வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

இது அன்பின் காலம் . . .

வானம் அழகாய் மாறிற்று - விண்மீன்களும் 
வர்ண ஜாலமாய் ஒளிர்ந்தன ,
நிலவும் குளிர்ந்து,
பஷு பட்சிகள் அன்பாய் சிரித்தன . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

எங்கோ பிறந்தோம்,
எங்கோ வளர்ந்தோம்,
எனிலும்,
நேசம் கொட்டும் சகோதர சகோதரிகளாய் . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

உனக்கென நானும்,
எனக்கென நீயும்,
பாசம் கொண்டு வாழ்வோம் 
இப்புவிதனிலே, புனிதமாய் . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

என்றுமே உனக்காய் 
பரம்பொருளிடம் என் வேண்டுதல்,
சகோதரனே நீ இன்புற்று இருக்க,
இதமாய் எழுதுகிறேன் உனக்காக . . .
இது அன்பின் காலம்,
சகோதரத்துவம் பரிமாறும் நேரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக