வியாழன், 5 டிசம்பர், 2013

என்னவென்று நான் சொல்ல. . .

கனத்த மனதுடன் இருந்த ஹ்ருதயம்
உந்தன் வார்த்தைகளில் சமணபட்டு போனதை
என்னவென்று நான் சொல்ல. . .

காதலாகி கசிந்துருகி கடைசியில்
வென்ற அன்பின் கதை - இதை
என்னவென்று நான் சொல்ல . . .

களைப்படைந்த கால்களோடு இருந்தும்
கருவிழி உந்தன் கதை தேடுவதை 
என்னவென்று நான் சொல்ல . . .

உந்தன் கதைகளை படிக்கையிலே,
மனதில் பரவும் இதத்தை,
என்னவென்று நான் சொல்ல . .

காவியமாய் நீங்கள் வடித்தபோழுதும்,
கதை என்று சாதாரணமாய் சொல்லும் என்னையே,
என்னவென்று நான் சொல்ல . . ?

எழுத்தரசியின் இளைய மக்களாய்,
மாலினியும் பிரபாவும் ஜனித்தை
கதையென்றா நான் சொல்ல ? ? ?
 — feeling wonderful with Muthulakshmi Raghavan.

எழுத்தரசி முத்துலட்சுமி ராகவன் அவர்களின் என்னவென்று நான் சொல்ல நாவல் படித்த பின்பு அவர்களுக்காக எழுதியது . . . 

சனி, 16 நவம்பர், 2013

எங்கள் பாரதத்தின் இரத்தினமே . . .

மட்டைபந்தாட்டதின் அட்டைபக்கம்
இன்றுடன் ஓய்வு பெற்று
அகற்றபடுகிறது . . . !

விறகுகட்டையையும் பந்தாடும் மட்டையாக்கும் 
அந்த துடிப்பிமிக்க கரங்கள்,
இன்று பிரியாவிடையில் கை அசைத்தது !

பதவிமமதையில்பாதை மாறும்
பாவிகள் மத்தியில் ,
புகழின் உச்சியிலும் சுத்தமாய் நின்றாய் . . .!

தந்தையின் கல்லறையில்
நீ சிந்திய கண்ணீர் காயும் முன்னே,
உன்மட்டையில் பட்ட பந்துகள் பாய்ந்தது முன்னே !

விருதுகள் உனக்கென படைக்கப்பட்டதா,
நீ மட்டை பந்திற்கென படைக்கப்பட்டாயா ,
இரண்டையும் பெருமைபடுத்திய இந்திய குடிமகனை,

கண்ணில் கண்டதையும்,
கற்பனை கொண்டதையும்,
விடைதேடி விழிதேழுகையிலே ,

விடைபெற்றேன் நான் என்று,
இரத்தின சுருக்கமாய் செய்தி தந்தாய்
இந்தியருக்கு மட்டுமின்றி உலகிற்கோர் அதிர்ச்சியாய் !

உந்தன் பெயரிலும் பிரமிப்பு ,
நீ இருக்கும் இடமெல்லாம் பூரிப்பு,
நீ காணும் களமெல்லாம் ஆர்பரிப்பு !

விளையாட்டில் வேர்த்த உன் உடல் காண்கையில்
உள்ளம் பதறினாலும் கர்வம் கொள்ளும்,
இவன் இந்தியத்தாயின் தவப்புதல்வன் என்று . . . !

இன்றோ, விளையாட்டின் இறுதியில்,
உன் கண்கள் வேர்கையிலே, எந்தன்
சப்தநாடிகளும் அதிர்ந்து ஒடுங்கியது !

கடவுளிற்கும் ஒய்வுண்டோ,
இனி, ஒளி தரும் பரபிரம்மமாய்,
மட்டைபந்தாட்ட மதத்தவர்களுக்கு நீ!

உன் காலத்தில் வழ்ந்தவள்
என்ற கர்வத்தை எம
தர்மனிடமும் நான் காட்டுவேன் . . !

நீ காட்டியது மாற்றம் அல்ல,
மறுமலர்ச்சி - மட்டைபந்தாட்டதின்
ஓர் மலர்ந்த சகாப்தம் !

உன் பிறந்தநாளை கொண்டாடிய எங்களுக்கு
அன்று உறைக்கவில்லையே
உனக்கு வயதாகிவிட்டதென?

மனமின்றி விடைக்கொடுக்கிறோம்,
நன்றி என்றொரு வார்த்தை கூறி,


எங்கள் பாரதத்தின் இரத்தினமே,
நன்றி என்றொரு வார்த்தை கூறி,
உன் சாதனைகளை குறைத்து அளவிடமுடியாமல் . . . !

கண்ணீரோடு,
உந்தன் எழிலின்
ஓர் நிழல் . . . !

#MissUSACHIN
 — with Srinivas Singer and 5 others.

வியாழன், 14 நவம்பர், 2013

எழுத்தரசிக்கென ஓர் எழுத்து !

எழுத்தரசியே ,
உம்மை கடவுள் எழுதிய நாள் இன்று 
நீ வளர்ந்தாய் தடைகளை வென்று!

சிரிக்க மறந்த மனதை,
சிந்திக்க வைத்தாய் !
துடிக்க மறந்த நெஞ்சை 
அன்பிலே நனைய வைத்"தாய்" !

காதலுடன் நேசம் கற்பித்தாய்,
பாசத்தை சுவாசம் செய்ய வைத்"தாய்"!
எண்ணங்களுக்கு எழுத்தூட்டினாய்,
எமக்குள் நம்ம்பிக்கையை துளிரவைத்"தாய்"!
என்னை நீர் பெறவிடில்லும்
நீரும் என் அன்னையே!

சீரிய சிந்தனையுடன் நற்பண்புடனும்
எழுத்தென்னும் ஆயுதத்தால்,
நல் எண்ணன்ங்கள் விதைத்து,
தீமையை கலை அறுத்து,
என்றும் நீவிர் வழிகாட்டி ,
வெற்றி படியேறி விண்ணுயர்ந்து,
வானிலும் மை இட்டு எழுதிட ,
வேண்டுகிறோம் இறையவனை . . . 


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !

அழகிற்கோர் ஹ்ருதயாசனம் . . .

மானாமதுரை மாமர கிளையின் தொங்கும் மாங்கனியின் தேன் சுவையாய் ,
ஆலங்கட்டி மழையை, உச்சி கிளகையில் 
பூமிதனில் புதுசாய் புதுசாய் 
இசையை சொட்டவிடும் அழகே,
சுகமா
ன இசைபாடல்
செவிதனில் தீண்ட செய்யும் ச்நேஹிதனே
பூவினை கொய்தாலும்,
ஜெகமெங்கும் குஷியோன்கோஹி,
குஷி
தரும் ஒரு பொன் கிளி போல்,
வான் நிலா அசத்துறார் போல்,
நச்சென்று உமது முத்திரை பதித்த பண்பாளனே ,
நீவிர் நினைச்சபடி நெனச்சபடி ,
இசை வரமென அமைய,
இசைக்கு நீர் புதல்வனாய் திகழ,
கனவா, இல்லை காற்றா என்று,
உம் குரல் கேட்டு நாங்கள் கை தட்டி தட்டி,
உமது ஒவ்வொரு தைய தையாவையும் ,
முதல் முறை கேட்பது போல் உறைந்து நிற்க,
மனிதா மனிதா, உன் பிரியசகியுடன்,
கிடைக்கலெ கிடைக்கலெ என்று கூறாது ,
எந்தன் நெஞ்சில் (காலையில்) அரும்பிய
காதல் தேவதை இவள் ,
என்னை பந்தாட பிறந்தவள் - என்னுயிரே,
உயிரிலே எனது உயிரிலே
கலந்தவள்,
என்று கண்ணோடு கண்கள் பேசிக்கொண்டு,
இன்றோடு தடைகளை தூக்கி எரிந்து,
ஓம் முருகா என்று இறையருள் பெற்று,
இந்த நிமிடம் போல் என்றென்றும் புன்னகை பூத்து,

"
"ஸ்ரீ"நாதமாய் ஸ்ர்ங்கார ரசம் சொட்ட,
"நி"ன் குரல் கம்பீரமாய் செவிதனில் தீண்ட,
"வா"னமும் வையகமும் உன்னிசை போற்ற,
"ஸ்"ருதி யோடு லயம் கூடும் மெல்லிசையாய்,

ஆ"வா"ரம் பூ போலே,
தா"ழ்"வின்றி என்றென்றும்,
சு""மாக வாழ்ந்திடவே
"வே"ண்டுகிறோம் இறையவனை 

வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். . .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! !
 — feeling excited with Srinivas Singer

வியாழன், 12 செப்டம்பர், 2013

என் கல்லூரி தாயை, நினைத்தாலே இனிக்கும் . .

கல்லூரி காலத்தில்,
முகம் காணா ஆருயிர் நட்புக்கள்,
உழைத்து ஓய்வு பெரும் தருணத்திலும்,
ஆயிரம் யானை பலம் கூடுது 
என் கல்லூரி அன்னையே,
உன் மடியில் திரிந்த நாட்கள் எண்ணுகையில்!

வினாடிநேரத்தில் விட்டு செல்லா 
நேசமிகு நண்பர்களின் கூட்டம்
எமக்களித்த தேவதையே,
ஆண்டுகள் ஆறாகினும் ,
அனுபிசகாது நீடிக்கும்,
அழகு பந்தமாய்,
ஆத்மார்த்த நண்பர்கள்,
அன்பின் இலக்கணமாய்,
அறிவார்ந்த ஆசிரியர்கள்!

நன்றி மலர்களை
நாவினிக்க துவுகிறேன்,
உன் வளர்ச்சியை மேலும் காணவே . . !

ஒரே பிரசவத்தில், எண்ணற்ற குழந்தைகளை தந்த என் கல்லூரி தாயை, நினைத்தாலே இனிக்கும் . . 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசையெனும்
நந்தனவன தேரின்
பூஞ்சோலையானவளே!
இசைக்குயிலாய்
இன்பம் கொடுப்பவளே!
ஈகை கொண்டு இசை கேட்க,
எல்லோருள்ளும் இசைவார்க்கும்,
இசையின் இன்பசுடரே!

வாழ்வதன் பயன்,
நான் அல்ல நாம் வாழ,
இசையினால்,
நீர் மட்டுமின்றி,
யாமும் இன்புற,
அமுதும் கானமுமாய்,
பாட்டிசைக்கும்,
கானக்குயிலே!

இன்னுமொரு ஆண்டு
உமக்காய் - இல்லை
எம் போன்ற உமது ரசிகர்களுக்காய்,
இனிதே மலர்ந்திருக்க,
பண்பாய் அன்பாய்,
புதியதாய் பெரிதாய்,
நீர் விண்ணுயர ,
வேண்டுகிறோம் முழுமனதாய்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Raihanah Shekar Mam!
 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசையெனும்
நந்தனவன தேரின்
பூஞ்சோலையானவளே!
இசைக்குயிலாய்
இன்பம் கொடுப்பவளே!
ஈகை கொண்டு இசை கேட்க,
எல்லோருள்ளும் இசைவார்க்கும்,
இசையின் இன்பசுடரே!

வாழ்வதன் பயன்,
நான் அல்ல நாம் வாழ,
இசையினால்,
நீர் மட்டுமின்றி,
யாமும் இன்புற,
அமுதும் கானமுமாய்,
பாட்டிசைக்கும்,
கானக்குயிலே!

இன்னுமொரு ஆண்டு
உமக்காய் - இல்லை
எம் போன்ற உமது ரசிகர்களுக்காய்,
இனிதே மலர்ந்திருக்க,
பண்பாய் அன்பாய்,
புதியதாய் பெரிதாய்,
நீர் விண்ணுயர ,
வேண்டுகிறோம் முழுமனதாய்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Raihanah Shekar Mam!
 

பிரியா பிரியத்துடன்

நீ இல்லாது நீளமாய் என் நொடிகள்,
ஹ்ருதயத்தில் கனீர் வெடிகள்!
சுற்றிவரும் கடிகாரமுள் போல்,
நீ ஆன்லைன்வரும் நொடிக்காய்,
சுழலும் என் கரு விழிகள்!
பிரிந்திருந்தாலும்,
பரிவுடன் எங்கும்
உன் மனம் எண்ணுகையிலே,
கண்கள் கரிக்கும் கண்ணீரும்,
கசக்கவில்லையடி!
உன்னை காணும் நொடிக்கென,
காத்திருக்கிறேன் சகோதரி! 

புதன், 4 செப்டம்பர், 2013

உங்கள் ஆசிகளுக்காக ஆசைகளோடு . . !

சிலையும் சிதையாமல்,
கல்லும் அதிராமல்,
பளிங்காய் செதுக்கினீர் . !

ஆயிரமாயிரம் மக்கள்,
ஒன்றான நோக்கமாய்,
என் மாணாக்கர் இவர் .  !

தண்டனை எமக்கு,
வேதனை உமக்கு,
தாயுள்ளம் கொண்டனர் நீர் . . !

 நாங்கள் மின்ன,
வெண்முத்துக்களாய்,
முத்துகுளித்தீர் நீர் . . !

காய் தொங்கும் கொடியாய்
சேய்  தாங்கும் தாயாய்,
தயாள உள்ளம் கொண்டவர் நீர். . !

உமது உழைப்பின் முடியலில்,
வியர்வை குளியலில்,
மனிதர்களாய் நாங்கள் . . !

எமது வெற்றிப்பாதையில்,
உமது கை சுவடுகளே ஏராளம்,
எனது பாதங்களை பாதுகாத்ததால் . . !

இறை பணியில் இனிதாய் தம்மை அற்பணித்த அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கு எனதினிய ஆசிரியர்தின வாழ்த்துகள் ! ! !

உங்கள் ஆசிகளுக்காக,
ஆசைகளோடு,
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

நட்புக்கள்

தவழும் வயது முதல் துணையாய்,
என்றுமே அன்பு வற்றாத சுனையாய் ,
இளஞ்சூடு தரும் இதமாய்,
இனிப்பின் பதமாய்,
வழிந்தோடும் நீர் அலையாய்,
பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்,
நெஞ்சோடு கலர்ந்திட்ட நேசமாய்,
நாசி நுகரும் சுவாசமாய்,
என்னுள் நிறைந்த 
எனதாருயிர் நட்புக்களே ,
வாழ்த்துக்கள் !


இது அன்பின் காலம் . . .

வானம் அழகாய் மாறிற்று - விண்மீன்களும் 
வர்ண ஜாலமாய் ஒளிர்ந்தன ,
நிலவும் குளிர்ந்து,
பஷு பட்சிகள் அன்பாய் சிரித்தன . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

எங்கோ பிறந்தோம்,
எங்கோ வளர்ந்தோம்,
எனிலும்,
நேசம் கொட்டும் சகோதர சகோதரிகளாய் . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

உனக்கென நானும்,
எனக்கென நீயும்,
பாசம் கொண்டு வாழ்வோம் 
இப்புவிதனிலே, புனிதமாய் . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

என்றுமே உனக்காய் 
பரம்பொருளிடம் என் வேண்டுதல்,
சகோதரனே நீ இன்புற்று இருக்க,
இதமாய் எழுதுகிறேன் உனக்காக . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

பிறந்த நாள் மடல் !

வாழ ,கிடைத்த பயன் ,
நான் அல்ல நாம் வாழ,
என்று உணர்த்துபவர் நீர்!

நீரும்  சிரித்து,
எம்மையும் சிரிக்க வைக்கும் 
வித்தாக கலைஞர் நீர் !

சீரியதாய், வீரியமாய்,
பற்பல கற்பனைக்கு 
வித்தாகும் வித்துவான் நீர் !

வருடங்கள் வந்து போனதில்,
இழுக்கில்லாத செயல்கள் 
மட்டுமே செய்யும் கனவான் நீர் !

அன்பும் பண்பும் கலந்த 
அழகும் அடக்கமும் பொங்கும்,
கலை வள்ளல் நீர் !

உள்ளங்கள் உடையாதிருக்க,
உந்தன் நேரங்களை எமக்களிக்கும்
உன்னத  உத்தமர் நீர்!

உச்சிதனில் இருப்பினும்,
மனித நேயத்தை 
மறவா மனிதர் நீர்!

உதடுகளில் புன்னகை உறைய,
உள்ளத்தினில் அமைதி நிறைய,
உம்மை தேடி இன்பங்கள் விறைய,
உமது சோகங்கள் அதில் மறைய ,
வேண்டிகிறோம் இறையவனை ! !

வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு . . . . 


ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீ என்பதும் நான் என்பதும் . . .

காதலனாய் இருந்து 
பதவி இறக்கம் பெற்ற 
கணவன் மார்கள் ஏராளம்!
நீயும் நானும் நாம் ஆகும் பொழுது, 
புல்வெளியிலும் பனித்துளி பிறக்கும் 
என்றார்கள் அவர்கள் ,
கண்களிலும் கண்ணீர் துளியும் வற்றாது 
என்பேன் நான்!
நாம் என்ற பின்பு 
உதடுகளும் மட்டுமே ஒட்டியது !
மனம் திக்குகள் எட்டில் 
தனிமையை எட்டியது !
வீட்டில் விட்டு சென்ற சண்டையை தொடரவே 
இன்றளவும் தேடுகின்றனர் தம்பதியர்
தம் அலைபேசிகளை!
பூங்காவில் விட்டுசென்ற மௌனத்தை 
தொடர நினைத்த காலம் மறந்தனவாய்!


புதன், 31 ஜூலை, 2013

ஒரே வெள்ளியில் விடிவெள்ளியாய் . . .

கோஷாலையின் நாயகனாம்
அழகு சிறுவன் கண்ணபிரானுக்கு
மார்கழி மாதம்,
ஏழை தேவனாய்
மாட்டின் கொட்டகையில்
பிறந்த ஏசு கிறிஸ்துவிற்கு
டிசம்பர் !
எளிமை உருவாய் வாழ்ந்த நபிகள் நாயகம்(சல்)
நோம்பிற்கு உகந்ததாய் கருதும் ரமதான்,
நம் சான்றோர்கள், சர்வ லோக நாயகியை
குளிர்விக்கும் ஆடி மாதமாய்!
புனித ராமதானும் திருநாளும்  ,
அன்னை ஆதி பராசக்திக்கு வளைகாப்பும்
ஒரே வெள்ளியில்!
விடிவெள்ளியாய்!
இனியுமா வேண்டும் மத கலவரங்கள்?

வியாழன், 18 ஜூலை, 2013

இறை கவியே ! !

தேவலோகதினற்கு
தேனமுதம் கேட்க
ஆசைதோன்றிவிட்டது போலும்
அதுவும், தமிழ் இசை கானங்கள்!

முதலில் அழைத்து கொண்டனர்,
இசை சக்ரவர்த்தியை,
அண்ணல் ராமமூர்த்தி அவரை!
பின்பு தேன்குரல் எடுத்து
தெவிட்டாகானம் பாடும்
ஸ்ரிநிவசரையும் சௌந்தர ராஜரையும்!

தேவர்களே,
உமக்கு
திகட்டாநெல்லைத்  தமிழ் பேசும்
எமது வாலிப கவிஞரும் வேண்டுமோ  ஓய் ?

எங்கள் பிரார்த்தனைகள்
அவரின் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனைகள்
உமக்கு வந்தடையும் முன்,
அவர் உம் பாதம் கலந்தாரோ ?

தமிழ் தாயின்
தவ புதல்வரே,
தமிழுக்கென
பாட்டெழுதியது
அறுபது ஆண்டுகளாய்
 உமது பேனா !

நெடு தூர பயணங்களிலும்,
நித்திரை இல்ல இரவுகளிலும்,
சாய்ந்து அழ
தோள் தேடும் தருணங்களிலும்,
சிரிப்பலைகள் சிதறவிடும் நேரங்களிலும்,
உணர்ந்ததுண்டு
வாலியின் மை கொண்ட வலிமையை
அதன் இளமையை,
என்றென்றும் இனிமையாய்!
இனி எப்பிறவியில் காண்போம்?

வாலிப கவிஞன் வாலியே,
உம்மிடத்தில் வாய் கொடுதோர்
என்று காலியே !
இருந்தும் நீர் எம் மனபாதிரங்களை
நிரப்பும் ஆழியே !

வலி தாண்டி,
நீர் தமிழ் தீண்டி,
உலா வார காத்துகிடந்தோம்
எல்லோரையும் காக்க வைத்தாயே நிரந்தரமாய் ?

வாலிப கவியே,
எமது வாலியே,
நீர் வலி நீத்து
வலிய வருவீர்
என எண்ணினோமே,
வலி தந்து நீத்ததேன் உமதுயிரை ?

யார் பிடிப்பார்
உமது சிம்மாசனத்தை,
சிங்கமே துயில் கொண்ட போது,
"அழகிய" மனிதராய் நீர் "சிங்கார்"+இ த்த
அரிதொரு சிம்மாசனத்தை  ?

 தமிழ்இனத்தின் தலைவனுள்
தலையானவர்  நீர்
இனி தீர்க்க ஒளியாய்
எம்மை வழிநடத்தி செல்ல,
ஜோதியாய் மின்ன போய்விட்டீர்  !

நெஞ்சம் கனக்கிறது,
கண்கள் கரிக்கிறது !
இறையிடம் சென்றடைந்த
உமது ஆன்மாவை என்றும்
எம் அருகில் உணர்வோமே யாம் !

இறை கவியே,
தெய்வ புலவரே,
பிழை இருந்தேனும்,
பொறுத்து ஏற்றுகொள்ளும் ,
எமது கண்ணீர் விட்டேழுதிய கவிதாஞ்சலியை !

இவண் ,
உமது பிரிவால் வாடி துயர் கொள்ளும்
பலரின் உணர்வலைகளில் ஓர் அலை !

திங்கள், 24 ஜூன், 2013

நிழலின் நிஜமே

என் நிழலின் நிஜமே
உன் கண்ண கதுப்புகளிலும்
என் பிம்பம் தானடி!
உன்னை காண்கையில்,
என்னை கண்டு கொள்கிறேன்!
பளிங்காய் உன் முகத்தில்,
நானே  பிரதிபலிக்கிறேன்!
இயற்பியலும் முப்பெட்டகமும்
தோற்றதடி உன் முன்னே!

வெட்கம்

செவ்வாய்தனில் 
புன்னகை பூக்க,
திங்கள் முகம் அதை,
திவ்யமாய் தீண்டிட,
ஞாயிறாம் இவன் முகத்தில் 
வெட்க பூ பூக்கிறதே !!!

செவ்வாய், 18 ஜூன், 2013

தேடல்

உன்னை தொலைக்கும் தருணத்தில்,
ஓராயிரம் உறவுகள் உடன் இருந்தும்,
நான் தேடுவது ,
தனிமை தாயின் மடி தான்!


ஹைக்கூ

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி வெளிவருகிறது
உன் நினைவுகள் - கண்ணீராய் !

வாழ்கை!

தயங்காமல் சொல்கிறாய்
வழி இல்லா  இடத்திற்கு போக!
இனியவனே,
வலியோடு,
நிற்கிறேன்!


விடியலுக்காக வாடுகிறேன்

அமைதியான என்னுள்
ஆர்பரிக்கும் அதிர்வுகள்
அணுக்கள் அசையும்
அதிசியங்கள் !

கலவரமாய் வந்ததே 
உன் வார்த்தைகள்,
கவலையும் தந்ததே ,
பூகம்பத்தை போலே!

தவிப்பாய் இருந்தேன்,
துணையாய் வந்தாய்,
ஆனால்
துடிப்பையே துண்டித்தாய்!

கண்ணுக்குள் வந்த காதல்,
கனவை தந்தது;
கனவாய் இருந்ததை,
களவாடி சென்றது!

கண்விழித்து காண்கையிலே,
கனவும் இல்லை,
காதலும் இல்லை,
காவியமாய் நீயும் இல்லை !

விடியலை நோக்கி
பயணிக்கிறது கண்கள்,
என் கண்ணே,
நீ தந்த கண்ணீரை சுமந்தபடியே . . . . !

திங்கள், 10 ஜூன், 2013

நம்பிக்கை

ஆசையாசையாய் நட்டேன் ,
என் தோட்டத்தில் செடி ஒன்றை,
உயரும் நெடு மரமாய்,
பூத்து குலுங்கும்
குல்மொஹர் மலர்களை
காண ஆசைப்பட்டு!
திரும்பா வசந்தமோ?
என் வீட்டில் மட்டும்
குயிலின் கூக்குரல் இல்லை!
இருந்தும் காத்து கிடக்கின்றோம்,
நானும் என் தோட்டத்தின் நீர் பானையும் !

பசும்பொன் நினைவுகள்


கட்டன் தரையோ,
குஷன் சோபாவோ 
இரவு,
எங்கு உறங்கினாலும்,
பகலில் நான் விழிப்பது
பஞ்சு மெத்தையில் தான் ! 

வெள்ளி, 7 ஜூன், 2013

காதல் !

அன்பை குறிக்கும் பொதுச்சொல் 
தோல்வியில் எப்படி பதில் சொல் !
காதல் 

வியாழன், 6 ஜூன், 2013

இரும்பிலே ஓர் இதயம் . . .

பெண்ணே,
என்னை மறந்து
உன் ஜோடியுடன்
ஜோதியாய் மின்னுகிறாய்.
தயவு பண்ணி
இரவல் தா
உன் இரும்பு இதயத்தை,
உன்னை மறந்த பின் திருப்பிவிடுகிறேன் !


சிட்டி தாக்கம்

விளையாடு பாப்பா நீ
ஓடி விளாடு பாப்பா!
நாளை
நீ நிற்க கூட
இடம் இருக்காது
இப்புவிதனிலே !
ஆதலினால்
என் தங்கமே,
இன்றே நடை பழகு !

" சிட்டி வில்லே "

நிஜத்திலே
மரங்கள் வெட்டி,
நரகங்களாய் நகரங்களை
தோற்றுவித்த மூட மனிதர்களே,
கணினியிலுமா வேணும் 
சிட்டி வில்லே ? ? ? ?

சிறகாய் ஓர் இறகு !

கூடு கட்டாமல்,
இளைபாற்றாமல்,
இறை கொத்தாமல்,
கருப்பும் வெள்ளையுமாய்
சிறகுகள் கொண்ட,
கால பறவையே ,
நீ விசித்திரம் தான் ! ! !முன்னும் பின்னும் . . .

முன்நோக்கி  பயணம்
பின்னோக்கி நினைவுகள்
இரயில் நிலையத்தில்!

புதன், 5 ஜூன், 2013

தேடுகிறேன்

மௌனம் உடுத்திய உதடுகள்
என் வார்த்தைகளை ஊமை ஆக்கின,
கரு விழிகள் உலர்ந்து நின்றன !
வறட்சி குறைய
கசிந்த ஈரங்கள் ,
உதிர்ந்த வார்த்தைகள்,
அதிரங்கள்  வழி,
ஆழ் மனதை 
அதீதமாய் சேத படுத்திவிட்டன!
பிரபஞ்சம் நீங்கி சென்ற பின்னாவது 
சேதிகள் கேட்குமோ 
என் செவிதனில்?


இரவின் மடியில்

சத்தம் இல்லாது 
சங்கடத்தில் பிறந்தது,
சாட்சியாகமலே காய்ந்தது!
நிறமற்ற என் கண்ணீர்!

வியாழன், 30 மே, 2013

பகலும் இரவும்

பகலும் இரவும் 
காதல் கொண்டணவாம்.
பகலோ மாலை வரை எதிர் 
பார்த்து இரவினில் ஒளிய 
இரவோ காலை வரை 
காத்திருந்து பகலினில் மறைய,
காணாத காதல் காவியமாய் 
இன்றும் இருவரும் !

புதன், 15 மே, 2013

சட்டினியும் பத்தினி

என் மனைவி அரைத்த
சட்டினியும் பத்தினிதான்
என்னை தவிர
யாரும் தொட முடியாது !

நிழல் !

அடடே சூரியனும் ஓவியனா?
உன்னை காரிருள்
ஓவியமாய் வரைகிரானே!

மூச்சு

அதீதமாய் சுவாசிக்கிறேன்
நீ அருகிலிருக்கும் பொழுது -
உன் மூச்சு காற்றில் கலந்திருப்பதால் .

காயம்

நீ தரும் மருந்திற்கு ஆசைப்பட்டு 
காயப்பட்டு கொள்கிறேன் -
அம்மாவின் முத்தம் .


அழகு

உன்னை பற்றியதென்றாலும்
உன் போல் அழகில்லையே
என் கவிதைகள் !

மௌன விரதம்

உதடுகளோடு 
இமைகளையும்  மூடிகொள்
விழிகளும் பேசுகின்றனவே !

மறை

மறைந்த உடல்,
மறையாத புகழ் -
விண்வெளி வீராங்கனை !

மண்

என் கல்லறையும் நீயே 
நான் இட்ட விதைக்கு 
கருவறையும் நீயே !

நீர் வீழ்ச்சி

நிலத்தின் எழுச்சி
நீரின் வீழ்ச்சி
அழகு தான் !

கண்ணீர்

வன்னங்களின்றி
கன்னங்களில்
விழிகளின் ஓவியம் !

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

திரும்பி பார்கிறேன் . . .லக்ஷ சிரிப்பலைகள்,
பல்லாயிரம் திட்டுக்கள் ,
ஓராயிரம் வேலை ஆய்வுகள் ,
எத்துனை எத்துனை ஆராய்சிகள் ,
ஆய்வுகூடங்களில் தில்லு முல்லுகள் ,
எத்துனை எத்துனை பிறந்தநாள் விருந்துகள் ,
முடிந்த கல்லூரி வாழ்கை,
பிரியும் தருணத்தில் நண்பர்கள்,
பிரிவின் வலி இதயத்தில்,
இந்த உணர்வை,
காகிதத்தில் கவிதையாய் வடிக்கவா ?
இல்லை விழிகளில் கண்ணீராய் சிந்தவா ?

திங்கள், 8 ஏப்ரல், 2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

பவித்ர குணத்தோடும் ,
மாசற்ற மனதோடும் ,
அன்போடும் பண்போடும்,
அற நெறி துணையோடும்,
தாய் தமிழின் பற்றோடும்,
வெற்றி தாய் துணையோடும் ,
பெற்ற தாயின் பூரிப்போடும் ,
உற்றவர்கள் வாழ்த்துக்களோடும் ,
உள்ளம் குளிர் மென் நகையாம்
அழகு புன்னகையோடும் ,
இல்லாமை இல்லாது 
ஆவாரம் பூ போலே,
தாழ்வின்றி என்றென்றும்,
நீர் வாழ, 
வேண்டுகிறோம் இறையவனை !


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

புதன், 3 ஏப்ரல், 2013

என் தாயுமானவரே . . . .

மீண்டும் ஒரு முறை 
நீ பெறுவாய் இப்பரிசினை ,
நானும் ரசிப்பேன்
என் கண்ணார !
படம் பிடிப்பேன்
என் கை பேசியால் !

இதோ மீண்டும் வந்தது 
எனக்கு அந்த தருணம்!
பொய்த்து போகவில்லை 
உன் வார்த்தை
ஆனால், 
உன் உடல் பொய்த்து போனாதே !
மெய்யான உன் ஆன்மா 
கானுகிறதோ என்னை,

எங்கிருக்கிறாய்,
என் தாயுமானவரே ? ? ?

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

நிஜம்


என் இனத்தவர்களுக்கு
இருப்பிடம் தான் எது ?

ஈர உள்ளங்களுக்கு,
நெஞ்சம் இல்லை ,
தாக உள்ளங்களுக்கு உதவ !

என் வலிகள் ,
என் கவிதையின் வரிகள்!

நாளை நம் கையில் !

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணங்குகிறேன் !

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
பாரத நாடு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!


இருப்பவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கே
அதன் வலி தெரியும்
வேதனை புரியும்.


செந்நீர் சிந்திய
சகோதரர்கள்,
தம் வீரத்தை
வித்தாக்கியே போனார்கள் !


தமிழீழம்  வேண்டி
தீவிரமாய் யாசிக்கும்,
தமிழை நேசிக்கும் - தாய்
தமிழையே சுவாசிக்கும்
தவ புதல்வர்களுக்கு,
தமிழின தேஜசிற்கு ,
வெண் புறாவாம் நம்
தமிழ் தாய் பறவையின்
இறகில் ஓர் சிறகாய்
துணை நிற்போம் நாம்!


இருப்பவர்களுக்கு இல்லை
இல்லாதவர்களுக்கே
அதன் வலி தெரியும்
வேதனை புரியும்.

செவ்வாய், 26 மார்ச், 2013

என் அவர்களுக்காக ! !அவனுக்கு மூன்று வயது,
குள்ளி எழுந்துக்கோ . .
ம் ம் ம் , இதோ . . . !

நான்காம் வயதில்,
என்னோட பென்சில் ம்மா ,
அங்க இருக்கு செல்லம்!

மா என் கிளாஸ் மிஸ் திட்டிங் .
சரி விடு டா குள்ளி,
மிஸ் அ  அம்மா திரும்பி திட்டிங் !

ம்மா ஹோம்  வொர்க் சொல்லிதா
வரேன் டா குள்ளி !

ம்மா இந்த ஸ்டைல் pant  வேணும்
சரி இரு வாங்கி தரேன்!

போ அப்பா உனக்கு ஸ்டைல்  தெரில
பரவல டா இது நன்னா இருக்கு போட்டுக்கோ !


அப்பா பீஸ் கட்டனும்!
நாளைக்கு பேங்க் ல போட்டுடறேன் குள்ளி!

வருடங்கள் கழிந்து,
அம்மா நான் இன்னிக்கு டாக்டர்!
அப்பா மிஸ் சொன்னங்க நான் "பொறுமையா" patients  பாக்கறேன் ன்னு
என் கிட்ட வந்த op எல்லாரும் சந்தோஷமா போனாங்க !


"அவர்களிடம்" நான் சொன்னேன், "வாழ்த்துக்கள் அம்மா" "வென்று விட்டீர் அப்பா " என்று !

பி கு : குள்ளி என் தம்பியின் செல்ல பெயர் ! :)

திங்கள், 4 பிப்ரவரி, 2013

இசை அரசி . . .பனித்துளி கரைந்தால் மழையா ?
மழை முடிந்தால் பனித்துளியா?
இதுவே திருமதி நித்யஸ்ரீக்கும்
இசைக்கும் இடையிலான பந்தம் !இசை அரசியே,
உன் சோகத்தால்
இசையெனும் மொழிமறந்து,
மௌனிப்பாய் என அஞ்சியநெஞ்சங்களில் ,
உன் குரல் கொண்டு தேன் வார்த்திட்டாய் !
கழுத்து நிமிர்ந்த தமிழின குயிலே,
கானத்தால் உலா வரும் குரலே,
உன் இனம் என்றும் போற்றிடும் உன்னை. !
உன் குரல் தேடி 
உள்ளது இசை தமிழ் வாடி !
வரவேற்போம் அன்று போல்
என்றும் உனை !

நல்வரவு !

செவ்வாய், 29 ஜனவரி, 2013

கோபம்

காற்றின் கோபம் - புயல்
கடலின் கோபம் - சுனாமி
நெருப்பின் கோபம்-காட்டுத்தீ
வானின் கோபம் - நீள் மழை
நிலத்தின் கோபம் - பூகம்பம்
ஆணின் கோபம் - பிளவு ,
பெண்ணே,
நீ மட்டும் ஏன் மௌனமாய் ?

புரட்டி பாருங்கள் .

ஆண் ஆதிக்க சமுதாயத்தின் 
தவசீலர்களே,
உங்களில் ஒருவருமா இல்லை,
இதிகாசத்தை படிக்க?
புரட்டி பாருங்கள்,
காந்தியுடன் கோட்சே இருப்பதை !

நீந்தி செல்கிறாயோ ? ? ?

உதிர்ந்த இலைகளின் இடைவெளியில்
நிழலாகிறது உந்தன் நினைவுகள் !
பூமியை ஒட்டிநிற்கும் கால்களும்
செயலிழந்தன,
நீ ஓய்ந்த செய்தியினை கேட்டு !
தோற்று போன பின்பு தான்
புரிகிறது பிழைகளின் ஆழம் !
கடலினில் கரைந்து
மண் துகள்களில் அமர்கிறது
உந்தன் ஞாபகங்கள்!
என்றோ கட்டுபடுத்திய பாசம் இன்று
காலத்திலும் ஞானபெரிதாய் !
வேறு வழியில்லை,
ஏக்கம் கலந்த வெப்ப மூச்சை
உனக்கு துணை அனுப்பி,
கண்ணீரில் கரைகிறோம் நாங்கள் . . .!
நீந்தி செல்கிறாயோ ? ? ?

வெள்ளி, 18 ஜனவரி, 2013

வெண்மைக்கு ஓர் இரங்கட்பா . . .


எந்த மனிதன் மீது 
நம் நம்பிக்கை வித்தாகிறதோ 
அவர் கடவுளாம் . . .
ஆதலினால் அம்மனிதர்கள் கடவுளாகின்றனரோ 
வெகு விரைவில் ? ? 

தலைமகன்  என்று
அறிந்தனவே யாம் உம்மை,
தலை வணங்கி 
போற்றினார் பலர் !
தேனியாய் உழைத்த நீ,
என்றும் உலகம் உணரும் மானீ  !

மண்ணுலகம் வாழ்த்திடவே, 
இவ்விடத்தி உன் புகழ் இருத்தி,
மண்ணில் நீ உமதுடல் நீங்கி ,
விண்ணுலகம் சென்றாயோ,
மேலுலகிளிருந்து எம்மை காண?
மக்கள் கூட்டம் திரள,
மேட்டுபாலயமே, 
தனது மருத்துவ தலைவனின்,
தனதுயிர் காத்த தவ புதல்வனின் 
பளிங்கு முகம் இறுதியாய் காண,
இல்லத்தில் சூழ்ந்ததோ?
உன்னால் காக்கப்பட்ட 
உயிர்கள் அனைத்தும்
கண்விழித்து நோக்கையிலே,
ஹையோ ,
நீ கண்மூடி உறங்குவதேனோ ?

விழித்தெழுந்து செவி சாய்பாயோ ,
பெருங்குரலெடுத்து கதறும் மக்களுக்கு?
வெண்ணிற  மேல் அங்கி இட்ட 
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால் 
மூடப்பட்ட சடலமாய் . . .
அகன்ற விழிதனில் அனைவரையும் கண்டாயாம் ,
விழி வழி கூறிய செய்திதனை 
மொழி பெயர்துணர முயல்கிறோம் நாங்கள்,
நிரந்தர பிரிவை தான் பறை சாற்றினாயோ?
கண்ணீரால் கழுவுகிறோம் நாங்கள்,
அய்யனே உன் பெயரேன்றேன்றும் 
வாழ்ந்திடவே இவ்வையகத்தில் . . .

கவிதாஞ்சலி - மண்ணுலகில் இன்னுயிர் நீத்து விண்ணுலகில் வாழ்ந்திட சென்றிருக்கும் என் தாய் மாமா Dr .N .S .Harihara Iyer அவர்களுக்கு 

வியாழன், 17 ஜனவரி, 2013

என் பொங்கல் !

கள்ளி காட்டு மூலையிலே
கலைநய கோவில் ஒன்றும்,
பள்ளி தந்த கல்வியை போல்,
சொற்கள் கொண்டு,
கோமாதா பாலினை இட்டு,
காவியங்கள் பல கொண்டு,
கணக்காய் பாகெடுத்து ,
நெய்தல் நில பூமகளின்,
நெய் சேர்த்து,
பாலைவன பகலவனின்
தீ சுடர் இட்டு,
வாழ்கை நெறியாம் வள்ளுவத்தை,
வாழை இலையில் இட,
கூடிய மக்கள் அனைவரும்,
பண்ணிசைத்து நின்றிருக்க ,
எந்தன் தமிழ் அன்னையே ,
கவி பொங்கள் நாம் இட்டோம்,
சுவைக்க ஓடி வாரும் அம்மா !

நீயும் நெற்கதிரும்

ஏர் பூட்டி
விதை விதைத்து,
தண்ணீர் பாய்ச்சி ,
பின்பு வந்தது முட்டி மோதி,
நாத்து என்றார்கள் !
பிறந்த இடம் விட்டு,
மகிழ்ச்சி பொங்க
வேறு இடம் நட்டார்கள் அதை !
நீர் இன்றி உரம் இன்றி,
ஒத்து வாழ இடம் இன்றி,
திக்கி தெனரிய நாத்து ,
செழிப்போடு வளமாய்,
தங்க நிரமேந்தியது !
ஏய் பெண்ணே,
நீயும் நெற்கதிரும் ஒன்றோ ?

மௌன கவிதை

மனதின் திறப்பு வாசலான,
என் பேனா மூடியை
திறவமாட்டேன்
இன்றே நான் எழுதும்
இறுதி கவிதை என்றேன்
வெகு நாட்கள் முன்பு,
ஓர் வெள்ளை காகிதம் கையிலேந்தி.
இன்னும் அந்த காகிதம்
மௌன கவிதை வாசிகிறது,
 வெள்ளையாகவே . . . . 

என் ஈர மழை சாரல் !

வெள்ளை தாளை வந்தேன் நான் ,
விழுந்தது என் மனதில்,
உலகின் பல அச்சுகள் !
என்னுள் நான் எழுதிய
பிழையான பக்கங்களை,
அழித்து அமைக்க வந்தாயோ,
என் சகியே,
நீயே என் ஈர மழை சாரல் !