புதன், 17 செப்டம்பர், 2014

நீ தான், நீயே தான் !

பறவையாய் தங்கிடுவேன்
பறந்து விரிந்த உன்னுள்,
கம்பளம் கேட்க எண்ணம் இல்லை,
நீ என்னை அணைக்கையில்
உன் மார்போடு
நீ என்னை அணைக்கையில் ! ! !

துயர் கொண்ட நெஞ்சம் அதை
தூய நேசத்துடன் கொஞ்சும்
தருணம் கண்டேன்
நீ தரும் முத்தத்தில்
என் நெற்றியில்
நீ தரும் முத்தத்தில் ! ! !

மனதின் அடிவாரத்தில் ஆரவாரம்
மெது மெதுவாய் அடங்கும்
அமைதியாய் கண்கள் உறங்கும்
உன் ஆராரோ கேட்கையில்
நெஞ்சின் பௌர்ணமி என
உன் ஆராரோ கேட்கையில் ! ! !

நீ
என் பிரபஞ்சத்தின் நாயகன்

நீ
நேசத்தின் தாயகம்

நீ
என் ஆரோகணம்

நீ தான்
நீயே தான்

இசை . . !

1 கருத்து: