புதன், 17 டிசம்பர், 2014

‪பனியும் பெண் பாவையும் #2‬

பனி தங்கிய இமை 
தேன் துளி கொண்ட இதழ்
பிரித்த பாவையின் உள்ளம் 
தேடியது அவள் கண்ணனை,
அவள் - தேவகியோ மீராவோ . . !

செவ்வாய், 16 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #1

பகல் முழுக்க புன்னகைத்து 
பாதி இரவினில் விக்கியழுத 
பெண் பாவையை மறைந்து 
இருளின் இடுக்கில் எட்டிப்பார்த்து 
நிலவு சிந்திய கண்ணீர்,
காலை பூவிதழ் மேனியதனில் 
பனித்துளியாய்...

திங்கள், 15 டிசம்பர், 2014

வாழ்க்கை ஓர் தொடர் கதை ! #1

மழை பெய்ந்து ஓய்ந்ததும்,
மேக காதலனுடன் 
மோகம் கொண்ட கதிரவன்,
தன் தாபம் தீர்த்த பின்னரே,
நிலம் கொண்ட மழை குடித்து,
தாகம் தீர்த்தானோ ?
வாழ்க்கை 
ஓர் தொடர் கதை !

செவ்வாய், 9 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #10

ஆங்காலம் தேடி
வறண்ட தொண்டையோடு
இப்புவிதனில் நான்  நடக்கையிலே,
அழகிய புதையலென
உன்னை கண்டெடுத்து,    
ரத்தினமாய்
ஜொலிக்கும் உன்னை,
என் விரலில் இட்டு,
அவ்விரல் நீட்டி
வான் பதிந்த
விண்மீன்களை கொண்டு,
சுருங்கும் உன் விழி நீவி,
உன் அருகில்
என்றென்றும் உன் அருகில்,
நான் நின்று
அடைகாக்க ஆசை தான் !
நீ,
என் இரத்தின புதையல்!
​ --- சுபம் ---

இரத்தின புதையல் #9

அப்பொழுது பூத்த
புஷ்பத்தில் ராகம் இசைக்கும்
வண்டை போல்,
என்றும் உன் கீதம்
என் செவி தீண்டும்!
நீ,
என் இரத்தின புதையல்!

இரத்தின புதையல் #8

பசிக்கும் என் மனதிற்கு
புசிக்க தந்தாய்  விருந்து !
உன் பவழ இதழ் விரித்து,
நீ சிந்திய வார்த்தைகளும் 
தந்த முத்தங்களும் !
நீ,
என் இரத்தின புதையல் !