புதன், 26 மார்ச், 2014

ருபியானோடு சனீரா . .

பாரிஸ் நகரில் பரிவாய் பார்த்தவள்
சைதையில் சற்றே  சேட்டையாய்  சிரித்தவன்,
கொல்லத்தில் கொள்ளை அழகோடு,
நாணி சிவக்கிறார்கள் மணகோலத்தில் நம் முன்னே !

விழிகளில்  கண்ட கனவாய் -  காதல்,
விழித்த உடன் நனவாய், திருமணத்தில்.
மொட்டுக்களை ரசித்த மனதிற்கு சந்தோஷ புதுமலராய்,
நாளைய கனவுகளில் நம்பிக்கை காண இருமனம் இணைகிறது!
திங்களின் எழில் கொண்ட தேவதையாம் இவள்,
ஆதவன் ஒளிகொண்ட இசை வேந்தனாம் இவன்
இருவர் கரங்கொண்டு இல்லறத்தேர் நல்லறத்தோடு
இனிதாய் இழுத்திடவே தொடங்குமோர்  பயணம்!

ஆன்றோர் நாள் குறித்து உமை சேர்க்க,
சொந்தங்கள் கூடிவந்து பெருமை கூட்ட  
தேவர்கள் ஆயிரம் பூச்சொரிய 
ஓருயிராய், ஆருயிராய், இணையாய்  இருவரும் !
விண்மீண்கள் கண்ணசைவில் புதுகவிதை பாடிடவே,
இசையோடு நாதம் சேர்ந்து தேனமுது உதித்திடவே,
காற்றோடு மேகங்கள் இன்ப  மழைச்சாரல் தூவிடவே,
ருபியானோடு சனீரா காதல் பாட்டிசைத்திடவே !

இசையன்னை மடியில் இளஞ்சிங்கமாய் உறுமுமிவனை
தன்மடி தாங்கும் அன்னையாய் இவள் இருக்க,
பிரெஞ்சு நாட்டின் அழகு தேவதையாய் இருப்பவளை,
தன்நெஞ்சில் சுகமாய் தாங்கும் தோழனாய் இவன்!
இவள்பாதியிவன்பாதி என்றுறைக்கும் மணவாழ்வில் 
இல்லறத்தின் இலக்கணமாய் ஜெயமளித்துஅன்போடு,
மனம் நிறைக்கும் மழலைச் செல்வங்களோடும் 

அறிவோடும் அன்போடும்ஆண்டாண்டாய் நிறைவாய் வாழியவே !

என்  அக்காவின் திருமணத்திற்காக :-) :-) :-)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக