எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 4 பிப்ரவரி, 2013
இசை அரசி . . .
பனித்துளி கரைந்தால் மழையா ? மழை முடிந்தால் பனித்துளியா? இதுவே திருமதி நித்யஸ்ரீக்கும் இசைக்கும் இடையிலான பந்தம் !
இசை அரசியே, உன் சோகத்தால் இசையெனும் மொழிமறந்து, மௌனிப்பாய் என அஞ்சியநெஞ்சங்களில் , உன் குரல் கொண்டு தேன் வார்த்திட்டாய் !
கழுத்து நிமிர்ந்த தமிழின குயிலே, கானத்தால் உலா வரும் குரலே, உன் இனம் என்றும் போற்றிடும் உன்னை. !
உன் குரல் தேடி
உள்ளது இசை தமிழ் வாடி ! வரவேற்போம் அன்று போல் என்றும் உனை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக