புதன், 26 மார்ச், 2014

மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .

காதல் அதில் பிரிந்தால்
பிரிந்தவளுக்கு ஒரு வலி இல்லை , 
பிரிந்தவளுக்கு ஒவ்வொன்றுமே வலி தான் . . .

நேற்று வரை என் அவன் இப்படி இல்லையே,
இன்றோ அவன் அப்படி இல்லை
மாற்றம் நேர்ந்தது அவனிடமா 
இல்லை என்னிடமா?
என் பார்வையிடமா?

இரு மனமாய் இருந்த வரை 
இது இல்லையே 
திருமண முதல் நாளில்
காதல் இல்லையே !

காதலெனில் அது 
கல்யாணத்தில் முடியுமென 
கேள்வி கொண்டேன்.
ஆனால் காதலே 
கல்யாணத்தின் பின் 
முடிந்து போகும் என கற்றும் கொண்டேன் !

வலிகளை விழிகள் சுமக்கத் தவறி
அணை கொண்ட இமைகள் உடைந்து போக,
கொட்டும் அருவியில் உலகம் தடுமாற
முடிவெடுத்தேன் அவனை கடந்து போக!

என்னுள் விதை கொண்ட அவனது உயிர்,
அவன் விதைத்த காதலை தர,
அவன் காதலை நினைத்து கரையும் தருணம்,
மனமே, உன் கதவின் தாழ் திறவாய். . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக