திங்கள், 26 டிசம்பர், 2011

கிராமத்து குயில் கூவுது.

காத்ததிச்சா
பறக்குற சருகாட்டம்,
உன் நெப்புல கரையுது என் பாதி உசுரு.
உசுரோட சேந்து
நானும் கரையுறேன் உனக்காக.
மாமா உனக்காக.
பேசி பேசி மறுகறேன்
நீ வரபோற பாதைய
பாத்து பாத்து ஏங்குறேன்.
உங்கூட இருந்த நிமிஷம்
நெனச்சு நெனச்சு கெறங்குறேன்.
என் உசுர நீ வாங்காம 
உடனே வந்துடு என்னாண்ட . . .கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக