புதன், 26 மார்ச், 2014

ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . .

வாழையடி வாழையாய்,
கவிஞர்களின் வரிகளிளேனும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள்
முதிர் கன்னியவள்  . . .

கூடுகளோடு மரங்களை தேடி
அலையும் என் போன்ற
ஆண் பறவைகள்,
சிறகொடிக்கபடுங்கின்றன. . .

முதிர் காளைகள் என  எங்களுக்கும்
 வைக்கலாமே ஓர் முத்திரையை,
கிழிக்குமே அது அடாவடி என
புகழப்படும் எங்கள் முகத்திரையை . . .

பேரழகியை தான்
தேடுகிறேன் நான்,
தாயாக சேயாக,
என் தாரமாக, எனக்காக . . !

பெண்ணிற்கு பேரழகு 
மதிப்பதில் பங்கதிகம்,
சிந்தும் வெட்கத்தில்
இன்னும் கொஞ்சம் . .!

நளினமும் நாணமும்
மென்மையும் மேன்மையும்
அளவான கலவையில்,
பண்பை பறை சாற்றும். . .

பெண்னொருத்தி இருக்கின்றாலெனில்
எனை ஆளும் உரிமை மட்டுமல்ல
நேசத்தோடு சுவாசமும் தருவேன்,
என் அவள் ஜீவிப்பதர்க்கு . . . !

பாரதியே,
நீ கண்ட புதுமை பெண்களில்
என்றேனும் கண்டாயோ,
நான் தேடும் பேரழகியை . . ?

என் விழி சிந்தும் நீர்
கரை புரண்டே வழிந்தோடும்,
ஆங்காங்கே பெற்றோரின்
கண்ணீர் கால்வாயாய் சேர்ந்தோடும் . . !
 
கவிதைகளில் மட்டுமாவது
சிந்துகிறேன் என் கண்ணீரை,
துடைக்க விரல்கள் ஏதும் இல்லை,
ஆதலால் அனுமதி தாருங்கள் . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக