வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஹைக்கூ

மரணத்திற்கு பின்பாவது கமழவேண்டும்
காற்றின் மென்மையோடு..
ஊதுபத்தியை போல்...

ஹைக்கூ

அனைத்தும் இழந்து
கிழிந்த பக்கங்களாய்,
வேசியின் வாழ்வு.!

புதன், 2 பிப்ரவரி, 2011

காதல் காதல் தான்..!

உன்னால் நான் நீர் சிந்தினாலும்,
அதை கண்டு நீ சுகிதாலும்,
கனவாய் நிஜங்கள் தொலைந்தாலும்,
நிஜங்களின் நினைவுலகில் வாழ்ந்தாலும்,
நினைத்து நினைத்து மரித்தாலும்,
வெறுப்புகள் அனைத்தும் சகிதாலும்,

காதல் காதல் தான்!
அன்றும்
இன்றும்
என்றும்
காதல் காதல் தான்..!

தோற்றும் வென்ற நேசமோ?

அவனும் நேசித்தானோ என்னை?
அறியாது விழித்தேன்.!
நீர்த்திரை இட்ட கண்களோடு
என் மண அழைப்பிதழை
அவன் பெற்ற போது..........
மரித்த என் காதலே
நீ தோற்தாயா??
இல்லை வென்றாயா?

திங்கள், 17 ஜனவரி, 2011

உணர்வுகள் உனதாய்...

கண்களில் நீர் தங்குவதில்லை
ஆனாலும் அழுகின்றன அவை.
உயிர் ஒன்று கலங்கி கரைகிறது,
உருகிய நெஞ்சத்துக்கு
பதில் சொல்ல ஆளில்லை...

உணர்வுகள் தேக்கி
உள்ளத்தால் வெந்து
நலிந்து கிடக்கும் ஓர் ஜீவனுக்கு ,
வழிதடம் ஏதும் இல்லையோ??

வெள்ளி, 31 டிசம்பர், 2010

மாறும் காலம்..

சம்பாத்தியம்,
காலமின்மை,
வேலை பளு,
உத்தியோக அலைச்சல்,
இப்படி பல காரணங்கள் ,
சிசுக்களை கிரேச்சே - இல் விட..,

பின்போர் நாளில்,
இவை அமையும்
நாம் முதியோர் இல்லம்
சென்றடைய..
என அறியா பெற்றோர்கள்..!

பாவம்..!