செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சத்தமின்றி யுத்தம்


அலை பேசியில்
அலை அலையாய் அன்பளிப்பு அளிக்க,
ஐயோ..!
அது உன் முத்தங்களை வாங்கி,
வெறும் சத்தங்களாகவே,
ஆம்,
வெறும் சத்தங்களாகவே உனக்களிக்க,
மொத்தமாய் உனக்காக தர,
ஓர் யுத்தம் செய்யவே வேண்டும் நான்!
சத்தம்ன்றி ஓர் யுத்தம்...!
சத்தமின்றி ஓர் முத்தம்!

உயிர் சொர்க்கம்

சாகவும் தயார் நான்!
அனால்,
உன் மார்பில் சாய்ந்தபடி,
உன் குரல் செவிதனில் ஏந்தியபடி,
வேண்டும் ஓர் மரணம்!
ஏன் என்றால்,
உயிர்சொர்க்கம் எனக்கு மட்டும் தான்
சொந்தம்.

வியாழன், 3 ஜூன், 2010

பெயர் தேடும் வரிகள்!


எனது அறிவு பசிக்கு
நான் இட்ட
கருத்து தீனிகள்!
உலக சிறைக்குள்
அகப்பட்ட அகதியின்
அழகு அலப்பரைகள்!
யோசனை மோகத்தில்,
மனதிசுக்களில் கருத்தரித்து,
காகித உலகில் ஜனித்து,
மையால் வளர்ந்து
வதங்கி நிற்கும் பச்சிளம் சிறார்கள்!
உணர்சிகள் உள்ளடங்கிய உண்மைகள்;
உன்னத உண்மைகள் இல்ல
கசப்புத்தன்மை கொண்ட
சகிப்புத்தன்மை மிஞ்சும்
உண்மைகள்!!
சீதையை சிதைக்கும்
ராவண  சமுதாயத்தின்
கிழிக்க படவேண்டிய முகமூடிகள்;
தொலைக்கவேண்டிய முகவரிகள்!
தன்னம்பிக்கை தாங்கி
நிலம் தேடும் விதைகள்,
அவையே
எனது கவிதைகள்!

உடன் பிறவா உடன் பிறப்பிற்கு...


பெறாமல் பெற்றெடுத்த
மழலை செல்வங்களை
மனிதர்களாய் மாற்றிடும் உமக்கு,
உடன் பிறவா உறவை,
தமக்கை எனும் தாரகையாய்
சமுதாய சிற்பிக்கு ஒரு
சின்ன தங்கையாய்
தாங்க தோள் கேட்க்கும்
துரித தமக்கையாய்
இனிதாய் இம்சித்து
ரசிக்கும் இளையாளை 
எனை ஏற்பாயா??

செவ்வாய், 25 மே, 2010

ஹைக்கூ...



யாரை வரவேற்க
இந்த வளைவு நடனம்?
காற்றசைவில் தென்னை மரம்...

குளிர்நாயகனே...


சிந்தை சிதறடித்து
நின்தைகளை முறியடித்து,
நித்தம் எனை காண
நீ வருவாய் என்
காத்திருந்தேன் நானும்
சாகசப் பறவையாய்;
பூவிழிதனிலே எதிர்பார்ப்பை தேக்கியபடி..
ஒரு நாள்,
முழு மனதுடன்,
எனது மனிதனாய்..!
ஒரு நாள்,
முழு இருட்டாய்..
என்னை விட்டு தூரமாய்!!
மித நாட்களிலே
தோன்றி தேய்ந்து..
எந்தன் குளிர் நாயகனே!
ஏனடா இந்த கண் கட்டி விளையாட்டு??
முகம் புதைய தலையணை அணைப்பில்,
மனம் சிதைய..,
என்சிந்தயும் கலங்குதடா.....