புதன், 12 செப்டம்பர், 2012

மனதில் உறுதி வேண்டும் . . . . .!

பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்கிறோமா?
 இரண்டாம் பட்சமானது இப்போது!
பிறக்கும் புத்தாண்டுக்கு,
 உண்டு ஒரு பேரு !
சுகாதாரம் பேணி காக்கும் ஆண்டு,
கல்வி போதித்தல் ஆண்டு,
அறிவியல் ஆண்டு,
அவர் ஆண்டு,
இவர் ஆண்டு !
ஆண்டுக்கு ஒரு உறுதி மொழி !
வறுமை போக்கும் ஆண்டாம் - அதில்
 பட்டினியாய் செத்தவர்கள் ஏராளம் !
அறிவியல் ஆண்டாம்  - அதில்
பள்ளிகனுப்பாது தொழில் சாலைக்கு
அனுப்பினர்  பச்சிளம் குழந்தைகளை !
மனதில் உறுதி வேண்டும்
என்றான் பட்டு கவி பாரதி!

உறுதி  மொழியின் உறுதி
குருதியிலும் உறையவில்லை,
 உரைக்கவில்லை!
எங்கு செல்கிறோம் நாம்?
எங்கு செல்வோம் நாம்?2 கருத்துகள்:

  1. ஊருக்கு ஒரு முகம், சுயநலமாய் இன்னொரு முகம் என மனிதன் வாழும்வரை ஆண்டுக்கு ஒரு பேரு நிச்சயம்..
    ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை எனும் எத்தர்கள் வாழும் வரை உறுதி மொழிகள் குருதியில் நிச்சயம் உறையாது...

    பதிலளிநீக்கு
  2. இந்த நிலைமை மாறினால் நாம் நல்லா தான் இருப்போம் . . .

    பதிலளிநீக்கு