் மக்களுக்கு?
வெண்ணிற  மேல் அங்கி இட்ட 
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால் 
மூடப்பட்ட சடலமாய் . . .
அகன்ற விழிதனில் அனைவரையும் கண்டாயாம் ,
விழி வழி கூறிய செய்திதனை 
மொழி பெயர்துணர முயல்கிறோம் நாங்கள்,
நிரந்தர பிரிவை தான் பறை சாற்றினாயோ?
கண்ணீரால் கழுவுகிறோம் நாங்கள்,
அய்யனே உன் பெயரேன்றேன்றும் 
வாழ்ந்திடவே இவ்வையகத்தில் . . .

கவிதாஞ்சலி - மண்ணுலகில் இன்னுயிர் நீத்து விண்ணுலகில் வாழ்ந்திட சென்றிருக்கும் என் தாய் மாமா Dr .N .S .Harihara Iyer அவர்களுக்கு 

வியாழன், 17 ஜனவரி, 2013

என் பொங்கல் !

கள்ளி காட்டு மூலையிலே
கலைநய கோவில் ஒன்றும்,
பள்ளி தந்த கல்வியை போல்,
சொற்கள் கொண்டு,
கோமாதா பாலினை இட்டு,
காவியங்கள் பல கொண்டு,
கணக்காய் பாகெடுத்து ,
நெய்தல் நில பூமகளின்,
நெய் சேர்த்து,
பாலைவன பகலவனின்
தீ சுடர் இட்டு,
வாழ்கை நெறியாம் வள்ளுவத்தை,
வாழை இலையில் இட,
கூடிய மக்கள் அனைவரும்,
பண்ணிசைத்து நின்றிருக்க ,
எந்தன் தமிழ் அன்னையே ,
கவி பொங்கள் நாம் இட்டோம்,
சுவைக்க ஓடி வாரும் அம்மா !

நீயும் நெற்கதிரும்

ஏர் பூட்டி
விதை விதைத்து,
தண்ணீர் பாய்ச்சி ,
பின்பு வந்தது முட்டி மோதி,
நாத்து என்றார்கள் !
பிறந்த இடம் விட்டு,
மகிழ்ச்சி பொங்க
வேறு இடம் நட்டார்கள் அதை !
நீர் இன்றி உரம் இன்றி,
ஒத்து வாழ இடம் இன்றி,
திக்கி தெனரிய நாத்து ,
செழிப்போடு வளமாய்,
தங்க நிரமேந்தியது !
ஏய் பெண்ணே,
நீயும் நெற்கதிரும் ஒன்றோ ?

மௌன கவிதை

மனதின் திறப்பு வாசலான,
என் பேனா மூடியை
திறவமாட்டேன்
இன்றே நான் எழுதும்
இறுதி கவிதை என்றேன்
வெகு நாட்கள் முன்பு,
ஓர் வெள்ளை காகிதம் கையிலேந்தி.
இன்னும் அந்த காகிதம்
மௌன கவிதை வாசிகிறது,
 வெள்ளையாகவே . . . . 

என் ஈர மழை சாரல் !

வெள்ளை தாளை வந்தேன் நான் ,
விழுந்தது என் மனதில்,
உலகின் பல அச்சுகள் !
என்னுள் நான் எழுதிய
பிழையான பக்கங்களை,
அழித்து அமைக்க வந்தாயோ,
என் சகியே,
நீயே என் ஈர மழை சாரல் !