செவ்வாய், 25 மே, 2010

நான் ஓர் அகதி!

சொப்பனங்கள் களைந்து
கண்கள் விழித்தால்,
அங்கோ கிடந்தன
சடலங்கள் சிதைந்து
வேதங்கள் அழிந்து,
செந்நீர் மட்டுமே படிந்து,
உயிரை இழந்து?!
மிதம் எஞ்சிய நானோ,
உயிரை மட்டுமேந்தி,
உணர்வையும் தொலைத்து
உள்ளேன் ஒரு அகதியாய்!
நான் கேட்பதெல்லாம்,
ஒரு குடை நிழல்,
முக்கால்  நுரையீரல் காற்று,
அரை வயிற்று  உணவு,
கால்கள் ஊன ஓர் நிலம்,
ரத்தம் கேட்காத நிலம்!

எந்தன் மண்ணை
அடுத்தவர் ஆள்வது சரியா?
இதை தட்டி கேட்டால்,
உயிர் பலித்தான் முறையா??
என் நாவிலோ,
செந்தமிழ் தேன் மழை;
அதன் விளைவோ .,
என் தாய் மண்ணில்,
வெடிகுண்டுகளின் மழை.
எழுதுங்கள் என் கல்லறையில்,
"இவள் அழிவிற்கு;
மொழி பற்றே - தாய்
மொழி பற்றே காரணம்"
மலரின் மேன்மையை -எங்கள்
பிணவறையில் வைக்கும்
மலரின் மென்மையில்
ஒரு பாதி,
ஒரு பாதியை
என் ஈழ மக்களிடம் காட்டி இருந்தால்??
ஒரு வேளை,
ஒரு வேளை,
இத்துனை சிறார்கள்
அனாதையாகி இருக்க மாட்டனரோ???
ஆம்!
நான் ஓர் அகதி!

அனைத்தும் இழந்தவள்!
உயிருடையும் சப்தத்தை மட்டுமே
செவிதனில் சுமப்பவள்!
சிதைந்த சிந்தனைகளை
சிரிதேழுப்ப முயற்சிப்பவள்!
உயிர் கலை  கற்று,
உயிர் களை எடுக்க,
புதிதோர் உலகம் படைக்க,
துடிக்கும் ஓர் அபலை அகதி!
ஆம்!
நான் ஓர் அகதி!

1 கருத்து: