நள்ளிரவில்
குளிர் நிலவின் கீழ்
அலைபாயும் என் ஆன்மாவை
தடுக்கும்
தீக்கனி தொடுதல்களே
உன் நினைவுகள்...
எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 17 செப்டம்பர், 2025
அமைதியே காதலாகி..
நீ எங்கோ
காற்றிடம் கிசுகிசுக்கிறேன்,
மேகத்தின் திறைக்கிழித்து
உனை அடைய..!
உன் ஆன்மாவின் சுவாசம்
என் நுரையீரல் மடிப்பை
நீவுகின்றது..
ஒவ்வொரு இரவும்
நட்சத்திரங்கள் உனக்காக
பதிலளிக்கின்றன..
நான்
நிழல்களில்
நடக்கிறேன்,
நீ எங்கோ ..
காலம் அன்பின் முன்
தலைவணங்கும் இடத்தில்,
ஒளியாய் நிற்கின்றாய்... ❤❤
வியாழன், 4 செப்டம்பர், 2025
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
முதல் எழுத்தை கற்ற நாள்
கையில் பேனா கொடுத்தீர்,
மனதில் ஒளியேற்றினீர்...
பிழைகள்,
பேத்தல்கள்,
தடுமாற்றங்கள்,
அனைத்தையும் பொறுத்து
சொற்களால் செதுக்கினீர்
எம்மை ஒரு நல்மனிதனாக...
தாயக அணைத்தீர்,
தந்தையாக வழி நடத்தினீர் ,
தோழன் போல தோள்நின்றீர்,
உலகம் என் முன் திறந்த போது,
நத்தைச் சிப்பியில் அடைக்கப்பட்டிருந்த
அடர் கனவுகளை,
உடைந்த என் கனவுகளை ,
திரும்ப ஒட்டி
நிஜமாக்கி நகர்ந்தீர்...
ஒவ்வொரு பாடத்திலும்
வார்த்தைகளோடு,
சிந்தனைக்கு சுடர் புகட்டி,
மனசாட்சியையும் விதைத்தீர்.
அறிவை மட்டும் அல்ல,
உணர்ச்சியையும் கற்றுக்கொடுத்தீர்..!
காலம் கடந்து
நான் முன்னேறுகையில்,
நிழலாய் நின்று உணர்த்திணீர்,
பண்பினை...
என் வெற்றியின் ஒவ்வொரு பக்கத்திலும்
உந்தன் கையொப்பமே...
ஆசிரியர் தினம் ஒரு நாளே,
ஆனால் உந்தன் ஆசிகள்,
எமக்கு
எந்நாளுமே!!
நான் வணங்குவது
உந்தன் அறிவை மட்டுமல்ல,
உந்தன் அன்பையும்,
அர்ப்பணிப்பையும் சேர்த்து தான்...
அன்பு வணக்கங்கள்...
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் !!!
நன்றியுடன்,